• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சூப்பர் பிளான்.. பாமகவை ரஜினி பக்கம் இழுப்பது ஏன்.. வன்னியர் வாக்கு வங்கிக்கு குறியா?!

|

சென்னை: திரும்பவும் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது... ரஜினி அரசியல் பயணம் குறித்த பரபரப்புகள் கிளப்பி விட ஆரம்பித்துள்ளனர்.. அவர் இன்னும் வரவில்லை.. ஆனால் அவருக்கு வசதியான களம் ரெடி செய்யப்படுகிறது.. யார் யார் கூட்டணி, யார் யார் எதிர்ப்பு என்ற சூடேற்றும் தகவல்கள் பரவி வருகின்றன.. இதில் அதிகமாக ஈடுபாட்டுடன் காணப்படுவது பாமகதான்!

"மொதல்ல அரசியலுக்கு வரட்டும்.. கட்சி ஆரம்பிக்கட்டும்.. அவர் கொள்கை என்னன்னு சொல்லட்டும்.. அப்பறம் அவரை பத்தி பேசலாம்" என்று உதயநிதி முதல் எல்லோருமே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இதனால்தானோ என்னவோ, ரஜினியின் அரசியல் வருகையின் அறிவிப்பு ஏப்ரல் 14ம் தேதி அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.. இதை ரஜினியின் ஆலோசகராக கருதப்படும் தமிழருவி மணியனே சொல்வதால்தான் இந்த விஷயத்தை சீரியஸாகவும், உண்மையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. வெறும் தகவலோடு நிறுத்தாமல், பாமக கூட்டணியில் வரும் என்று ஒரு பிட்டை போட்டு விட்டு போயுள்ளதுதான் சில அரசியல் கட்சிகளை வெவெலக்க வைத்துள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

திடீரென ஏன் பாமக ரஜினியுடன் ஒட்ட பார்க்கிறது.. ஏன் ரஜினியுடன் இணக்கமான உறவை பாமக விரும்புகிறது என்பதுதான் பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது.. டாக்டர் ராமதாஸை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ரஜினியை எதிர்ப்பவர்.. குறிப்பாக நெய்வேலி போராட்டத்தில் ரஜினியை அதிகம் சீண்டியது ராமதாஸ்தான்... 2004 தேர்தலின்போது பாமக அப்போது திமுக கூட்டணியில் இருந்தது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் ராமதாஸ் பேசிய பேச்சு ஏகத்துக்கும் ரஜினியை மட்டுமல்ல அவரது ரசிகர்களையும் கொதிக்க வைத்தது. அப்போது ரஜினி, ராமதாசுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்... அதில் "ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு இதுதான் அழகா? நியாயமா? என்னையும் என் ரசிகர்களையும் கடுமையாக விமர்சிக்கலாமா? அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இன்னொன்று வன்முறை.

ராஜா

ராஜா

டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்கவில்லை. இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்" என்று அந்த அறிக்கை நீளும்!

யாரை சொன்னார்?

யாரை சொன்னார்?

இப்போது இந்த அறிக்கைக்கும், இதே ரஜினியுடன் பாமக இணைய உள்ளதற்கும் ஏகப்பட்ட முரண்கள் உள்ளதாகவே தெரிகிறது.. அப்படியானால், வன்முறையின் ராஜா என்ற வாசகத்தை ரஜினி திரும்பி பெற்றுவிட்டாரா? அல்லது சேற்றில் விழுந்த பன்றி என்று அப்போது ராமதாஸ் யாரை சொன்னார்? என்ற சந்தேகங்களும் தானாகவே எழுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினி ரசிகர்களும், பாமக தொண்டர்களும் இணக்கமாக, எல்லாவற்றையும் மறந்துவிட்டு களவேலைகளில் இறங்குவார்களா? என்பது தெரியவில்லை.

பாஜக ஆதரவு

பாஜக ஆதரவு

பாஜகவுடன் கூட்டணி என்று உறுதியாக சொல்லாவிட்டாலும், இவ்வளவு நாள் கழித்து திடீரென வந்து சிஏஏவுக்கு ஆதரவாக குரல் ரஜினி கொடுத்திருப்பதால் நிச்சயம் அவர் பாஜகவுடன் தான்கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்பர் என்றும் நம்பப்படுகிறது.. பாமகவை பொறுத்தவரை எப்போதுமே பாஜகவுடன் ஒரு இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. தமிழக நலன் சார்ந்த சில விஷயங்களில் ராமதாஸ் விட்டுத்தருவது கிடையாது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதே சமயம், அன்புமணியை முதல்வராக்குவது என்ற நீண்ட கால இலக்குடன் பாமக உள்ளது.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், இதற்கான முயற்சியிலும், இலக்கிலும் அது மிக மிக தெளிவாகவே உள்ளது.

நெருக்கம்

நெருக்கம்

அதனால்தான் பெரிய அளவிலான வெறுப்பினை பாஜக பக்கம் உமிழாமல் உள்ளது.. பாஜகவுக்கு நெருக்கமான ரஜினியின் வருகை, தங்கள் நீண்ட நாள் கனவை நனைவாக்கும் என்றும் பாமக நம்புகிறதாகவே தெரிகிறது.. இதைதான் தமிழருவி மணியன் அறிவிப்பின் மூலம் ஓரளவு யூகிக்க முடிகிறது.. ஆக, பாமக - பாஜக - ரஜினி என்று ஒரு பக்கம் எடுத்து கொண்டாலும், இந்த கூட்டணியில் அதிமுகவையும் இணைத்து கொள்ளலாம்.

விமர்சனம்

விமர்சனம்

வாக்கு வங்கியை இழக்காமல் வலுவுள்ள பாமகவை எப்போதோ, சரிக்கட்டி தன்னுடன் அரவணைத்து கொண்டது அதிமுகதான்.. ஆனால் திமுகதான் தேவையில்லாமல் கெத்து, கௌரவம் பார்த்து... பாமகவை திமுக நழுவ விட்டு விட்டது.. இப்போது திமுக மீதான சரமாரி விமர்சனமும் பாமக தரப்பில் விழுந்து கொண்டே இருப்பதால், இனி பாமக நிச்சயம் திமுக பக்கம் வரவே வராது என்பதும் தெளிவாகி வருகிறது.

ஆதாயம்

ஆதாயம்

ரஜினி குரூப்பை பொறுத்தவரை, நடந்து முடிந்த தேர்தலில் பாமக வாக்கு வங்கியின் மீது கண் விழுந்துள்ளது.. இது தங்களுக்கு பலமாக அமையும் என்றே கணக்கு போட்டுள்ளதாகதால், தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டு களம் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்... தமிழக அரசியலில், சாதி அரசியல்தான் சரமாரி பேசும்.. நின்று விளையாடும்.. அந்த விஷயத்தில் பாமகவை தட்டி தூக்கியுள்ளது ரஜினி குரூப்... ஆக ரஜினி மூலம் ஆதாயத்தை தேட பாமகவும், பாமக வாக்கு வங்கியை வளைத்துபோட ரஜினி டீமும் சுறுசுறுப்பாகி விட்டனர் போலும்!

 
 
 
English summary
rajinikanth politics: will rajinikanth join win pmk founder dr ramadoss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X