• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பாஜக வெற்றி பெற முஸ்லீம் வாக்குகள்தான் காரணமா.. நிதிஷ் "கனவு" தகருமா.. இனி என்னாகும்.. பரபர பீகார்

|

சென்னை: பீகாரில் பாஜக கூட்டணி தற்போது அபார வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.. அந்த வகையில் அடுத்த முதல்வராக நிதிஷ் மீண்டும் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  Bihar தேர்தலில் BJP-யின் வளர்ச்சி.. முதல்வராக Nitish kumar நீடிப்பாரா?

  நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் பல விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளன.. முதலாவதாக, சிராக் பஸ்வானின் கனவு மொத்தமாக தகர்ந்துவிட்டது.. அப்பாவை போல மகன் இல்லை என்பதும் தெரிந்துவிட்டது..

  சரியாக பிளான் செய்யாததும், பாஜகவின் வியூகத்தை கண்டுபிடித்து அதை முறியடிக்காததும் சிராக்கின் படுதோல்விக்கு காரணமாக உள்ளது.

  ட்விஸ்ட்.. இதோ இந்த 5 காரணங்கள்தான்.. பீகாரை தக்க வைத்தது பாஜக.. கடைசி நிமிடத்தில் மாறிய கணக்கு!

   பிரச்சனை

  பிரச்சனை

  அதுமட்டுமல்ல, நிதிஷூடன் பிரச்சனை இருந்தாலும் அவருடனேயே இவர் சேர்ந்து பயணித்து இருக்க வேண்டும், கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது அடுத்த மைனஸ்.. ஒருவேளை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், தான் கிங்மேக்கராக உருவெடுக்கலாம், ஆட்சி அமைய ஆதரவு கோரும் நிலை வரலாம் என்று கணக்கு போட்டாரோ என்னவோ, அனைத்துமே நொறுங்கிவிட்டது.

   அனுதாப ஓட்டுக்கள்

  அனுதாப ஓட்டுக்கள்

  அதேபோல, அப்பா இறந்ததும் அந்த அனுதாப ஓட்டுக்கள் தனக்கு அப்படியே விழும் என்று நினைத்து கணக்கு போட்டதும் பொசுங்கிவிட்டது.. இனிமேல் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்து செயல்படுவாரா என்று நமக்கு தெரியாது.. ஆனால் நிச்சயம் பாடத்தை இதில் இருந்து கற்றிருப்பார்.

  ஓவைசி

  ஓவைசி

  அடுத்ததாக, அசாதுதீன் ஓவைசி கட்சி, பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றே சொல்லலாம்.. காரணம், பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகளை பிரித்தது இந்த கட்சிதான்.. ஒவைஸியின் கட்சியான அகில இந்திய மஜ்ஜிலிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன், முதல் முறையாக 5 இடங்களை பீகார் தேர்தலில் கைப்பற்றியிருக்கிறது.

  முஸ்லிம்கள்

  முஸ்லிம்கள்

  இது பாரம்பரியமாக ஜேடியு அல்லது காங்கிரஸ் அல்லது ஆர்ஜேடி கூட்டணிக்கு வாக்குகளை செலுத்தி வந்த முஸ்லிம்களின் மன மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, இதில் சிராக்கையும் சேர்த்து கொள்ளலாம்.. முஸ்லிம் வாக்குகள், தலித் வாக்குகளால்தான் நிதீஷ்குமார் கட்சி நிறைய இடங்களில் தோற்றிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

   அபார வியூகம்

  அபார வியூகம்

  இதில் அடுத்த சிக்கல் நிதிஷூக்குதான்.. கடந்த 15 வருடங்களில் நிதிஷ்குமார் கட்சி பீகாரில் 115 இடங்களில் போட்டியிட்டு வெறும் 43 இடங்களில்தான் வெற்றியை தக்கவைத்துள்ளது.. அதே நேரத்தில் பாஜக 110 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. அதாவது, பாஜகவின் அபாரமான வியூகத்தால் எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி சொந்த கூட்டணி கட்சியையும் போட்டு தள்ளி உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.

  பாஜக

  பாஜக

  இதையடுத்து முதல்வர் பதவியை பாஜகவே தக்க வைத்து கொள்ளும் அல்லது நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து கழட்டி விடும் வாய்ப்பு இருக்குமா என்ற அடுத்த பிரச்சனை புகைய ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு முன், கூட்டணியை உறுதி செய்தபோது, 'நிதிஷ்குமார் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்' என்று பிரதமர் முதல் அமித்ஷா, நட்டா வரை எல்லாருமே உறுதி சொன்னார்கள்.

   எதிர்பார்ப்பு

  எதிர்பார்ப்பு

  அப்போது பாஜக இந்த அளவுக்கு வெற்றியை பிடிக்கும் என்று தெரியாது.. இன்று அதிக இடங்களில் வென்றுள்ளதால், முதல்வர் பதவியை பாஜக கோரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அல்லது தார்மீக அடிப்படையில், நிதிஷ்குமார் விட்டு தருவாரா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கி வருகின்றனர்.

   
   
   
  English summary
  Will Nitish Kumar remain Bihar Chief Minister
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X