ஸ்டாலினா இப்படி?.. "அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க".. வெலவெலத்த "தலை"கள்.. பரபரத்த ரிப்போர்ட்
சென்னை: திமுகவில் 2 முக்கிய செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. இதனால் தமிழக அரசியல் களமே பரபரப்பாக காணப்படுகிறது.
திமுக என்ன செய்தாலும் அதை விமர்சிக்க அதிமுக காத்திருக்கிறதோ இல்லையோ, பாஜக எந்நேரமும் ரெடியாகவே உள்ளது.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
கண்டனம், விமர்சனங்கள் மட்டுமல்லாமல், போராட்டம், முற்றுகை என அடுத்த லெவலுக்கும் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது தமிழக பாஜக.

திணறல் திமுக
இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது, மற்றும் சென்னையில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலைகள் இரண்டுமே திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டன.. எடப்பாடி பழனிசாமி ஒருநாளைக்கு ஒரு அறிக்கையாவது விடுத்து, திமுகவை திணறடித்து வருகிறார்.. திமுகவை டேமேஜ் செய்வதையே முக்கிய குறிக்கோளாக பாஜகவும் களமிறங்கி உள்ளது.

சீனியர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான் திமுகவுக்குள்ளேயே சர்ச்சைகள் கிளம்பியபடியே உள்ளன.. கவுன்சிலர்களால் சர்ச்சைகள், மா.செ.க்களால் பிரச்சனை, என ஆரம்பித்து திமுக சீனியர்களாலேயே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் வந்துள்ளது.. திமுக ஆட்சி ஆரம்பித்த சில மாதங்களில், இப்படித்தான் சீனியர் அமைச்சர்கள் மீது புகார்களும் வந்தன.. அளவுக்கு அதிகமான பொறுமையை கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றம் என்று தகவல்கள் உறுதியாகி கொண்டிருக்கிறது.

வார்டுகள்
இப்படிப்பட்ட நேரத்தில்தான், மீண்டும் ஒரு முறை சவுக்கை எடுத்துள்ளார் முதல்வர்.. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கின்றன.. இதில் சில பெரிய வார்டுகளும் இருந்தன.. இவைகளை இரண்டாக பிரித்து, மொத்தம் 300 வார்டுகளை உருவாக்கியது திமுக.. அமைப்பு ரீதியாகவும் 300 வட்டச் செயலாளர்களை நியமித்திருந்தது.. இப்போது என்னவென்றால், அந்த 300 வார்டுகளை மறுபடியும் 200 வார்டுகளாக்க தலைமை முடிவு செய்துள்ளதாம்.

மா.செ.க்கள்
அதுமட்டுமல்ல, அப்படி புதிதாக அமைக்கப்படவிருக்கும் 200 வார்டுகளுக்கும் முறைப்படி தேர்தலையும் நடத்தப்போகிறதாம்.. இறுதியில், அந்தந்த இடங்களுக்கு வட்டச் செயலாளர்களை நியமிக்க தலைமையே முடிவும் செய்திருக்கிறதாம்... இதைகேட்டுதான், வ.செ.க்கள் முதல் மா.செ.க்கள் வரை கொந்தளித்து போயிருக்கிறார்கள்.. பெரிய அளவில் ஏதாவது திமுக அதிரடி மாற்றங்களை செய்யும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள், இன்னும் 4 வருட ஆட்சி உள்ளது குஷியில் இருந்தவர்கள், வெலவெலத்து போயிருக்கிறார்களாம்.

வெலவெலத்த தலைகள்
மறுபடியும் முதல்ல இருந்தா? என்று அதிர்ந்து போயுள்ளனராம் அந்த வட்ட செயலாளர்கள்.. அப்படியே தேர்தல் வைத்தாலும், யார் மீண்டும் வெற்றி பெற்று வர போகிறார்களோ? என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. புதிதாக நபர்கள் வந்துவிட்டால், தாங்கள் என்னாவது என்றும்? மா.செ.க்களிடம் கேள்வி கேட்டு வருகிறார்களாம்.. இதனால், திமுக சென்னை மாசெக்கள் கையை பிசைந்து நிற்கிறார்களாம்.. இது ஒருபக்கம் என்றால், ஒட்டுமொத்த திமுக மாவட்ட செயலாளர்களுமே பீதியில் உறைந்துள்ளனர்.

ரிப்போர்ட்கள்
இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மா.செ.க்கள் கூட்டத்தில், பலர்மீது ரிப்போர்ட்கள் வந்துள்ளது.. அதையெல்லாம் பார்த்து கொந்தளித்துவிட்டாராம் முதல்வர்.. ஏற்கனவே பலமுறை வார்னிங் தந்தும், மீண்டும் மீண்டும் புகார்கள் வந்ததால், ஒழுங்கா இருங்க என்று ஸ்டாலின் அவர்களிடம் எச்சரித்துள்ளாராம்.. எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கான வேலையில் இறங்குங்க என்றும் உத்தரவிட்டுள்ளராம்.. இத்தனை நாளும் கரிசனம், கருணை, மன்னிப்பு என்ற ரீதியில் முதல்வர் நடந்து கொண்ட நிலையில், இன்று ஜெ.பாணி ரூட்டில் இறங்கியது கவனத்தை ஈர்த்து வருகிறது.. சில சமயங்களில் "இந்த ரூட்தான் சரி" என்கிறார்கள் அரசியல் நோக்கர்களும்..!