சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்தான் தீபாவளி.. அமைச்சர் விஜய பாஸ்கர் அடடே

Google Oneindia Tamil News

Recommended Video

    எனக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்தான் தீபாவளி - அமைச்சர் விஜய பாஸ்கர்-வீடியோ

    சென்னை: எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    கரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர், விஜயபாஸ்கர். அப்போது தீபாவளி தொடர்பான போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

    Will monitor traffic congestion in Chennai: Minister M.R.Vijaya Bhaskar

    விஜயபாஸ்கர் கூறியதாவது: நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன். மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய உள்ளேன்.

    எனவே எனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பஸ் நிலையத்தில்தான். தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

    கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா!!!! கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா!!!!

    தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, வெள்ளிக்கிழமையான இன்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அல்லது சனிக்கிழமை மாலையிலே கூட, இந்த போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரித்து, கோயம்பேடு மற்றும் சென்னையின் பல இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை முதல் சென்னையில் முகாமிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Transport minister M.R.Vijaya Bhaskar said, he will stay in Chennai for next 3 days, and will monitor traffic congestion ahead of Diwali festival, my Diwali celebration will be at Koyambedu bus stand, he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X