சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைத்தேர்தலுக்குள்ளாவது கட்சி தொடங்குவாரா ரஜினி?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போருக்குத் தயாராகுங்கள் தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் மத்தியில் கர்ஜித்த ரஜினிகாந்த் இடைத்தேர்தல் அறிவிப்பதற்குள் தனது அரசியல் கட்சியை தொடங்குவாரா?

2016ம் ஆண்டிற்கு பின்னர் தமிழக அரசியல் களம் பல புதிய மனிதர்களை சந்தித்துள்ளது. அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தலைவராவது கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் எதிர்பாராத விதமாக தலைவராவது என பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. மற்றொருபுறம் முன் எப்போதும் இல்லாத வகையில் நடிகர்கள் தனியாக அரசியல் கட்சி தொடங்குவதும் அரங்கேறின.

பிக்பாஸ் பிரச்னை பற்றிய செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசனை அரசியலுக்கு வரவேண்டியது தானே என்று கொக்கி போட அதனைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள், பாஜக தலைவர்களின் விமர்சனங்கள் கமலுக்குள் இருந்த அரசியல்வாதியை தட்டி எழுப்ப கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

[கட்சித் தலைவர்களே, போனா வராது.. சுளையா 20 தொகுதி.. நல்ல சான்ஸ் விட்ராதீங்க!]

முற்றுப்புள்ளி வைத்த கமல்

முற்றுப்புள்ளி வைத்த கமல்

ஊழலை ஒழிக்க வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், கிராமசபை கூட்டங்களை புறக்கணிக்ககூடாது என்று கமல் தனி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். கமல், ரஜினி இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்ற பேச்சுக்கு கமல் முற்றுப்புள்ளி வைக்க ரஜினி மட்டும் முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

ரஜினி அரசியல் கர்ஜனை

ரஜினி அரசியல் கர்ஜனை

கடந்த ஆண்டு தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ''தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சிஸ்டம் சரியில்லை, போருக்கு தயாராகுங்கள், சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்'' என்று பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தார். தனது கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தீவிரமாக நடந்த ஏற்பாடுகள்

தீவிரமாக நடந்த ஏற்பாடுகள்

அரசியல் கட்சி தொடங்கும் விதமாக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார். அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அரசியல் கட்சி எப்போது செயல்படும், கட்சி பெயர், கொடி, கொள்கைகள் போன்றவற்றை வெளியிடாமல் சஸ்பென்சாகவே வைத்துள்ளார்.

படப்பிடிப்பில் பிஸியாக உள்ள ரஜினி

படப்பிடிப்பில் பிஸியாக உள்ள ரஜினி

தைப்பொங்கலுக்கு அரசியல் கட்சியை அறிவிப்பார், தமிழ் புத்தாண்டில் அரசியல் கட்சியை அறிவிப்பார், காலா படம் வெளியான பின்னர் அரசியல் கட்சி அறிவிப்பார் என பல செய்திகள் உலவின. ஆனால் காலா படம் முடிந்து சங்கர் டைரக்‌ஷனில் 2.0 படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்திலும் நடித்து வருவதால் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தாமல் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 2.0 படப்பிடிப்பு முடிந்த நிலையில் பேட்ட திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினி பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சி இப்பவாவது வருமா?

கட்சி இப்பவாவது வருமா?

2.0 நவம்பரிலும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸிற்குப் பிறகே ரஜினி தனது பிறந்தநாளில் கட்சி பெயர், கொடி, கொள்கைகளை வெளியிடுவார் என்று நம்பிக்கையோடு ரசிகர் மன்றத்தினர் காத்திருக்கின்றனர். போருக்குத் தயாராகுங்கள் தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்ன ரஜினி சாரே, மினி போர் அதாவது இடைத்தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டன. இப்போதாவது உங்களது அரசியல் கட்சியை அறிவித்து மினி போ

English summary
Will Rajinikanth announce his party at this situation as tamilnadu political parties were gearing up for 20 constituency by elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X