• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"செம கேம்" .. சாயும் அன்புமணி.. பாராட்டும் பாமக.. அப்ப "அது"தானோ.. இப்பவே கண்ணை கட்டுதே..!

Google Oneindia Tamil News

சென்னை: அன்புமணியிடம் ஒரு மாற்றம் தெரிகிறது... முன்னாடிவிட இப்போது ஒரு சேஞ்ச் இருக்கிறது என்று திமுக எம்பி செந்தில்வேல் தெரிவித்த கருத்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், முதல்வர் ஸ்டாலினை, அளவில்லாமல் புகழ்ந்திருந்தார்.. "முதல்வரை சார்ந்து நியமனம் செய்யப்பட்டிருக்கிற 4 அதிகாரிகளுமே நேர்மையானவர்கள், திறமையானவர்கள்... ஆனால், அமைச்சர்கள் நியமனம் தான் விமர்சனமாகி உள்ளது..

துரைமுருகனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்... கலைஞர் காலத்து ஆள்.. அதனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியைக்கூட தந்திருக்கலாம்".. என்றார்.. அதுமட்டுமல்ல, 'மாற்றம்
முன்னேற்றம் அன்புமணி' என்ற வசனம், 2026 தேர்தலிலும் ஒலிக்கும் என்றும் அன்புமணி கூறியிருந்தார்.

 எம்பி பேட்டி

எம்பி பேட்டி

இதுகுறித்து திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரிடம் ஒரு நாளிதழில் கருத்து கேட்கப்பட்டது.. அதற்கு அவர், "எந்தவொரு அரசியல் கட்சியையும், தலைவர்களையும் அவர் விமர்சிக்கவில்லை. கமல், சீமானையும் பாராட்டி திருமாவளவனையும் எதிர்க்கவில்லை.

 துரைமுருகன்

துரைமுருகன்

துரைமுருகனுக்கும், ராமதாஸ் தரப்புக்கும் எப்போதுமே நல்ல இணக்கம் இருந்து வருகிறது.. அன்புமணி பேசுவதை பார்த்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்பவே ரெடியாவது போல தெரிகிறது... அதனால்தான் யாரையும் விமர்சிக்கவில்லை போலும்.. இப்போது, அன்புமணியிடம் மாற்றம் தெரிகிறது... ஒரு சேஞ்சஸை பார்க்கிறேன் என்றார் செந்தில்குமார்.

 திமுக

திமுக

செந்தில்குமாரின், இதே மனநிலைதான் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது.. அன்புமணி பேசிய இந்த இரு விஷயங்கள்தான், திமுக தரப்பையும், பாமக தரப்பையும் வியக்க வைத்து வருகிறது.. கடந்த காலங்களில் திமுகவை அதிகமாக திட்டி தீர்த்தது பாமகதான்.. அதிலும் டாக்டர் ராமதாஸ் கதை சொல்வதாக கூறி ட்வீட்டிலும், ஃபேஸ்புக்கிலும், திமுகவை சாடியிருந்ததை மறுக்க முடியாது.. அதேபோல, திமுகவின் முரசொலியிலும் "ஐயா பதில் சொல்லுங்க என்று வன்னிய குல இளைஞன் என்ற பெயரில், 6 கேள்விகள் டாக்டர் ராமதாசிடம் எழுப்பப்பட்டது.

 ராமதாஸ்

ராமதாஸ்

இந்த அளவுக்கு கருத்து மோதலில் பாமக - திமுக ஈடுபட்டிருந்த நிலையில், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே நிறைய மாற்றங்கள் பாமகவில் தென்பட்டது.. பாமக எம்எல்ஏக்கள், நேரடியாக முதல்வரின் ரூமுக்கே சென்று வாழ்த்து சொன்னார்கள்.. திமுகவின் ஒவ்வொரு அறிவிப்பையும் டாக்டர் ராமதாஸ் பாராட்டியபடியே இருக்கிறார்.

 சீமான்

சீமான்

இப்போது அன்புமணியும் திமுகவை உயர்த்தி பேசியிருப்பது மிகுந்த மாற்றத்தை தந்துள்ளது.. போகிற போக்கை பார்த்தால், மறுபடியும் திமுகவுடன் பாமக இணைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது.. வரப்போகும் உள்ளாட்சி தேர்தலை வைத்து திமுகவுடன் சீமான் இணைய போவதாக ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. இந்த லிஸ்ட்டில் பாமகவும் இணையுமா? அல்லது பொறுத்திருந்து எம்பி தேர்தலின்போது இணையக்கூடுமா? என்று தெரியவில்லை... பார்ப்போம்..

English summary
Will PMK alliance with DMK in MP Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X