சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியை அமித்ஷா சந்திப்பாரா.. அல்லது அவர் போய் இவரைப் பார்ப்பாரா.. பரபரக்கும் சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னைக்கு இரு நாட்கள் பயணமாக வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நடிகர் ரஜினிகாந்தும் சந்தித்து பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    தகிக்கும் தமிழக அரசியல்..! Amit Shah வருகையால் பரபரக்கும் சென்னை | Oneindia Tamil

    ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக கடந்த 2017-இல் அறிவித்தார். ஆனால் இதுவரை அவர் தொடங்கவில்லை. அவர் ஆன்மிக அரசியலை முன்னெடுக்க உள்ளதால் அவரது சித்தாந்தம் பாஜகவினுடையதுடன் ஒத்து போவதால் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு பதிலாக ரஜினி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது.

    அதற்கேற்ப 2019-இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கொண்ட மோடிக்கு ரஜினி பாராட்டு தெரிவித்தது, 370 சட்டப்பிரிவை நீக்கியதற்கு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ரஜினி பாராட்டியது என சொல்லிக் கொண்டே போகலாம்.

     "சீக்ரெட்".. அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் விஐபி.. தயாரான ரகசிய இடம்?.. தகிக்கும் தமிழக அரசியல்..!

    புதிய கல்விக் கொள்கை

    புதிய கல்விக் கொள்கை

    அதே வேளையில் ரஜினி, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அண்மைக்காலமாக ரஜினிக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதை அவரே ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியலுக்கு வருவதாக ரசிகர்களிடம் உறுதியளித்த நிலையில் வராமலும் இருக்க முடியாது.

    அரசியல் விமர்சகர்கள்

    அரசியல் விமர்சகர்கள்

    இதனால் பாஜகவில் அவர் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பாஜகவுக்கென ஒரு முகம் வேண்டும். அது ரஜினியின் முகமாக இருக்க பாஜக விரும்புகிறதாம். அதனால் ரஜினியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    ரஜினிக்கு வலை

    ரஜினிக்கு வலை

    இதுவரை தமிழக பாஜக நிர்வாகிகள் மூலம் பல முறை ரஜினிக்கு வலை விரிக்கப்பட்டும் அவர் சிக்கவில்லை, கழுவுற மீனில் நழுவும் மீனாகவே இருந்து வருகிறார். இதனால் அரசியல் சாணக்கியத்தனம் தெரிந்த அமித்ஷா, ரஜினிகாந்தை சந்தித்து பேசினால் அவர் மசிய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

    அமித்ஷா

    அமித்ஷா

    அதனால் இந்த முறை சென்னைக்கு வரும் அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அதே நேரம் சந்திப்பு போயஸ் தோட்டத்தில் இல்லாமல் லீலா பேலஸில் நடைபெறும் என்றும் மரியாதை நிமித்தமாக இருக்கலாம், இல்லாவிட்டால் அரசியல் சந்திப்பாகவும் இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் கட்சி தொடங்கவே தயக்கம் காட்டும் ரஜினி எந்த அளவிற்கு அமித்ஷாவுக்கு கை கொடுப்பார் என தெரியவில்லை.

    English summary
    Will Rajinikanth meet Amitshah? There are so many speculations are roaming in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X