சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹோ.. ஓவைசி திமுகவுக்கு வர "இவர்" ஆசைப்படுகிறாராமே.. பரபரக்கும் கூட்டணி காட்சிகள்!

ஓவைசி திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் ஓவைசி இணைய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் ஆசைப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் கூட்டணியில் உள்ள இஸ்லாமியக் கட்சிகள் அதை விரும்பவில்லையாம்.

நேற்றிரவு ஒரு செய்தி பரபரப்பாக கிளம்பியது. திமுக நடத்தும் கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பதாக தகவல் வெளியானது... இந்தத் தகவல் திமுகவினர் மத்தியில் பெரும் ஆச்சரியம் பிளஸ் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தி விட்டது.

காரணம், ஓவைசி தமிழகத்திலும் வாக்குகளைப் பிரிப்பார் என்று சிலரால் கிளப்பி விடப்பட்டு வந்த நிலையில் அவரே திமுக பக்கம் வருவதாக வெளியான மகிழ்ச்சியே இது.

திமுக கூட்டணியின் மாநாட்டுக்கு ஓவைசியை அழைக்கவில்லை.. திமுக மறுப்புதிமுக கூட்டணியின் மாநாட்டுக்கு ஓவைசியை அழைக்கவில்லை.. திமுக மறுப்பு

செய்திகள்

செய்திகள்

சில தினங்களுக்கு முன்பு, கமலுடன் ஓவைசி கூட்டணி வைப்பதாக செய்திகள் வந்தன.. இதற்கான ஆலோசனையும் ஓவைசி ஹைதராபாத்தில் மேற்கொண்டார்.. இதே கமல், திமுகவுடன் கூட்டணி வைப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில் ஓவைசி - திமுக கூட்டணி பேச்சு கிளம்பியுள்ளது.

உதயநிதி

உதயநிதி

ஓவைசி கூட்டணியில் இருக்க வேண்டும் என்று உதயநிதிதான் விரும்புகிறாராம்.. ஏனென்றால் வரும் தேர்தலில் சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகியவற்றில் ஒரு தொகுதியில்தான் உதயநிதி போட்டியிட யோசித்து வருகிறார்.. இந்த தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதி.. இப்போதைக்கு ஒவைசி, இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்குரியவராகவும், ஒரு தேசிய தலைவராகவும் இருந்து வருவதாக சமீபத்திய பீகார், ஹைதராபாத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

 குஷ்பு சவால்

குஷ்பு சவால்

எனவே, தமிழக முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற ஓவைசியை தங்கள் பக்கம் இழுக்க உதயநிதி விரும்பியதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, உதயநிதி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான்தான் போட்டியிடுவேன் என்று குஷ்பு சொல்லி கொண்டிருக்கிறார்.. இன்றைக்குகூட என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார்.

 முஸ்லிம் வாக்குகள்

முஸ்லிம் வாக்குகள்

என்னதான் தமிழக இஸ்லாமியர்களின் பெரும்பாலான வாக்குகள் திமுக பக்கம் இருந்தாலும் கூட, ஓவைசியால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டாலும் கூட, எந்த காரணத்தைக் கொண்டும் ஓவைசியால் ஓட்டுக்கள் சிதறுவதை உதயநிதி விரும்பவில்லையாம். அதனால்தான், முஸ்லிம் வாக்குகள் குஷ்புவுக்கு கொஞ்சம் கூட போய் விடாமல் தடுக்கும் வகையிலும், திமுக பக்கமும் வருவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக ஓவைசியை இழுக்கும் முயற்சி நடப்பதாக கூறப்பட்டது.

 பிடிவாதம்

பிடிவாதம்

அதேசமயம், ஓவைசி திமுக கூட்டணிக்கு வருவதை ஏற்கனவே பலகாலமாக இந்த கூட்டணியில் நீடித்து வரும் முஸ்லீம் கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் திமுகவின் வெற்றி வாய்ப்பை மனதில் கொண்டு அவர்கள் ஓவைசியை ஏற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

 பரபரப்பு

பரபரப்பு

மேலும் நமக்கு ஓவைசி தேவையில்லை. பாஜகவைப் போலவே அவரும் அபாயகரமானவர், தமிழகத்தில் செல்வாக்கு இல்லாதவர். அவரை நீங்களே வளர்த்து விட்டு ஆப்பு வைத்துக் கொள்ளப் போகிறீர்களா என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவரை அழைக்கும் முடிவை திமுக கைவிட்டதாக சொல்கிறார்கள். இப்படியாக போய்க் கொண்டிருக்கிறது கூட்டணி பரபரப்புகள்.

English summary
Will Owasi join in DMK Alliance in Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X