சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க சொன்ன மாதிரி ஆட்சி கவிழல.. ராஜினாமா செய்வீங்களா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை, ஆகையால் ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியானது.

இதில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களை கைப்பற்றியது. திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியும் ஒரு தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா? இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா?

அமைச்சர்கள் மரியாதை

அமைச்சர்கள் மரியாதை

பாஜகவுடன் கூட்டணி வைத்ததே அதிமுகவின் இந்த சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சி.பா. ஆதித்தனாரின் 38ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மா.பா.பாண்டியரஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கட்சி முடிவு செய்யும்

கட்சி முடிவு செய்யும்

இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உள்ளாட்சிதேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொள்கை முடிவு என்பதால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவுசெய்யும் என்றார்.

சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா! சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா!

திமுக வெற்றி

திமுக வெற்றி

இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, அதிமுக அரசு தொடர தமிழக மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக பார்க்கிறோம். மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்று விட்டது.

ராஜினாமா செய்வாரா?

ராஜினாமா செய்வாரா?

திமுகவின் வெற்றியைப் பொறுத்தவரை, அது முதலையின் வாயில் சிக்கிய தேங்காய். அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை; அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா? என கேள்வி எழுப்பினார்.

ஏற்கமுடியாத நிலை

ஏற்கமுடியாத நிலை

பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து டிடிவி தினகரன் படுதோல்வியை சந்தித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத நபராக தினகரன் நிலை உள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Will Stalin resign? Minister Jayakumar raising question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X