"ஜெர்க்" ஆகும் அமித்ஷா.. ஓவர்டேக் செய்யுமா திமுக.. குழப்பத்தில் "சாமி".. அடுத்த அதிரடியில் பாஜக?
சென்னை: பாஜகவின் அழுத்தத்துக்கு பணியாமல் சுயத்தை காக்க போராடி வருகிறார் போலும் என். ரங்கசாமி.. இதனால், பாஜகவின் கணக்கு மடங்குவாரா அல்லது உயர்ந்து நின்று அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை, கடந்த 20 வருஷமாக காங்கிரசும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள்தான் மாறி மாறி ஆண்டு வருகின்றன... தமிழகத்தில் பெரும்பான்மை பெற்ற திமுக, அதிமுகவும் சரி, வன்னியர்கள் நிறைந்த புதுவையில் பாமகவும் சரி, 3, 4வது இடத்தில்தான் தள்ளப்பட்டு வருகின்றன.
இந்த லிஸ்ட்டில், கடைகோடி கட்சியாக இருந்து வருவதுதான் பாஜக.. ஆனால், முதன்மை கட்சியாக உருவெடுக்க பல கட்ட முயற்சிகளில் இறங்கி வருகிறது.

என்ஆர் காங்கிரஸ்
இப்போதைக்கு என்ஆர் காங்கிரசுக்கு 8 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேபோல பாஜகவுக்கு 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர்... இதனால் பாஜகவின் ஆதரவுடன் என்ஆர் காங்கிரஸ் கட்சியால் இயல்பாகவும், எளிதாகவும் ஆட்சி அமைத்திருக்க முடியும்... ஆனால், அது நடக்கவில்லை.. காரணம் ரங்கசாமியின் பெருத்த அமைதிதான். அதனால்தான் கவர்னர் ஆட்சி நடந்து வருகிறது.

பாஜக
எனவே வரும் தேர்தலை கணக்கு செய்து காய் நகர்த்தி வருகின்றது பாஜக.. இதில், தங்களுடன் இணைந்து என்.ஆர் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் ரங்கசாமி பாஜகவின் பிடியில் சிக்காமல் நழுவிவிட்டார்.. இப்போதுள்ள சூழலில் பார்த்தால், பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ரங்கசாமி தயங்குகிறார்.. யோசிக்கிறார்.. கலங்குகிறார். பாஜகவை நம்பி எப்படி இறங்குவது என்ற குழப்பத்திலும் இருக்கிறார்.

கூட்டணி
கடந்த மாதம் முழுவதும், இவரது ஒத்துழைப்பு மட்டும் இல்லையென்றால் பாஜக, அப்படி ஒரு அதிரடியை புதுச்சேரியில் செய்திருக்குமா என்று தெரியாது.. எனினும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அது தனக்கு எதிராக நாளைக்கு திரும்பிவிடக்கூடும் என்ற லேசான அச்சமும் அவருக்கு இருப்பதாக தெரிகிறது. அதற்கு பதிலாக தனியாகவே களமிறங்கினால் என்ன என்று ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.. எப்படியும் எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தக்கூடும் என்று கனவில் மிதந்தார் ரங்கசாமி.. ஆனால், அதுவும் இல்லாமல் போய்விடவும்தான் உச்சக்கட்ட வெறுப்புக்கு சென்றதாக தெரிகிறது.

பின்னடைவு
இதனிடையே, ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் பாஜகவுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.. ரங்கசாமியின் உதவிக்காக, அவ்வளவு பெரிய முதல்வர் வேட்பாளர் பதவியை தருவதற்கும் பாஜகவுக்கு மனசில்லை.. இதையும் ரங்கசாமி நன்றாகவே அறிவார்.. அதனால்தான் பாஜகவின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இனி செல்லக்கூடாது என்ற முடிவில் உள்ளதாக தெரிகிறது. ஆனால், ரங்கசாமி இப்படி யோசிப்பதே அமித்ஷாவின் பிளானுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது போலவே பார்க்கப்படுகிறது.. பாஜகவின் திட்டங்களை நிறைவேற்றும் விஷயத்தில், கொஞ்சமும் பிடிகொடுக்காமல் இருக்கிறார் ரங்கசாமி.

அழைப்பு
இன்னொரு பக்கம் ரங்கசாமிக்கு மவுசும் கூடி வருகிறது.. திமுக இவருடன் கைகோர்க்க விரும்புகிறது.. மய்யம் விரும்புகிறது.. இப்படி பல்வேறு தரப்பில் இருந்து, ரங்கசாமிக்கு அழைப்பு வந்தபடியே இருப்பதற்கு காரணம், எந்த காரணம் கொண்டும் பாஜக புதுச்சேரியில் காலூன்றிவிடக்கூடாது என்பதற்காகத்தான். இப்போது 2 ஆப்ஷன்கள்தான் ரங்கசாமிக்கு உள்ளது.. பாஜகவுடன் இணைவது, அல்லது தனித்து களமிறங்குவது.

அமித்ஷா
இதில் பாஜகவுடன் இணைந்தால், கூட்டணி வலுவாகும்.. ஆட்சியும் அமைக்கலாம்.. ஆனால், ரங்கசாமியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா என்று தெரியாது.. எனினும், தனிப்பட்ட முறையில் களம் கண்டால், ரங்கசாமிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.. பாஜகவுக்கும் ஒரு ஜெர்க் தந்த மாதிரியும் இருக்கும்.. அவர்கள் பிடியில் இறுதிவரை செல்லாமல், சுதந்திரமாக செயல்படவும் முடியும்.

பிளான்
அதுமட்டுமல்லாமல், ரங்கசாமியை பொறுத்தவரை எதையும் பக்காவாக பிளான் செய்து கொண்டுதான் களத்தில் குதிப்பார்.. இப்படித்தான் அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில், அதிமுகவுடன் கூட்டணி என, அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் எகிறியவர்தான் ரங்கசாமி.. இந்த முறை திமுக பக்கம் ரங்கசாமி சேர்ந்துவிட்டால், அமித்ஷா பிளான் க்ளோஸ் ஆகிவிடுவதுதான்.. ஆனாலும், பாஜகவை லேசில் எடை போட முடியாது.. அதிலும் தேர்தலுக்குப் பின்பு உள்ள பாஜகவின் ஆட்டத்தை யாராலும் கணிக்கவும் முடியாது. எப்படி பார்த்தாலும் இதில் ரங்கசாமி என்ன முடிவு எடுப்பார்? பாஜக வலையில் சிக்குவாரா? தப்புவாரா? பார்ப்போம்..!