சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ரஜினிகாந்தா? எச்.ராஜா கொடுத்த அதிரடி விளக்கம் இதுதான்!

தமிழக பாஜக தலைவராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதில் அளித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவி அடுத்த வாரம் காலியாக உள்ளது.

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் இனி யார் என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. இதற்காக பலரின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வருகிறது.

திண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு!திண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு!

யார் எல்லாம்

யார் எல்லாம்

முக்கியமாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, மூத்த தலைவர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.பி ராதாகிருஷ்ணன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த தலைவர் குறித்த அறிவிப்பு அடுத்த வாரமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி ரஜினி

எப்படி ரஜினி

அதே சமயம் தமிழக பாஜக தலைவராக ரஜினி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூட பேச்சுக்கள் அடிப்பட்டது. தமிழக பாஜகவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். பாஜகவின் முடிவுகளுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்து வருகிறார். இதனால் அவர் தமிழக பாஜக தலைவர் ஆகிறாரா என்று கேள்விகள் எழுந்தது.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

தமிழக பாஜக தலைவர் பதவி குறித்து தேசிய செயலாளர் எச். ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழக பாஜக தலைவராக ரஜினி தேர்வு செய்யப்படவில்லை.ரஜினி பெயரை பாஜக தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யவில்லை. யாரும் அவரின் பெயரை எங்களிடம் பரிந்துரை செய்யவில்லை.

விருப்பம்

விருப்பம்

ரஜினிகாந்த் பாஜக தலைவர் பதவிக்கு ஆசையோ, விருப்பமோ தெரிவிக்கவில்லை. நல்ல பெயரும், புகழும் கொண்டவர் ரஜினி. அவர் இன்னும் தன்னுடைய அரசியல் கொள்கையை முழுதாக தெரிவிக்கவில்லை. முழுமையாக அவர் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை, என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
Will Rajini Kanth be elected as the Tamilnadu BJP Chief?, clarifies H Raja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X