India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"திடுக்கிட்ட" ஸ்டாலின்.. அந்த ஒரு மேட்டரை கையில் எடுத்த பாஜக.. சீண்டிய சீனியர்கள்.. கலங்கும் கதர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர்களின் அடுத்தடுத்த சர்ச்சைகளால், 2 விதமான நெருக்கடிகளை திமுக அரசு எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திமுக என்ன செய்தாலும் அதை விமர்சிக்க அதிமுக காத்திருக்கிறதோ இல்லையோ, பாஜக எந்நேரமும் ரெடியாகவே உள்ளது.

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி.. 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி! குளிக்க சென்ற போது விபரீதம்கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி.. 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி! குளிக்க சென்ற போது விபரீதம்

கண்டனம், விமர்சனங்கள் மட்டுமல்லாமல், போராட்டம், முற்றுகை என அடுத்த லெவலுக்கும் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது தமிழக பாஜக.

தயவுதாட்சண்யம்

தயவுதாட்சண்யம்

ஆனாலும் ஒருசில அமைச்சர்கள் ஏதாவது பேசி பரபரப்பை கிளப்பிவிட்டு, சிக்கலில் சிக்கி கொள்ளும் நிமையும் வந்துவிடுகிறது.. இப்படி ஒரு பிரச்சனை கடந்த காலங்களிலேயே திமுக மீது இருந்ததால்தான், பதவியேற்றுக் கொண்ட அன்றே, அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்திருந்தார்.. யார் மீதாவது புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்தால், அவைகள் விசாரிக்கப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை பாயும் என்றார்.. தயவுதாட்சண்யம் பார்க்காமல், பதவி பறிக்கப்படும் என்றும் வார்னிங் தந்திருந்தார்.

 சீனியர்கள் - தலைவர்கள்

சீனியர்கள் - தலைவர்கள்

ஆனாலும், இந்த பேச்சு காத்தோடு போயாகிவிட்டது.. மூத்த அமைச்சர்களே இதை மீறினார்கள்.. ஆனாலும், முதல்வர் ஸ்டாலின், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் பொறுமையை காத்து வந்தார்.. நடுவில் சில காலம் ஓய்ந்திருந்த சர்ச்சைகள் மறுபடியும் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.. குறிப்பாக திமுக அரசு ஓராண்டு நிறைவு பெற்றதுமே, இதுபோன்ற புகார்கள் வர துவங்கின.. ''நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பவும் நல்லவர்கள்" என்று திமுக எம்எல்ஏக்களை, அமைச்சர் நேரு பேசிய பேச்சு கோட்டை வரை பறந்தது.

 டி.ஆர். பாலு

டி.ஆர். பாலு

ஆர்எஸ் பாரதியோ, "திமுகவின் தேர்தல் அறிக்கையை டிஆர் பாலு தான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம் தான் போய் கேட்க வேண்டும்.. இது தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியதும், முதல்வர் வரை பறந்தது... இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவை சீண்டுவதன் பேரில், மிகப்பெரிய தர்மசங்கடம் திமுகவுக்கு ஏற்பட்டு வருகிறதாம்.

 டிகேஎஸ் இளங்கோவன்

டிகேஎஸ் இளங்கோவன்

அதாவது, இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே என்று திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். "இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது.. மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் வளர்ந்த மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தி தாய்மொழியாக இல்லை... வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். இங்குதான் இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது" என்று பேசியிருக்கிறார்.

 தினேஷ் ஷர்மா

தினேஷ் ஷர்மா


ஏற்கனவே, அமைச்சர் பொன்முடி ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது, இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள்... ஆனால் தமிழகத்தில் இந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள்" என்றார்.. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. 'திமுக எப்போதும் ஜாதி வெறி கட்சியாகவே இருக்கும்... அதற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டார்.. பொன்முடி அன்று பேசியதற்கே, உபியின் மாஜி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா வேதனை தெரிவித்திருந்தார்.. பொன்முடியின் பேச்சு வட மாநில மக்களை கேலி செய்வதாக உள்ளது என்று குமுறலை வெளிப்படுத்தியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது..

 திணறல்

திணறல்

எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஆளும்தரப்பை விமர்சிப்பது இயல்பு என்றாலும், இந்தியை எதிர்த்து பேசிவருவது, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே வடமாநிலங்களில் சிக்கலை தந்துள்ளதாம்.. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கெல்லாம் வடமாநில காங்கிரஸ்தான் பதில்களை சொல்ல வேண்டி இருக்கும் என்கிறார்கள்.. போதாக்குறைக்கு பாஜக, இந்த பிரச்னையை காங்கிரஸ் பக்கம் திருப்பி விடும் வேலையை பார்த்துவிடுவதால், மேலும் திணறுவதாக தெரிகிறது..

ஒரே போட்டோ

ஒரே போட்டோ

ஏற்கனவே, பேரறிவாளனை கட்டிப்பிடித்த விவகாரத்தினால் தமிழக காங்கிரஸ் நொந்து போயுள்ள நிலையில், வடமாநில ஆட்சியை ஒவ்வொன்றாக இழந்து வரும் காங்கிரஸ், தற்போதைய திமுகவின் இந்தி எதிர்ப்பு பேச்சால் விழிபிதுங்கி போயுள்ளதாம். முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை கட்டிப்பிடித்த போட்டோவை, போஸ்டராகவும் ஒட்டி, நடக்க போகும் குஜராத் சட்டசபை தேர்தல் முதல், அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த போவதாக பாஜக தரப்பு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.. இதுவும் காங்கிரசுக்கு கலக்கத்தை தந்துள்ளது..

 கலக்கம் - திணறல்

கலக்கம் - திணறல்

ஆக மொத்தம், திமுகவின் சில சீனியர்களின் இந்தி வெறுப்பு பேச்சு + பேரறிவாளன் விவகாரம் போன்றவைகளால் காங்கிரஸ் வேதனையில் உள்ளதாக கூறப்படுகிறது.. மற்றொருபக்கம், இந்த சீனியர்கள் குறித்த புகாரும் கோட்டைக்கு பறந்துள்ளதாம்.. விமர்சனங்கள், குறைகள் இல்லாமல் ஆட்சியை தர வேண்டும் என்ற முனைப்பில் செயல்படும்போது, இப்படியெல்லாம் புகார்கள் வருவது அரசுக்குதான் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.. அதுமட்டுமல்ல, எப்படியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து ஸ்டாலின் அறிவுறுத்துவார், அல்லது கடிவாளம் போடுவார் என்கிறார்கள்.. பார்ப்போம்..!

English summary
will mk stalin take actions against senior ministers and what will tn congress do the next திமுக சீனியர்கள் இந்தி மொழி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X