• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ரூட் மாறுதே".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா?

|

சென்னை: ஒரு புது தகவல் தமிழக அரசியலில் இங்கிட்டு அங்கிட்டுமாக ஓடி கொண்டிருக்கிறது.. ஆனால், அது உண்மையா என்று தெரியாவிட்டாலும், நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதாக தெரிகிறது.

இந்த முறை அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தல்.. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும், ஆட்சியை இந்த முறையாவது பிடித்துவிட வேண்டும் என்று திமுகவும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பு இப்படியெல்லாம் வியூகங்கள், தடாலடிகள், குழப்பங்கள் இருந்ததில்லை.. இந்த முறை தேர்தல்தான் இவை அனைத்தும் கலந்து கட்டி நடக்க போகின்றன..

"ராஜதந்திரி".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. "நான் பார்த்துக்கறேன்".. "கதர்"கள் ஷாக்.. என்னாச்சு?

அதிமுக

அதிமுக

அந்த வகையில், அதிமுகவை பெரும்பான்மையோடு வெற்றி பெற வைத்து, அதன்மூலம் திமுகவுக்கு செக் வைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காகவே அமமுகவை இணைக்கவும், சசிகலாவை அதிமுகவில் கொண்டு வரவும் அறிவுறுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு, டிடிவி தினகரன் டெல்லி சென்றது முதல், எடப்பாடியாரிடம் அமித்ஷா பேசியது வரை கிட்டத்திட்ட அதிமுகவுடன் அமமுக இணைவதற்கான சாத்திய சூழல்களே உள்ளன..

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இன்னொரு பக்கம், டிடிவி தினகரன், விசிக, கம்யூனிஸ்ட்கள், போன்றோர் கமலுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கும் சூழலும் ஏற்படலாம் என்கிறார்கள்.. அப்படி மட்டும் நடந்துவிட்டால், திமுக ஒரு அஸ்திரத்தை கையில் எடுக்க போகிறதாம். அதுதான் பாமக..!

 3வது அணி

3வது அணி

அதாவது, கமல் திமுகவுக்குள் வந்துவிட்டால் அவருடன் இணைந்து தேர்தலை சந்திப்பது.. அவ்வாறு இல்லாமல் கமல் 3வது அணியை உருவாக்க முற்பட்டால், பாமகவை உள்ளே கொண்டு வரும் முயற்சியிலும் திமுக இறங்கும் என்கிறார்கள்.. கமல் 3வது அணி அமைத்தால் நிச்சயம் திமுகவின் வாக்குகள் சிதறும்.. அவ்வாறு வாக்குகள் சிதறினாலும், பாமகவை வைத்து சரிக்கட்டவே திமுக இப்படி யோசித்து வருவதாக கூறுகிறார்கள். அதற்கேற்றார் போல, டாக்டர் ராமதாஸும் இதுவரை கூட்டணியை உறுதி செய்யாமல் ட்விட்டரில் புதிர் போட்டு கொண்டு இருக்கிறார்.

 மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

அதுமட்டுமல்ல, புதுச்சேரி விஷயத்தில் திமுகவின் மாஸ்டர் பிளானை கண்டு பாமகவே மிரண்டு போய்விட்டதாம்.. காங்கிரஸை கழட்டிவிட்டு, தில்லாக புதுச்சேரியில் திமுக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்ட போது, காங்கிரஸைவிட விட அதிகமாக அலறியது பாமகதானாம்.. ஜெகத்தை திமுக முன்னிறுத்துவதுபோல, என்றோ அன்புமணியை புதுச்சேரியில் நிறுத்தியிருந்தால், வன்னிய வாக்குகளை சுளையாக அள்ளியிருக்கலாமே என்று இப்போது நினைக்கிறது..

பாமக

பாமக

ஸ்டாலினின் இந்த வியூகத்தை கண்டு வியந்து பார்த்ததாம் பாமக.. இன்னும் அதிமுகவுடன் பாமகவுக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில், இப்போது பாமக திமுக கூட்டணிக்குள் வருமா? வராதா என்பது கமல் எடுக்க போகும் முடிவில்தான் உள்ளது.. பார்ப்போம்!

English summary
Will PMK Join in DMK Alliance in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X