சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கேம் சேஞ்சராக" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன?

ரஜினி கேம் சேஞ்சராக உருவெடுப்பாரா?

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றில் இருந்து ஒரு வாசகம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அது "கேம் சேலஞ்சர்" என்பதாகும்! ரஜினியின் அரசியல் வருகையை முன்னிறுத்தியே இந்த வாசகம் ட்ரெண்டாகி வருகிறது.

ஒருவழியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு ஓகே சொல்லிவிட்டார்.. ஆனால் இவர் ஓகே சொல்வதற்கு முன்பிருந்தே, இவரது ஆன்மீக அரசியல் பற்றின பேச்சு அடிபட்டது. இந்த ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதற்கு இன்னும் நமக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை என்றாலும், அந்த வார்த்தை ஃபேமஸ் ஆகிவிட்டது..

குறிப்பாக, திராவிட அரசியலுக்கு எதிரான ஒரு வார்த்தையாக ஆன்மீக அரசியல் பிரயோகிக்கப்பட்டு வருகிறது! இந்நிலையில், நேற்று ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்னதுமே, இவரை ஒரு மாற்று அரசியலுக்கான காரணியாக பார்க்க தொடங்கிவிட்டனர்.. "மாற்றம் வேண்டும், எழுச்சி வேண்டும்" என்று ரஜினிகாந்த் ஏற்கனவே சொல்லி கொண்டிருந்தாலும், ரஜினி ஒரு மாற்று சக்தி என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.

கொட்டும் மழையில் டமால் டுமீல்.. ஸ்வீட் சாப்பிட்டு ... திருச்சியை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்! கொட்டும் மழையில் டமால் டுமீல்.. ஸ்வீட் சாப்பிட்டு ... திருச்சியை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்!

 மாத்துவோம்

மாத்துவோம்

இதைதான் "கேம் சேஞ்சர்" என்ற வார்த்தை சொல்லி அழைக்க தொடங்கி உள்ளனர்.. இதற்கு காரணம் ரஜினியின் "மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்" என்ற முழக்கம்தான்.. அப்படியென்றால், ரஜினியின் குறி அதிமுக, திமுக என்ற திராவிடர் கழகங்கள்தானா? என்ற யூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றபடி ரஜினி வருகையை இந்த 2 கட்சிகளுமே மனப்பூர்வமாக விரும்பாமல்தான் உள்ளன.

 அறிவாலயம்

அறிவாலயம்

இதில் அப்பட்டமாக மனக்கசப்பை காட்டிக் கொண்டது திமுகதான்.. திமுக Vs ரஜினி என்றே களம் தயாராகி கொண்டிருக்கிறது.. ரஜினி சம்பந்தப்பட்ட எந்த போஸ்டராக இருந்தாலும், அதை அறிவாலயம் முன்னாடி கொண்டு போய் ரசிகர்கள் ஒட்டிக் கொண்டுள்ளனர். அந்த வகையில், அதிமுக, திமுகவுக்கு ரஜினிதான் மாற்றா? ரஜினி வருகையால் அதிகம் பாதிப்பு எடப்பாடிக்கா? ஸ்டாலினுக்கா என்ற ஆர்வமான சந்தேகமும் எழுகிறது.

ஆதரவு

ஆதரவு

கேம் சேஞ்சர் என்றால், 50 வருட திராவிட ஆட்சியை மாற்றியமைப்பதுதான் நோக்கம் என்கிறார்கள் ஒருசிலர்.. இதில் இந்துக்களுக்கு ஆதரவாக, ஒரு படி மேலே நின்று ரஜினியை ஆதரவை அதிமுக பெற்றுவிடக்கூடும்.. அந்த வகையில், ரஜினியை அரை மனதாககவும் ரஜினியை அதிமுக ஏற்றுக் கொள்ளவும்கூடும்... எப்படி பார்த்தாலும், அதிமுகவின் குறி திமுகதான்.. பாஜகவின் குறி திமுகதான்.. ரஜினியின் குறியும் திமுகதான்.. அந்த வகையில் இவர்கள் 3 பேருமே ஒரே புள்ளியில் இணைந்து திமுகவை எதிர்கொள்ளக்கூடும் என்பது ஒரு கணக்கு!

 ஸ்டண்ட்

ஸ்டண்ட்

இது எல்லாவற்றிற்கும் மேலாக முக அழகிரியும் ரஜினியுடன் இணையலாம்.. தேர்தல் சமயத்தில் ஸ்டண்ட் செய்து கொண்டிருக்கும் பாமகவும் இதில் இணையலாம்.. விழிபிதுங்கி கொண்டிருக்கும் அமமுகவும் இதில் இணையலாம்.. "என் நண்பர் ரஜினிதான்" என்று விடாமல் மார்தட்டி கொண்டிருக்கும் கமலும் இதில் இணையலாம்... ஆக.. இவர்கள் அனைவரும் இணைந்து திமுகவை காலி செய்ய மூலகாரணமாக இருப்பது ரஜினிதான் என்ற கணக்கின் அடிப்படையிலேயே "கேம் சேஞ்சர்" என்ற வார்த்தை ரஜினி மீது பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
Will Rajnikanth become a game changer?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X