• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஸ்டாலினுக்கு வாழ்வா, சாவா நிலை".. நிரூபிக்க சான்ஸே கொடுக்காம.. ரிவர்ஸில் போயிட்டாரே ரஜினி!

|

சென்னை: திமுகவை நேரடியாக குற்றஞ்சாட்டிய ரஜினி, ஸ்வீட் எடு கொண்டாடு என்றரீதியில் திமுக தரப்பு ஏக குஷியில் இருப்பதாக சொல்லப்படுகிறது..

சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டே செல்கிறது.. திமுகவும், அதிமுகவும் ஆளுக்கு ஒரு பக்கம் வழக்கம்போல களப்பணிகளில் இறங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதில் திமுக தரப்பு மட்டும் அதிரடிகள் ஏதுமின்றி சற்று மந்தமாகவே காணப்பட்டது.. இந்த தேர்தலை பொறுத்தவரை ஸ்டாலினுக்கு மிக முக்கியமான தேர்தல்.. அரசியலுக்கு வந்து 40 வருஷம் ஆகியும், மேயர், துணை முதல்வர் போன்ற உயர்ந்த பதவிகளை வகித்தும் முதல்வர் என்ற கிரீடத்துக்காக ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சி அளப்பரியது.. 10 வருட உழைப்பும் அடங்கி உள்ளது.

திமுகவுக்கு நேரடி சவால்.. அறிவாலயத்திற்கு எதிரே ரஜினி போஸ்டர்.. பரபரக்கும் அண்ணா சாலை!

 ஜாக்கிரதை

ஜாக்கிரதை

ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, மத்திய அரசு மீதான அதிருப்திகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், தங்கள் தரப்பு முன்னெடுப்புகளை மிக ஜாக்கிரதையாக செய்து வருகிறார்.. ஆனால், ரஜினி விஷயம் மட்டும் திமுக எதிர்பாராத ஒன்று.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

ரஜினி ஒருவேளை கட்சி ஆரம்பித்துவிட்டால், அதனால் தங்களுக்கு வாக்கு வங்கி பாதிக்கப்பட்டுவிடுமோ என்று பயந்து போனது திமுக தரப்பு.. அதற்கேற்றார்போல ரஜினியும் சமீபகாலமாக சும்மா இல்லை.. ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் போட்டது, போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தியது.. மாற்று கட்சிக்காரர்களுடன் மறைமுக பேச்சுவார்த்தை என இப்படியான செய்திகள் மீடியாவில் வெளிவந்தவாறே இருந்தன.

 வாழ்வா, சாவா

வாழ்வா, சாவா

அதுமட்டுமல், அன்று லீலா பேலஸில் பேசும்போது, "ஸ்டாலினுக்கு வாழ்வா, சாவா என்ற நிர்பந்தம் உள்ளது என்று நேரயாகவே அட்டாக் செய்தார்.. இது ஸ்டாலினின் தலைமைத்துவத்தை அசிங்கப்படுத்தி உள்ளதாகவே கருதப்பட்டது.. காரணம், பாஜக ஆதரவாளர் என்றுதான் ரஜினி இதுநாள் வரை கருதப்பட்டு வந்தார்.. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 12 சதவித சிறுபான்மையினரின் வாக்குகள் ரஜினிக்கு போகவிடாமல் தடுக்கப்படும் என்றும் திமுக நம்பியது.. ஆனால் அதைதான் ரஜினி அன்று உடைத்தார்.

 திமுக

திமுக

தாங்களும் இந்து மத ஆதரவாளர்கள்தான் என்ற அரசியல் யுக்தியை பிகே மூலம் கையில் எடுத்துள்ளதற்கு காரணமே ரஜினிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆக மொத்தம், இந்துமத வாக்குகள்தான் இருவருக்குமே குறி. இந்த அளவுக்கு திமுகவை நேரடியாக ரஜினி அட்டாக் செய்தபோது, நம் அனைவரின் எண்ணமும் முக அழகிரி மேல் தாவியதை மறுக்க முடியாது.. இவர்கள் 2 பேருமே ஆழமான நட்பு.. பிடிமானத்தில் உள்ளவர்கள்.. ரஜினி அரசியல் பிரவேசம் என்றாலே அழகிரி பேச்சு அங்கு எழாமல் இருக்காது.. அதனால், அழகிரியை வைத்து தங்களை சீண்ட கூடும் என்றுகூட திமுக தரப்பு கருதி வந்தது.

திமுக

திமுக

இதெல்லாம்தான் திமுக தரப்புக்கு கிலியை தந்துவிட்டதாக கருதப்பட்டது.. அதனால்தான், கட்சியை ஆரம்பிக்காதவாறு ரஜினி தரப்பு டாக்டர்கள், உறவினர்கள் வைத்தே பேச்சும் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.. ஆனால், இந்த விஷயத்தில் அதிமுக தெளிவாகவே இருந்தது.. ரஜினி விஷயத்தை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை.. எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.. கருத்துகூட சொல்லாமல், காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தது.

 ஓட்டுக்கள்

ஓட்டுக்கள்

திமுக மட்டும் ஏன் பயந்தது என்று தெரியவில்லை.. ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகளும், 2 திராவிட கட்சிகளை பிடிக்காத இளைஞர்களின் ஓட்டுகளும், அப்படியே ரஜினிக்கு விழும் என்றம் நினைத்துவிட்டதாகவே தெரிகிறது. இதெல்லாம் போதாதென்று, ரவீந்திரன் துரைசாமி, கராத்தே தியாகராஜன், அர்ஜுன் சம்பத், மாரிதாஸ் போன்றோர் ரஜினியை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள்.

 பில்ட்அப்

பில்ட்அப்

ரஜினியே சும்மா இருந்தாலும், எப்படியும் அவர்தான் அடுத்த முதல்வர் என்ற பில்டப்புகளை தந்ததும் திமுகவுக்கு இன்னும் உதறலை தந்திருக்கவே செய்யும். இதன்காரணமாகவே தேர்தல் பணிகளையும் துவக்காமல் சற்று அமைதியாகவே இருந்து வந்தது திமுக தலைமை.

 அறிவாலயம்

அறிவாலயம்

நேற்று ஒரு ட்வீட்டை ரஜினி போடவும்தான் நிம்மதி பெருமூச்சு அறிவாலயத்தில் எழுந்துள்ளது. திமுக தலைமை ஏக குஷியாகி விட்டதுபோல தெரிகிறது.. "தமிழகம் மீட்போம்" என்ற அறிவிப்பும் ஜரூராக அடுத்த சில நிமிடங்களிலேயே வெளியாகி விட்டது.. எப்படியும் இன்னும் ஓரிரு தினங்களில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களுக்கான அறிவிப்போ, அல்லது பிரச்சார பயண விவரங்களோ என ஏதாவது அதிரடிகள் விரைவில் அறிவாலயத்தில் இருந்து வெளிவரலாம் என்றே எதிர்பாரக்கப்படுகிறது!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Will Rajinikanth's sudden decision help DMK alliance?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X