சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கன நடவடிக்கையாக அதிரடி முடிவு... பயணிகளுக்கு வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியை படிப்படியாக குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், கோயம்பேடு முதல் பரங்கி மலை வரையிலும் மெட்ரோ ரயில்கள் இருவழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதேபோல் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டரல், அண்ணா நகர் திருமங்கலம் கோயம்பேடு, வடபழனி வழியாகவும், விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.

will reduced air conditioners in chennai under metro stations: says chennai metro

இதில் அலுவலகத்துக்கு செல்வோர், வர்த்தகர்கள்,பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.ஆரம்பத்தில் பயணிகள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருந்த நிலையில், முழு திட்டமும் செயல்பபடுத்தப்பட்ட பின்னர் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பயணிகளின் வருகைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும், செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளையும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள் அப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்

அதன்படி, சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி கிடைக்க காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.. மின்சார செலவீனத்தை குறைக்கவும் தண்ணீர் சிக்கனத்திற்காக இந்த நடவடிக்கைளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

English summary
chennai metro announced that will reduced air conditioners in chennai under metro stations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X