சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியுடன் கூட்டணியா.. கூடுகிறது பாமக "தேர்தல் சிறப்பு" பொதுக்குழு.. பரபரக்கும் எதிர்பார்ப்புகள்!

Google Oneindia Tamil News

சென்னை: வரும் மார்ச் 1-ம் தேதி பாமக தேர்தல் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வைத்துள்ளனர்.. இந்த கூட்டம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. காரணம், ரஜினியுடன் பாமக இணையுமா, இணையாதா என்ற பல எதிர்பார்ப்புகள் எழுந்துவருவதால்தான்!

Recommended Video

    பாமக - ரஜினி கூட்டணியின் பின்னணி இதுதான் | Rajinikanth lead alliance will target to DMK

    கொஞ்ச நாளைக்கு முன்பு, ரஜினிகாந்தின் ஆலோசகர் என சொல்லப்படும் தமிழருவி மணியன், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், பாமக கூட்டணி சேரும் என்றார்... அதிமுக தரப்பு உட்பட எல்லோருமே ஆடிப்போய்விட்டனர் இந்த பேட்டியினால்.

    ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததும் பார்க்கலாம் என்று சொல்லி இந்த விவகாரத்துக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ஆனால், ரஜினிகாந்த்துடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அவர் சொல்லவே இல்லை... அது மட்டுமில்லை.. அன்புமணியும் இதை பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. இதுதான் அன்றுமுதல் இப்போது வரை பூடகபேச்சாகவே அரசியல் உலகில் பேசப்பட்டு வருகிறது. அன்புமணியை முதல்வராக்குவது என்பது டாக்டர் ஐயாவின் நீண்டகால கனவு.

    தமிழருவி மணியன்

    தமிழருவி மணியன்

    அதனால்தான் ரஜினி மூலம் பாஜகவுக்கு காய் நகர்த்த பாமக முயல்வதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால் தமிழருவி மணியன் பேட்டியை தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே, சட்டசபை தேர்தலுக்கு, அதிமுகவில் 45 முதல், 50 தொகுதிகள் வரை ஒதுக்குவது தொடர்பாக, முதல் கட்டமாக முடிவு செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் கசிந்தது.. அது உறுதியானதா என்பது தெரியவில்லை.. ஆனால், மறுநாளே அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று ராமதாஸ் பதிலளித்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டணி

    கூட்டணி

    எனினும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால், மாற்று சாதி கட்சியினரின் ஓட்டுகள், பாமகவுக்கு, 2, 3 தேர்தல்களில் கிடைக்கவில்லை. இதனால், ரஜினிகாந்த் கட்சி துவக்கிய பின், அவருடன் கூட்டணி வைத்தால், பிற சாதியினரின் ஓட்டுகள் கிடைக்கும், அதை வைத்து பெரிய பெற்றியை சுவைக்கலாம் என்பதே பாமகவின் திட்டமாக உள்ளதாம். ஆனால், ராமதாஸ் கையில் எடுத்துள்ள சமூக நீதி கொள்கைக்கு, ரஜினிகாந்த் முன்னுரிமை கொடுக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

    சமூக நீதி

    சமூக நீதி

    சமூக நீதி அடிப்படையில், எல்லா சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவும், அடிப்படை வசதிகளை கிடைக்க ராமதாஸ் - ரஜினி தரப்பு இணைந்து செயல்படும் என்று பாமகவின் பெரும்பாலான தொண்டர்களும், ரஜினி ரசிகர்களும் விரும்புகிறார்களாம்.. அதனால் ரஜினிகாந்த்துடன் கூட்டணி என்பதை பாமகவால் இன்றைய தினம் வரை மறுக்க முடியாமல் போக இதுதான் காரணமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    மூத்த தலைவர்

    மூத்த தலைவர்

    அதேபோல, பாமகவுக்கு வடமாவட்டங்களில் நல்ல வலுவான கட்டமைப்பு உள்ளதை எப்படியும் ரஜினிகாந்த் பயன்படுத்தி கொள்ளவே பார்ப்பார்.. இப்போதைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு மூத்த அரசியல் தலைவராக இருப்பது ராமதாஸ் என்பதால், அவருடன் கூட்டணி வைக்கவே ரஜினிகாந்த் தரப்பும் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

    பொதுக்குழு

    பொதுக்குழு

    இதெல்லாமே ஒரு யூகம் என்றாலும், எல்லாவற்றிற்கும் மேலாக... தொண்டர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்தை அறியாமல் டாக்டர் ராமதாஸ் எந்த முடிவையும் எப்போதுமே எடுக்கமாட்டார்.. அவர்களின் கருத்துக்கு நிச்சயம் மதிப்பளிப்பார்.. நிச்சயம் வருகிற 1-ம் தேதி நடக்க போகும் பொதுக்குழு கூட்டத்தில் இதைப்பற்றின பேச்சு அடிபடும் என்கிறார்கள்.. அரசியல் விஷயங்கள், தேர்தல் வியூகங்களுடன், ரஜினியுடன் கூட்டணி சம்பந்தமான பேச்சும் கண்டிப்பாக நடக்கும் என்பதால்தான் இந்த பொதுக்குழு மிக முக்கியமான ஒன்றாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    English summary
    will pmk join with rajinikath political party in lok sabha election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X