சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் அந்த கருப்பு ஆடு.. திமுக குறித்த "அந்த" தகவல்.. ரஜினி காதுக்கு போயிருக்காமே... பரபரக்கும் களம்!

Google Oneindia Tamil News

சென்னை: இப்போதெல்லாம் ரஜினிகாந்த் - திமுகவை வைத்து சில செய்திகள் சுற்ற ஆரம்பித்துள்ளன. இவர்களுக்குள் கூட்டணி வந்தாலும் வரும் என்று கூட சிலர் சொல்லஆரம்பித்துள்ளனர். ஆனால் இப்போது லேட்டஸ்டாக கிளம்பியுள்ள தகவல் என்னவென்றால்.. திமுக குறித்த முக்கிய தகவல் ஒன்று ரஜினி தரப்பு போயுள்ளதாம்.

இதோ, அதோ என்று சொல்லி கொண்டிருந்த ரஜினிகாந்த் நிஜமாகவே வந்துவிடுவார் போல தெரிகிறது.. அதற்கான வேலைகளும் ஆரம்பமாகி உள்ளன.

"இப்போது இல்லேன்னா எப்பவுமே முடியாது" என்று அவரது ரசிகர்களும் போஸ்டர் அடித்து ஒட்டிவருகின்றனர்.. கிட்டத்தட்ட எல்லாருமே ஒருவித சோர்வுக்கு வந்துவிட்டனர்.. அதாவது டயர்ட் ஆகி விட்டனர்..இதுக்கு மேலயேும் ஜவ்வாக இழுத்தால் முடியவே முடியாது என்ற மன நிலைக்கு வந்து விட்டனர்.!

ஆமா.. எப்பவுமே லேட்டாதானே ரஜினி கருத்து சொல்வார்.. இதில் மட்டும் மின்னல் வேகம் ஏன், எப்படி, எதற்கு??ஆமா.. எப்பவுமே லேட்டாதானே ரஜினி கருத்து சொல்வார்.. இதில் மட்டும் மின்னல் வேகம் ஏன், எப்படி, எதற்கு??

 மக்கள் எழுச்சி

மக்கள் எழுச்சி

ஆனால் சில நாட்களாகவே ரஜினிகாந்த் உற்சாகமாக இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. வழக்கமான பரபரப்பு, சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமலும் இருக்கிறார். "மக்கள் எழுச்சி வந்த பிறகே அரசியலுக்கு வருவார்.. அந்த எழுச்சி இப்போதைக்கு ஏற்பட போவதில்லலை.. அதனால் அவர் தேர்தல் அரசியலுக்கு வர மாட்டார்.." என்ற ரீதியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவரே சொன்னதாக ஒரு பரபரப்பு கிளம்பியது.

 அரசியல் வருகை

அரசியல் வருகை

நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு, தன் அரசியல் வருகை குறித்து அவர்களின் கருத்தையும் ரஜினி கேட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது இப்படி செய்தி கிளம்பி உள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்த வேலையை பார்த்தது யார் என்றும் தெரியவில்லை. இது உண்மையா பொய்யா என்றும் தெரியவில்லை... அதனால் மக்கள் மன்றத்துக்குளேயே சலசலப்புகள் நிறைய உள்ளது.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

இப்படிப்பட்ட சமயத்தில்தான், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டதற்கு ஊருக்கு முந்தி இவர்தான் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.. இளைஞரணியின் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட போதும் சரி, கடந்த மார்ச்சில் ஸ்டாலினின் பிறந்த நாளின் போதும் சரி, இப்படி ஒரு வாழ்த்தை ரஜினி சொல்லவே இல்லை.. காரணமும் தெரியவில்லை. இதை பற்றியெல்லாம் ஆராயாமல், துரைமுருகன், டிஆர்பாலுவுக்கு சொன்ன இந்த வாழ்த்தினை கட்டம் போட்டு நன்றி சொன்னது முரசொலி.

 குறைபாடுகள்

குறைபாடுகள்

இதை விட முக்கியமாக திமுக மீது ஒரு கண் வைத்தபடியே இருக்கிறாராம் ரஜினி. அவரைப் பொறுத்தவரை திமுகதான் அவருக்கு முதல் எதிரியாக கருதுகிறார். காரணம் திமுக அத்தனை பலமாக இருப்பதால். திமுகவைத் தாண்டி வெல்ல வேண்டும் என்றால் அதை விட அவர் படு ஸ்டிராங்காக இருந்தாக வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் அது சாத்தியமில்லை. எனவேதான் திமுகவின் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கேட்டறிகிறார். அதை வைத்து திட்டமிடலாம் என்பதே அவரது தரப்பின் உத்தி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

செல்வாக்கு

செல்வாக்கு

இதற்கிடையே ஒரு சர்வே, ரஜினி பார்வைக்குப் போயுள்ளதாம். அது திமுகவின் செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு, மக்கள் கருத்து உள்ளிட்டவை தொடர்பானது என்று சொல்கிறார்கள். அதைப் பார்த்த ரஜினி அப்படியே அயர்ந்து போய் விட்டாராம். அப்படி இருந்திருக்கிறதாம் அந்த சர்வே முடிவுகள். இந்த சர்வேயை திமுக தரப்பிலிருந்தே யாரோ ஒரு முக்கியப் புள்ளி ரஜினிக்கு கொடுத்ததாகவும் ஒரு டாக் ஓடுகிறது. எது உண்மை என்று தெரியவில்லை.

வாழ்த்து

வாழ்த்து

அந்த சர்வேயில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.. ஒரு வேளை திமுகவுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்ததா? அல்லது திமுகவுடன் ரஜினி கைகோர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததா? என்று தெரியவில்லை.. ஆனால், சர்வே பற்றி கேள்விப்பட்டு, ரஜினி ரொம்ப ஆச்சரியப்பட்டாராம்.. விநாயகர் சதுர்த்திக்குகூட வாழ்த்து சொல்லாத ரஜினி, இப்போது திடீரென துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து சொன்னது உற்றுநோக்ககூடிய ஒன்றே.

 கணக்கு சரியா வருமா?

கணக்கு சரியா வருமா?

அதை விட முக்கியமாக ரஜினி தரப்புடன் நெருக்கமாக உள்ள மு.க.அழகிரியும் கூட இப்போது திமுகவைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள். துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு பேசிய அவரை, திமுகவுடன் சமாதானமாக போகலாமே என்று அவரது ஆதரவாளர்கள் நெருக்கி வருவதாவும் சொல்கிறார்கள்.. அண்ணாமலை படத்தில் ராதாராவி ஒரு வசனம் பேசுவார்.. கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்னு.. ஒரு வேளை ஏதாவது நடக்கப் போகுதோ.. !

English summary
Will Rajinikanth form an alliance with DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X