சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்!

உள்ளாட்சி தேர்தலில் பாமகவும், தேமுதிகவும் தனித்து போட்டியிடுமா என தெரியவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்

    சென்னை: பாமக, தேமுதிகவுக்கு இதோ ஒரு நல்ல சவால் வந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. இதில் இருவரும் தனித்துப் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் செய்வார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.

    கூட்டணி இல்லாமல் இங்கு எந்தக் கட்சியும் பிழைக்க முடியாது. இதுதான் எதார்த்தம், நிதர்சனம். திமுகவோ, அதிமுகவோ ஏதாவது கூட்டணி வைத்துத்தான் களம் கண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அந்த அளவுக்குத்தான் மக்கள் ஒவ்வொரு கட்சிக்கும் பலம் கொடுத்துள்ளனர்.

    எந்தக் கட்சியும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு ஏங்க வேண்டிய அவசியமே இருக்காது இல்லையா. லோக்சபா தேர்தலின்போது கூட கூட்டணி வலுவாக அமைத்த காரணத்தால்தான் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது. அதிமுகவும்தான் கூட்டணி வைத்தது. ஆனால் அதை மக்கள் நிராகரித்து விட்டனர்.

    தடாசனா, திரிகோனாசனா செய்வது எப்படி.. அனிமேஷன் வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கும் பிரதமர் மோடி! தடாசனா, திரிகோனாசனா செய்வது எப்படி.. அனிமேஷன் வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கும் பிரதமர் மோடி!

    காரணங்கள்

    காரணங்கள்

    மக்கள் அதிமுக கூட்டணியை நிராகரிக்க பல காரணங்கள் உள்ளன. மோடி எதிர்ப்பு அலை, அதிமுக மீதான அதிருப்தி, பொருந்தா கூட்டணி, தேமுகவின் பேரம், பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.. என நிறைய காரணங்களை பட்டியலிடலாம். அது மிகப் பெரிய லிஸ்ட்டும் கூட.

    அதிமுக, திமுக

    அதிமுக, திமுக

    தற்போது உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. இதில் பெரும்பாலும் உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். கட்சி பேதமெல்லாம் இங்கு செல்லாது, எடுபடாது. அந்த வகையில் திமுக, அதிமுக பெரும்பாலும் தனித்துப் போட்டியிடவே விரும்பும். கடந்த கால வரலாறு அது.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரம்பத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி மக்களை தன் பக்கம் ஈர்க்க இந்த உள்ளாட்சித் தேர்தலைத்தான் அதிகம் பயன்படுத்தினார். நிறைய இடங்களில் அவருக்குக் கிடைத்த கவுன்சிலர்கள்தான் தேமுதிகவை வளர்க்க உதவியவர்கள் ஆவர்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    இப்போதும் கூட அப்படிப்பட்ட நல்ல வாய்ப்பு தேமுதிகவுக்கு வந்துள்ளது. தேமுதிகவின் செல்வாக்கு பெரும் கேள்விக்குறியாகி விட்டது. லோக்சபா தேர்தல் அதன் பெயரை டேமேஜ் ஜெய்துள்ளது. எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் அது தனித்துப் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்க முயலலாம். செல்வாக்கை ஏற்படுத்தவும் முயலலாம்.

    கிராக்கி கூடும்

    கிராக்கி கூடும்

    இப்படிச் செய்வதால் 2 லாபம் உண்டு. இந்த தேர்தலிலேயே இழந்த செல்வாக்கை மீட்கலாம். 2வது, அடுத்து வரப் போகும் சட்டசபை பொதுத் தேர்தலில் கூடுதல் சீட் கேட்க வாய்ப்புண்டு. பேரத்திற்கும் கிராக்கி கூடும்.

    English summary
    The PMK and DMDK have not yet said about their position in the Local Body Elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X