சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் "இப்படி" சொல்கிறார்.. உதயநிதிக்கு "டிக்கெட்" கிடைச்சிடும் போல.. அடிச்சு சொல்லும் நம்மவர்கள்

உதயநிதிக்கு திமுகவில் சீட் தரப்படும் என்றே நம்பப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "பெண்களை அப்படி பேசிட்டு வர்றாரே உதயநிதி, அவரை ஸ்டாலின் கண்டித்தாரா?" என்று முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.. மற்றொரு பக்கம், உழைப்பவர்களுக்குதான் திமுகவில் சீட் தரப்படும் என்று அக்கட்சி தலைவர் சொல்லி உள்ள நிலையில், உதயநிதிக்கும் சீட் தருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உதயநிதி திமுகவில் பொறுப்புக்கு வந்ததில் இருந்து வேகத்துடன் செயல்பட்டு வருகிறார்.. அதேசமயம் குறுகிய காலத்தில் நிறைய சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

எதையாவது யோசிக்காமல் பேசிவிடுவது, கட்சியில் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கருத்து கூறுவது, வயது வித்தியாசம் பாராமல் மரியாதைக் குறைவாக விமர்சிப்பது, என எதிர்தரப்பின் நாலாபக்கமிருந்தும் உதயநிதி மீது புகார்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

 உதயநிதி

உதயநிதி

இதே கருத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிகூட தன்னுடைய பிரச்சாரத்தில் சொல்லி இருந்தார்.. "உதயநிதி ஸ்டாலின் எப்போது கட்சிக்கு வந்தார்? அவருக்கு பின்னாடியே திமுகவின் மூத்த தலைவர்கள் ஓடுகிறார்கள், கார் கதவை திறந்து விடுகிறார்கள்.. கூனி குறுகி வணக்கம் சொல்கிறார்கள்... தமிழக போலீசாரையே எச்சரிக்கிறார் உதயநிதி.

 காவல்துறை

காவல்துறை

திமுக ஆட்சிக்கு வரும் என்று மிரட்டுகிறார். ஆட்சியில் இல்லாத போதே இப்படி காவல் துறையை மிரட்டுகிறாரே, வந்தால்? திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும்.. பெண்கள் குறித்து அவதூறாக பேசுகிறாரே, இதுவரை உதயநிதியை ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த அளவுக்கு உதயநிதி மீது விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில்தான், ஸ்டாலின் ஒரு பேட்டி தந்திருந்தார்.

உதயநிதி

உதயநிதி

அதில், உதயநிதிக்கு சீட் தருவீர்களாக என்ற கேள்விக்கு, "உதயநிதி போகின்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பேராதரவு கிடைக்கிறது,.. திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை... நானே அப்படித்தான் வாய்ப்பினை பெற்றேன்" என்றார்.. ஸ்டாலின் இப்படி சொன்னாரே தவிர, உதயநிதிக்கு சீட் இல்லவே இல்லை என்று மறுக்கவில்லை. இதைதான் நம் வாசகர்களிடம் ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்புடன், கேள்வியாக கேட்டிருந்தோம்..

வாக்குகள்

வாக்குகள்

"உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட முக ஸ்டாலின் டிக்கெட் தருவாரா? மாட்டாரா?" என்று கேட்டோம்.. அதற்கு வாசகர்கள் "தருவார்" என்று 73.55 சதவீதம் பேர் திரண்டு வந்து சொல்லி விட்டனர்.. "தர மாட்டார்" என்று வெறும் 26.45 சதவீதம் பேர்தான் சொல்லி உள்ளனர். ஆக, உதயநிதிக்கு திமுகவில் டிக்கெட் தரப்படும் என்பதில் எந்தவித டவுட்டும் பொதுமக்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.. அதேசமயம் முதல்வர் எழுப்பி உள்ள கேள்விக்கும், எதிர்தரப்பில் தொடர்ந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் திமுக தரப்பில் இருந்து பதில்கிடைக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்!

English summary
Will MK Stalin give Udhayanidhi Stalin a chance to contest the elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X