• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"3 மேட்டர்".. ஸ்டாலினுடன் சீமான் நெருக்கமானது ஏன்.. இன்று திடீர் விரிசல் ஏன்.. விஜயலட்சுமியா?

Google Oneindia Tamil News

சென்னை: ஆஹா ஓஹோவென்று முதல்வர் முக ஸ்டாலினை, சீமான் புகழ்ந்து கொண்டே இருந்தார்.. இப்போது ஏதோ விரிசல் தொடங்கி உள்ளது.. இதற்கு என்ன காரணம்? ஒருவேளை விஜயலட்சுமியா? அந்த 7 பேரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..!
சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது.. மேடைக்கு மேடை ஸ்டாலினை விமர்சித்து கொண்டே இருப்பார்.. ஸ்டாலினை கிண்டலடிப்பார்.. அப்படியே ஒரு பாட்டு பாடுவார்.. ஸ்டாலின் பேசியதுபோலவே பேசியும் காட்டுவார்.. தன்னுடன் மோத ரெடியா என்று சவால் விடுவார்..

5 கொரோனா நோயாளிகளுக்கு.. மலக்குடல் இரத்தப்போக்கு.. ஒருவர் உயிரிழப்பு.. தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி! 5 கொரோனா நோயாளிகளுக்கு.. மலக்குடல் இரத்தப்போக்கு.. ஒருவர் உயிரிழப்பு.. தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி!

இதெல்லாம் திமுகவின் மீதான அதிருப்திதானே தவிர, ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபர் மீது கிடையாது.. அதனால்தான், ஸ்டாலின் பதவியேற்றதும் தன்னுடைய வாழ்த்தை ஓடோடி வந்து சொன்னார் சீமான்.

சீமான்

சீமான்

அதேசமயம், திமுகவும், சீமானின் கடந்த கால விமர்சனங்களை எல்லாம் மனசில் வைத்து கொள்ளவில்லை.. எப்படி ராமதாஸை மதிக்கிறதோ, எடப்பாடிக்கு முக்கியத்துவம் தருகிறதோ, விஜயகாந்த் மீது பாசம் ஏற்படுகிறதோ, அப்படியேதான் சீமானையும் அணுகினார் ஸ்டாலின்.. சீமானின் அப்பா இறந்தபோது, சீமானுக்கு போன் செய்து ஆறுதல் சொன்னதுடன், இரங்கல் அறிக்கையும் விடுத்தார் ஸ்டாலின்.

 தடுப்பு பணி

தடுப்பு பணி

இந்த சம்பவம் சீமானை ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது.. அதனால்தான், தலைமை செயலகத்துக்கு ஓடி வந்து நன்றியை சொன்னார் சீமான்... ஸ்டாலினையும், கொரோனா தடுப்பு பணிகளையும் புகழ்ந்து நாலு வார்த்தை பேசினார்.. இதற்கு பிறகுதான் ஒரு முக்கிய தகவல் கசிந்தது.. ஒருவேளை அடுத்த தேர்தலை குறிவைத்து, இப்போதே திமுகவுடன் இணக்கமான போக்கை சீமான் கையில் எடுப்பதாக சொல்லப்பட்டது..

கமல்

கமல்

திமுகவுடன் கமல் கூட்டணி வைக்க போகிறார் என்பதை கேள்விப்பட்ட உடனேயே, கமலை ஒதுக்கிவிட்டு தனித்து போட்டியிட்ட சீமான்.. திமுகவுடன் இப்போது இணைவாரா என்ற கேள்வியும் எழவே செய்தது.. அதேசமயம், சீமான் இந்த முறை 6.7 சதவீத வாக்குகளுடன் சுமார் 30 லட்சம் ஓட்டுகளை பெற்றதையும் திமுகவின் கவனத்தை ஈர்த்துள்ளது.. வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் சீமானின் பலம் மேலும் கூட செய்யும்.. அந்த வகையில், திமுகவின் ஓட்டுக்களையும் சீமான் பிரிக்கவே வாய்ப்புள்ளது..

அச்சாரம்

அச்சாரம்

அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க, திமுகவும் அச்சாரம் போட்டு வருவதாக சொல்லப்பட்டது. ஆனால்,கடந்த சில தினங்களாகவே சீமான் பேச்சில் மாறுபாடுகள் தெரியவருகிறது.. வேறுபாடுகள் உணர முடிகிறது.. திமுகவை சரமாரி விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.. இதற்கு என்ன காரணம்? அப்படியானால் திமுகவுடன் சீமான் கூட்டணி வைக்க மாட்டாரா? இரு தரப்பிலும் இடையில் என்ன நடந்தது என்பன போன்ற சந்தேகங்களும் நமக்கு எழுகின்றன.

 தேச உணர்வாளர்கள்

தேச உணர்வாளர்கள்

இதற்கு 3 விதமான காரணங்களும் சொல்லப்படுகின்றன.. திமுக அரசையும், ஸ்டாலினையும் பாராட்டியதை அவரது கட்சியினரும் தமிழ் தேச உணர்வாளர்களும் ஏற்கவில்லையாம்.. இதற்கு நிறைய கண்டனங்களும் சோஷியல் மீடியாவில் பதிவாக தொடங்கியது.. 10 வருடமாக திமுகவை திட்டிவிட்டு, திடீரென ஸ்டாலினை புகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

 விஜயலட்சுமி

விஜயலட்சுமி

இன்னொரு காரணம், விஜயலட்சுமி தந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போகிறதாம் திமுக.. ஏனென்றால், பாலியல் விவகாரத்தில் யாராக இருந்தாலும், அது மாஜி மணிகண்டனே இருந்தாலும் சரி, சிவசங்கர்பாபாவாக இருந்தாலும் சரி, கைது செய்து அதிரடியை கிளப்பி வரும்போது, சீமான் சம்பந்தமாக விசாரிக்காவிட்டால், அது சரியாக இருக்காது என்று கருதப்படுகிறது.. ஒருவேளை நடவடிக்கை எடுத்தால், காழ்ப்புணர்ச்சியில், பொய் புகாரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சொல்லி உண்மை தன்மையை நீர்த்து போக செய்யலாம் என்று சீமான் பிளான் செய்கிறாராம்.

 7 பேர் விடுதலை

7 பேர் விடுதலை

3வது காரணம், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவை வைத்தே சீமானின் பிளான் இருக்கும் என்று அப்போதே அரசியல் நோக்கர்கள் கருத்து சொன்னார்கள்... இந்த விஷயத்தில் தமிழ்தேச பிரச்னையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று வருத்தம் ஈழ தமிழர் ஆதரவாளர்களிடம் உள்ளது..!

கணக்கு

கணக்கு


அவர்களின் ஆதரவைதான் இப்போதுவரை சீமான் பெற்றுவருவதால், வரப்போகும் தேர்தலில் இதை வைத்து தனக்கு ஓட்டு பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்றும் சீமான் கருதுகிறாராம்.. எனவே, உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு வந்துவிடக்கூடாது என்பதற்காவே, ஸ்டாலினை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.. இந்த 3 காரணங்களில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், திமுகவிடம் இருந்து சீமான் விலக தொடங்கியுள்ளார்..!

English summary
Will Seeman not form an alliance with DMK, Why
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X