சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதே நாள்.. அதே இடம்.. ஒரு பக்கம் சசிகலா.. இன்னொரு பக்கம் எடப்பாடியார்.. நடுவில் "அம்மா"!

சசிகலா விடுதலை ஆன அன்று ஜெ. சமாதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு விஷயத்தை இன்னமும் யாருமே சரியாக ஒப்பிட்டு பார்க்கவில்லை.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மணிமண்டபம் வருகிற 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது.. அன்றைய தினமே ஜெயிலில் இருந்து சசிகலாவும் விடுதலை ஆகிறார்.. இதற்கு பிறகு என்னாகும்? அன்றைய தினம் சசிகலா பீச்சுக்கு வருவாரா? ஜெ.சமாதிக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    ஜன. 27.. விடுதலையாகிறார் சசிகலா ! பரபரப்பில் அரசியல் களம்

    மறைந்த ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு அடிக்கல் நாட்டியிருந்தார்.

    எம்ஜிஆர் சமாதி 9 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும்... ஆனால், ஜெ. நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.

    "சாதி" முத்திரை குத்தறாங்க.. எங்க தகுதிக்கேற்ப சீட் தரணும்.. இல்லாட்டி.. கெத்து காட்டும் சரத்குமார்

     முகூர்த்த நாள்

    முகூர்த்த நாள்

    இந்த நினைவிடத்தை வருகிற 26-ந்தேதி அல்லது 27-ந்தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.. பிறகு, 27-ந்தேதிதான் முகூர்த்த நாளாகும்.. அதனால் அன்றைக்கே திறந்துவிடுவது என முடிவானது.. ஒருவேளை அன்றைய தேதியில் திறப்பு விழா நடத்த முடியாமல் போய்விட்டால், பிப்ரவரி முதல் வாரத்தில் திறக்கலாம் என்ற ஐடியாவும் இருந்தது.. ஆனால், 27-ம் தேதியே திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது..

     ஜெயலலிதா

    ஜெயலலிதா

    திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவர் வரவில்லை. இதனால் முதல்வரே கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். இந்த சமயத்தில்தான், சசிகலா ரிலீஸ் ஆகி வரும் தேதியை உற்றுநோக்க வேண்டி உள்ளது.. 27-ம் தேதி வர போகிறார்.. கடந்த மாதமே அதாவது ஜெயலலிதா பிறந்த நாளைக்கு முன்பே ரிலீஸ் ஆகி சசிகலா வந்துவிடுவார் என்றும், கண்டிப்பாக ஜெ.சமாதிக்கு சென்று வணங்கிவிட்டுதான் வீட்டுக்கு செல்வார் என்றும் கூறப்பட்டது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    ஆனால், விடுதலை நாள் தள்ளிக் கொண்டே சென்ற நிலையில், வரும் 27-ம் தேதி வெளிவர உள்ளார்.. இந்நிலையில், அன்றைய தினம்தான் நினைவிடத்தை திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு தேதியை முடிவு செய்தார்களா என்று தெரியவில்லை. விடுதலையானதும் எப்படியும் ஜெயலலிதா சமாதிக்குத்தான் முதலில் சசிகலா விஜயம் செய்வார்.

     சமாதி

    சமாதி

    ஜெயிலுக்கு செல்வதற்கு முன்புகூட, போயஸ் கார்டனில் இருந்து காரில் சசிகலா, இளவரசி, டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று, பூ தூவி மரியாதை செலுத்தினர்.. அப்போதுதான் சசிகலா, ஆந்த சமாதி மேல் கையை 3 முறை ஓங்கி ஓங்கி அடித்து சபதம் செய்தார்.. இப்போது தன் சபதத்தில் சசிகலா ஜெயித்து விட்டாரா, இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால் கண்டிப்பாக சமாதிக்கு அன்றைய தினமே செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்வர்

    முதல்வர்

    ஒருவேளை சமாதிக்கு சசிகலா வரக்கூடும் என்பதாலேயே, அதிமுக தரப்பில் இந்த நாளை குறித்து வைத்து மணிமண்டபம் திறக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை.. சசிகலாவையும், முதல்வரையும் மணிமண்டப விழாவிலேயே இணைக்கும் முயற்சியும் நடக்குமா என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் 27-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Will Sasikala go to Jayalalitha Samathi on the 27th
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X