• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி!

|

சென்னை: அன்னைக்கே ஒதுக்குப்புறமா உட்கார ஆரம்பிச்சபோதே, ஒருவேளை இது லவ்வாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. இப்போது, பாசம் ஓவராக பீறிட்டு வருவதை பார்த்தால், ஷிவானி -பாலா இடையே அது கன்பார்ம் ஆகிவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

வழக்கம்போல நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியும் படுசுவாரஸ்யமாகவே நடந்தது.. இதில் பாலா ரசிகர்களின் ஆதிக்கம் பெற்று வருவது கவனிக்கத்தக்கவையாக இருந்து வருகிறது.

இதுவரை நடந்த எல்லா சீசன்களிலும் யாராவது ஒரு மாஸ் ஹீரோ பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்று விடுவார்கள்.. இவர்கள்தான் இளம்பெண்களின் மனம்கவர்ந்தவர்களாகி விடுவார்கள்.. அந்த வகையில் இந்த முறை பாலா ரீச் ஆகி வருகிறார்.

வடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்

 கேஷூவல் பேச்சு

கேஷூவல் பேச்சு

ஆரம்பத்தில் மந்தமான ஒரு போட்டியாளராகவே இவர் பார்க்கப்பட்டார்.. நாளுக்கு நாள் இவர் பேச்சு ரொம்ப கேஷூவலாக இருக்கவும், மனதில் பட்டதை ஓபனாக பேசிவிடுவதாலும் அது பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இன்னொரு பக்கம் இவர் வீட்டிற்குள் யாரை லவ் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அந்த வகையில் முதலில் கேபியுடன் பேசப்பட்டது, ஆனால் தங்கச்சி போன்ற உறவுதான் இவர்களுக்குள் இருப்பது தெரியவந்தது.

 பாலா - அர்ச்சனா

பாலா - அர்ச்சனா

இப்போது ஷிவானியை வைத்து கிண்டல் அடித்து வருகிறார்கள்... பாலா - அர்ச்சனா இடையே திடீரென ஒரு மோதல் ஏற்பட்டுவிடவும், பாலா குழந்தை போல் அழுதுவிட்டார்.. அவரை அர்ச்சனா சமாதானம் செய்து தன் தாய்மையை வெளிப்படுத்துகிறார்.. கட்டியணைத்து சமாதானமும் செய்து, குழந்தை, குழந்தை என்று சொல்லும்போதெல்லாம் அர்ச்சனாவின் அன்பு அபரிமிதமாக வெளிப்படுகிறது.

 லவ் ஸ்பாட்

லவ் ஸ்பாட்

என்றாலும், ஷிவானியை பாலா லுக் விடும்போதெல்லாம், இவரா குழந்தை? என்ற கேள்வியும் மனதிற்குள் தானாகவே எழுகிறது. வழக்கமாக லவ் ஸ்பாட் எனப்படும் அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் அன்றே பாலா ஒதுங்கியபோது நெட்டிசன்கள் மீம்களை தெறிக்க விட ஆரம்பித்தனர்.

திமிர்

திமிர்

நேற்று பாலா அழுது முடித்ததும் பாலா ஷிவானியிடம், "ரொம்ப எமோஷனலா முடிஞ்சிடுச்சி அந்த விஷயம், நம்ம திமிரா பேசுறதுனால எல்லாத்துக்கும் திமிரா தான் பேசுவாங்கன்னு செட் பண்ணிட்டாங்க" என்கிறார். அதற்கு ஷிவானி, "நீங்க அழுதுருப்பீங்கன்னு எனக்கு தெரியாது... நீங்க நேர்மையா இருக்கீங்க. அதை சொல்லுற விதம் திமிரா இருக்கு.. பட் ஆனா அது உங்க ஸ்டைல்" என்று முட்டுக் கொடுக்கவும் ஒரு மெல்லிய கரிசனம் நிழலாடுகிறது.

மழுப்பல்

மழுப்பல்

இதற்கு பிறகு சம்யுக்தா பாலாவிடம் , "ஷிவானி ஓகே சொல்லிட்டாளா?" என்று கேட்கவும் பாலா முகத்தில் அப்படி ஒரு ஷாக்.. சிரித்தபடியே மழுப்பி நகர்வதும், வெட்கப்படுவதும் என வேற லெவலில் ப்ரோமோவையும் காட்டி கிளுகிளுப்பை கூட்டி கொண்டே வருகிறது இந்த பிக்பாஸ் வீடு!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Will Shivani and Bala's friendship ends in love?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X