சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதை விடுங்க.. சசிகலா தலைமையில் "அணி" அமையுமா.. மக்கள் நினைப்பு இப்படி இருக்கே.. காத்திருக்கு கலாட்டா

சசிகலா தலைமையில் 3வது அணி அமையுமா

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா பற்றி அதிமுக என்ன நினைக்கிறது என்பது இருக்கட்டும்.. நம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.. 3வது அணி பற்றின பேச்சு தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.. ஒருவேளை அந்த 3வது அணி சசிகலாதானோ? அப்படி அவர் தலைமையில் அணி அமைந்தால் அதிமுக எப்படி எதிர்கொள்ளும்? திமுக எப்படி சமாளிக்கும்? இதுதான் நம் கேள்வி.

பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலா இவ்வளவு நாள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். இதனால் சட்டமன்ற தேர்தலில் அவரது பங்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று, தன்னுடைய டார்கெட்டை கையில் எடுத்துள்ளார்.. இதையடுத்து, அவரை சில அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் சந்தித்து பேசினர்..

 சந்திப்பு

சந்திப்பு

சரத்குமாரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர்.. மேலும் முக்கிய புள்ளிகள் பலர் அவரை சந்திக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

உடல்நலம்

உடல்நலம்

இத்தனை பேரும் அவரை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்தபிறகு, செய்தியாளர்களிடம், உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் சொன்னார்கள். சசிகலா வந்து பல நாட்கள் கடந்த நிலையில், ஜெ.பிறந்த நாள் அன்று மட்டும் இந்த சந்திப்புகள் அடுத்தடுத்து ஏன் நடந்தன என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அமமுக தனித்து போட்டி என்ற முடிவில் உள்ளது.

 தினகரன்

தினகரன்

தினகரன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. விருப்பமனு அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.. அப்படியானால் பொதுச்செயலாளர் தினகரன் என்றால், அமமுகவிற்கு சசிகலா தலைமை பொறுப்பேற்க கூடும் என்றும் தெரிகிறது.. இப்போதைக்கு அந்த கட்சியில் உறுப்பினர்கூட இல்லாத நிலையில் அமமுக எந்த அளவுக்கு தன் பலத்தை தேர்தலில் நிரூபிக்கும் என்பது எதிர்பார்ப்புதான்.

அமமுக

அமமுக

சசிகலாவுக்கு அதிமுகவில் தெரியாத பிரமுகர்களே கிடையாது.. பெரும்பாலானோர் சசிகலாவால் வாழ்வு பெற்றவர்கள் என்பதால், இதில் ஒருசிலர் எந்நேரமும் அமமுகவில் தாவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.. மற்றொரு பக்கம் முக்கிய புள்ளிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் சசிகலா தரப்பு ஈடுபட்டும் வருகிறது.. தேர்தல் தேதி அறிவிக்கும்வரை எல்லாமே சஸ்பென்ஸ் ஆக இருக்கும்நிலையில், நாம் நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.

 வாக்கு

வாக்கு

"சசிகலா தலைமையில் 3வது அணி அமைய வாய்ப்பிருக்கிறதா?" என்ற கேள்வியை நம் வாசகர்களிடம் எழுப்பினோம். "நிச்சயம் உண்டு" என்று 37.67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்.. "அமைய வாய்ப்பில்லை" என்று 38.65 சதவீதம் பேரும், "பொறுத்திருந்து பார்ப்போம்" என்று 23.69 சதவீதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள்.

 வாய்ப்பில்லையா?

வாய்ப்பில்லையா?

இந்த கணிப்பை பொறுத்தவரை ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது.. 30 வருட காலம் லாபி செய்து வந்த சசிகலாவையும், அவரது பலத்தையும் அதிமுக பிரமுகர்கள் நன்கு அறிந்திருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு சசிகலாவை பற்றி தெரிய வாய்ப்பில்லை.. அதனால்தான், நிச்சயம் உண்டு என்ற ஆப்ஷனுக்கும், வாய்ப்பில்லை என்பதற்கும் சரிசமமாகவே வாக்கை அளித்திருக்கிறார்கள். சசிகலாவிடம் ஆளுமை இருக்கிறது என்பதை அனைவருமே ஏற்று கொண்டுள்ளனர்.. அதனால்தான் பொறுத்திருந்து பார்ப்போம் என்று குறிப்பிட்ட சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.. பார்ப்போம்.. சசிகலா தலைமையில் 3வது அணி உருவாகிறதா என்று?

English summary
Will Sasikala form third front in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X