சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஸ்டத்தை சுத்தம் செய்ய முதல் அஸ்திரம்.. பதவிகளுக்கு வேட்டு வைக்கும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் ஷாக்!

தனது கட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பதவிகள் இருக்கும், தேர்தலுக்கு பின் பதவிகள் நீக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: தனது கட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பதவிகள் இருக்கும், தேர்தலுக்கு பின் பதவிகள் நீக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சிஸ்டத்தை சுத்தம் செய்ய ரஜினி எடுக்கும் முதல் ஆயுதமாக இது பார்க்கப்படுகிறது.

Recommended Video

    ரஜினிகாந்த் பத்திக்கையாளர் சந்திப்பு

    நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் மாவட்ட செயலாளர்கள் உடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவரின் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனக்கு முதல்வர் ஆசை இல்லை என்று அறிவித்துள்ளார். வேறு ஒரு நல்லவரை முதல்வராக்குவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார்.

    அதிமுக, திமுக பதவிகளில் உள்ளவர்கள் டெண்டர் ஊழல்.. ரஜினிகாந்த் பகீர் குற்றச்சாட்டு அதிமுக, திமுக பதவிகளில் உள்ளவர்கள் டெண்டர் ஊழல்.. ரஜினிகாந்த் பகீர் குற்றச்சாட்டு

    ரசிகர்கள் அதிர்ச்சி

    ரசிகர்கள் அதிர்ச்சி

    நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சில் தமிழக அரசியலை சுத்தம் செய்ய மூன்று திட்டங்களை அறிவித்தார். அவரின் முதல் திட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த் தனது பேச்சில், நான் 2018லேயே தமிழக அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று இப்படி கூறினேன். சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலில் இறங்கினால் தவறு. அதற்கு நான் சில திட்டங்களை வைத்து இருந்தேன்.

    பெரிய கட்சிகள்

    பெரிய கட்சிகள்

    அதில் முதல் திட்டம் பற்றி சொல்கிறேன். தமிழகத்தில் பெரிய கட்சிகள் திமுக, அதிமுக ஆகியவை. அவர்களிடம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கட்சி பதவிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர்கள் உழைப்பார்கள். தேர்தலுக்கு பின் கட்சியில் இருக்கும் யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் ஆளும் கட்சி ஆட்கள் என்று கூறிக்கொண்டு இந்த பதவியில் இருக்கும் நபர்கள் நிறைய முறைகேடுகளை செய்வார்கள்.

    என்ன முறைகேடு

    என்ன முறைகேடு

    டெண்டர் எடுப்பது தொடங்கி பல முறைகேடுகளை செய்வார்கள். ஆளும் கட்சி என்ற சக்தியில் அவர்கள் இப்படி செயல்படுவார்கள். இவர்களை தட்டி கேட்க முடியாது. இதை பலர் தொழிலாக செய்து வருகிறார்கள். கட்சி பதவிதான் திமுகவில், அதிமுகவில் பலருக்கும் தொழில். அவர்களுக்கு வேறு தொழில் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், இதை செய்ய கூடாது. தேர்தல் நேரத்தில் என்ன பதவி தேவையோ அதை வைத்துக்கொண்டு, தேர்தலுக்கு பின் அதை பதவிகளை நீக்கிவிட வேண்டும்.

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரத்தில் சிறப்பு பதவிகளை உருவாக்கலாம். தேர்தலுக்கு பின் அந்த பதவிகளை நீக்கிவிட வேண்டும். ஒரு வீட்டில் கல்யாணம் நடக்கும் போது சமையல்காரர் உட்பட பல பணியாளர்கள் இருப்பார்கள். கல்யாணம் முடிந்த பின், அவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள். அவர்கள் எப்போதும் வீட்டில் இருக்க மாட்டார்கள் . அதேபோல்தான் தேர்தல் நேரத்தில் என்ன பதவி தேவையோ அப்போது மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பின் அந்த பதவிகளை நீக்க வேண்டும். தேவையான பதவிகள் மட்டும்தான் நிரந்தரமாக இருக்கும். அதுதான் முதல் மாற்றம், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.

    என்ன விமர்சனம்

    என்ன விமர்சனம்

    ரஜினியின் இந்த பேச்சுக்கு இரண்டு விதமான ரியாக்சன்கள் வருகிறது. முதலாவது, நடிகர் ரஜினிகாந்த் கொண்டு வந்த இந்த திட்டம் வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதாவது தேர்தல் நேரத்தில் பதவிகளை உருவாக்கிவிட்டு, தேர்தலுக்கு பின் அதை நீக்குவது வேறு கட்சியில் இல்லை. அதாவது வட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பல்வேறு பதவிகள் குறித்து ரஜினி பேசி உள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்த பதவிகள் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    முழுக்க முழுக்க புதுசு

    முழுக்க முழுக்க புதுசு

    இது முழுக்க முழுக்க புதிய செயலாகும். இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் குறையும். நான் எந்த கட்சி தெரியுமா? என்னோட பவர் என்னன்னு தெரியுமா என்று கூறிக்கொண்டு பலர் முறைகேடு செய்வதும். அரசியல் பலத்தோடு பிரச்சனை செய்வதும் இதனால் பெரிய அளவில் குறையும். இதை ரஜினிகாந்த் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். கண்டிப்பாக இது அரசியல் சிஸ்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குண்டாயிசம் பெரிய அளவில் குறையும்.

    ஆனால் சிக்கல்

    ஆனால் சிக்கல்

    ஆனால் இந்த திட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் எங்களுக்கு பொறுப்பு கொடுத்து, எங்களை பயன்படுத்திவிட்டு, தேர்தலுக்கு பின் எங்களை தூக்கி போடுவது எப்படி சரியாக இருக்கும். நாங்கள் என்ன கருவேப்பிலையா, வாசனை போனதும் பதவியை பறிக்க என்று ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.

    அட போங்க

    அட போங்க

    நாங்கள் உழைப்போம், அதன்பின் ஆட்சிக்கு வந்தால் எங்கள் பதவியை பறிப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம் என்று ரஜினி ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். ரஜினி வெளியிட்ட அரசியல் மாற்றம் குறித்த அறிவிப்புகளில், இந்த ஒரு அறிவிப்பு மட்டும்தான் செயல்படுத்த கூடிய வகையில் உள்ளது. ஆனால் இதற்கும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    Will remove posts in Party after the election, Actor Rajini Kanth plan sparks fire in Makkal Mandram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X