சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் சசிகலாவா.. நோ.. பாஜகவிடம் முறையிட்ட ஓபிஎஸ்.. பொதுச் செயலாளர் பதவி கிடைக்குமா?

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவாரா ஓ பன்னீர்செல்வம் என்பது தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    OPS plan for gen sec | பாஜகவிடம் முறையிட்ட ஓபிஎஸ்.. பொதுச் செயலாளர் பதவி கிடைக்குமா?- வீடியோ

    சென்னை: அதிமுக ஒன்றாக சேர்ந்துவிடக்கூடாது என்பதுதான் ஓபிஎஸ் பிளான் என்கிறார்கள் அதிமுகவுக்குள்ளேயே... அதுக்காகவே பாஜக தலைமையை சுற்றி சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

    ஜெயலலிதா இறந்ததில் இருந்தே அதிமுகவுக்குள் ஏகப்பட்ட குழப்பம், பஞ்சாயத்து நீடிக்கிறது. இதில் அமமுக என்று ஒரு கட்சி தனியாக போய்விடவும், அந்த கட்சியில் ஏராளமான அதிமுகவினர் சென்றுவிட்டார்கள்.

    இதனால் இரு தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ், இபிஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இயங்கியதால் மேலும் பிளவு ஏற்பட ஆரம்பித்தது.. பூசல் பெருகின... அதிருப்திகள் அதிகமாயின.. ஒரு கட்டத்தில் இவை வெளியே வெடித்துகிளம்பியது.

    நெருக்கம்

    நெருக்கம்

    கட்சியை யார் கைப்பற்றுவது என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமே ஆதரவாளர்கள் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பினை தனித்தனியாக தந்து வருகிறார்கள். ஆனால் ஓபிஎஸ்-க்கு கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக பாஜகவுடனான தன்னுடைய நெருக்கத்தையும் பயன்படுத்த தவற மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

    பாஜக

    பாஜக

    ஆட்சி என்பது 5 வருஷம்தான் பவர்.. ஆனால் கட்சிக்கு அப்படி இல்லை. அதனால்தான் கட்சிக்கு தலைமை பொறுப்பை வகிக்க தீவிரமான முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் பாஜகவை பொறுத்தவரை, அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அதன் குறிக்கோளாக உள்ளது. இந்த 3 வருஷத்தில் அதிமுக ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் இல்லை என்ற முடிவுக்கு பாஜக தலைமை என்றைக்கோ வந்துவிட்டது.

    சசிகலா

    சசிகலா

    கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்லவும், வழி நடத்தவும் ஒரு மிகப்பெரிய ஆளுமை தேவை என்பதையும், அந்த ஆளுமை நிச்சயம் சசிகலாவிடம்தான் இருக்கிறது என்பதையும் பாஜக நன்றாகவே உணர்ந்துள்ளது. அதனால் சசிகலா விடுதலையில்கூட பாஜக தன்னுடைய முயற்சியை முன்னெடுக்கும் என்றும் ஒரு தகவல் கசிந்தது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இந்த தகவல் உண்மையோ, பொய்யோ தெரியவில்லை.- ஆனால் அதிமுகவை ஒன்றிணைத்து விட்டால், தன் நிலைமை சிக்கலாகி விடும் என்பதை ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்து வைத்துளள்ர். இந்த 3 வருடத்திலேயே தனக்கு ஆட்சியில் எந்த மதிப்பும், முக்கியத்துவமும் இல்லை என்பதை பாஜகவிடம் பலமுறை புலம்பி வந்துள்ள நிலையில், பாஜகவே கட்சியை சசிகலாவை வைத்து ஒன்றிணைப்பதாக இருந்தால் நிலைமை சிக்கல் என்பதை ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளார்.

    பொதுச்செயலாளர்

    பொதுச்செயலாளர்

    அதனால்தான் பாஜக தலைமையை சந்தித்து, அப்படி ஒருமுயற்சியை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோளும், கோரிக்கையும் மாறி மாறி விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியே அணிகள் இணைவதானாலும் பரவாயில்லை, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மட்டும் எனக்கு தந்துவிடுங்கள், எடப்பாடியாரே முதல்வராக கூட இருந்து கொள்ளட்டும் என்றும் சொல்கிறாராம்.

    ஆக மொத்தம், தனக்கு பொதுச்செயலாளர் பதவி, மகனுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம்.. இது இரண்டும்தான் ஓபிஎஸ்-ன் முழு எண்ணமாக இருக்கிறது என்று அதிமுகவுக்குள்ளேயே சொல்கிறார்கள்.

    English summary
    It is said that, DY CM O Panneerselvam is reportedly making efforts to become the AIADMK's General Secretary
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X