சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Sasikala is expected to be released soon| வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுக

    சென்னை: சசிகலா இன்னும் வெளியே வரவே இல்லை.. ஆனால் அதற்குள் அதிமுகவுக்குள் மெல்லிய சலசலப்பு எழுந்து வருவதாக தெரிகிறது.. குறிப்பாக ஓபிஎஸ் தன் நிலைப்பாட்டை சற்று தளர்த்தி உள்ளதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.

    இதுவரை பதவியேற்றது முதல், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே தங்களது ஒரு பிரச்சாரத்தில் கூட சசிகலாவை தாக்கி பேசியதே கிடையாது. அதேபோல, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருந்த டிடிவி தினகரனும், கொஞ்ச நாளாக அதிமுக மீது எந்த விமர்சனத்தையும் வைக்காமல் இருக்கிறார்.

    இந்த சமயத்தில்தான் பாஜக, சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாக தகவல் வந்தது. குறிப்பாக, சுப்பிரமணியசாமியும், சந்திரலேகாவும் இந்த விஷயத்தில் இறங்கியிருப்பதாக கூறப்பட்டது

    திருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தாதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா

    ஐக்கியம்?

    ஐக்கியம்?

    ஒருவேளை, அதிமுகவுக்குள் சசிகலா ஐக்கியமாக போகிறாரா, அதற்கான அறிகுறிகள்தான் இவையெல்லாமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் 10 நாளைக்கு முன்பு, திடீரென நமது அம்மா நாளிதழில், "எல்லாரும் ஒன்றுகூடி நடைபோடும் கோட்டைக்குள், சாத்தான்கள் சரசமாட முடியாது" என்ற வரிகள் அடங்கிய கட்டுரையை ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக வெளியிட்டிருந்தார்கள். அதாவது, நாங்கள் இருக்கும்போது, சசிகலாவை உள்ளே வரவிடமாட்டோம் என்று மறைமுகமாக சொன்னதாக அர்த்தம் கொள்ளப்பட்டது.

    முதுகுவலி

    முதுகுவலி

    இந்த சமயத்தில் திரும்பவும் சசிகலா விடுதலை சம்பந்தமான பேச்சு எழுந்துள்ளது. அவருக்கு உடம்பு ரொம்பவும் சரியில்லையாம். சர்க்கரை ஜாஸ்தியாகி விட்டதாம். கண்களிலும் தண்ணீர் வடிந்து கொண்டே இருப்பதாகவும், முதுகுவலி ஒரு பக்கம் குடைச்சலை தந்து அவதிப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. அதனால், விடுதலைக்கான பேச்சும், அதற்கு இன்னொருபுறம் எதிர்ப்பும் என மாறி மாறி நடந்து வருகிறது.

    தளர்வு

    தளர்வு

    ஒருவேளை சசிகலா விடுதலை ஆகிவிட்டால், அதிமுக தலைமையின் நிலைப்பாடு இப்போது எப்படி உள்ளது என்று பார்த்தால், 10 நாளைக்கு முன்பு இருந்ததைவிட சற்று தளர்வு காணப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ்ஸிடம்... "சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழகம் முடிவு செய்யும்" என்று கூறியுள்ளார். அதாவது, கட்சிக்குள் இணைக்க முடியவே முடியாது என்ற கறார் தன்மை குறைந்து போயுள்ளதாக தெரிகிறது.

    எடப்பாடியார்

    எடப்பாடியார்

    இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எம்பி தேர்தல், வேலூர் தேர்தல் முதல் கட்சிக்குள் எடப்பாடியின் செல்வாக்கு கூடி வருவதாகவே தெரிகிறது. இன்னும் நடக்க போகும் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால், எடப்பாடியாரை கையிலேயே பிடிக்க முடியாது என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

    ரவீந்திரநாத்

    ரவீந்திரநாத்

    இன்னொரு பக்கம், பாடுபட்டு, மகனை டெல்லிக்கு அனுப்பியும் 5 மாசமா போராடியும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமலேயே உள்ளது. அந்த அதிருப்தியில் உள்ள சமயத்தில், முதல்வரின் மாஸ் நாளுக்கு நாள் அதிகமாவதாலேயே, இப்படி சசிகலா வருகை சம்பந்தமான ஒரு வார்த்தையை தலைமைக்கு எதிராக, கூறியதாக தெரிகிறது.

    சிக்னல்

    சிக்னல்

    அது மட்டும் இல்லை.. எடப்பாடியாருக்கு அமைச்சர்களின் ஆதரவு அவரது கொங்கு மண்டலத்தோடு சரி.. ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு அப்படி இல்லை. ஓபிஎஸ் சசிகலா வருகை குறித்து இன்னும் ஓபனாக வரவேற்று பேச ஆரம்பித்தால், மேலும் பல அமைச்சர்கள் அதற்கு பச்சை சிக்னல் காட்டுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம்.. சசிகலா வெளியில் வந்தால், அதிமுகவுக்குள் இருந்து ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வெடித்து கிளம்பும் என தெரிகிறது.

    English summary
    sources say that sasikala will release soon from bengaluru jail and will she join again in aiadmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X