சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாங்கம் சொல்வது நடக்குமா.. விஞ்ஞானம் சொல்வது நடக்குமா.. எதுவா இருந்தாலும் நாம கவனமா இருப்போம்!

வரப்போகிற டிசம்பர் மாதம் அதிக அளவு மழை பெய்யும் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிசம்பரில் கன மழை?.. எதுவா இருந்தாலும் நாம கவனமா இருப்போம்!- வீடியோ

    சென்னை: போச்சு... அப்ப டிசம்பர் மாசம் நம்ம நிலைமை அவ்வளவுதானா?

    ஒரு வருடம் துவங்கி போக போக... அடிவயிற்றில் பயம் வந்து கன்னாபின்னாவென்று தொத்தி கொள்கிறது... அதுவும் வருட இறுதி நெருங்கிவிட்டால் இன்னும் சுத்தம்... டிசம்பர் என்றாலே மொத்தமாக பீதியில் உறைந்தே போய்விடுகிறோம்! இதற்கு காரணம் நம்மை மிரட்டி சென்ற பல இயற்கை சீற்றங்கள்தான்!

    சுனாமிக்கு பிறகு உலக அளவில் ஒட்டுமொத்தமாகவே இயற்கை தன்மையே மாறி கிடக்கிறது. எல்லாமே அளவுக்கு அதிகமாக உள்ளது. அதிகமான வறட்சி, வெயிலின் உக்கிரம், கட்டுக்கடங்காத வெள்ளம், சுழட்டியடிக்கும் சூறாவளி, புரட்டியெடுக்கும் புயல் என எல்லாமே அளவு மீறி, வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு கணக்கில்லாமல் ஆட்களும் பலியாகி வருகிறார்கள்.

    புது புயலுக்கு நிறைய சான்ஸ்.. மீண்டும் ரெட் அலெர்டுக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்! புது புயலுக்கு நிறைய சான்ஸ்.. மீண்டும் ரெட் அலெர்டுக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்!

     புயல் ராமச்சந்தின்

    புயல் ராமச்சந்தின்

    இயற்கை மாற்றங்கள் இப்படி நம்மை கிலி கொள்ள செய்கிறது என்றால், பஞ்சாங்கம் படுத்தும்பாடு அதற்கு மேல் உள்ளது. பஞ்சாங்கத்தை வைத்து வானிலையை கணிக்கும் புயல் ராமச்சந்திரன், சொன்னது எங்கே நடந்து விடுமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. புயல் ராமச்சந்திரன் வெறும் பஞ்சாங்கத்தை வைத்து கொண்டு எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் வானிலையை கணிக்க முடியும் என்று ஏற்கனவே சவால் விட்டவர்.

     நீரில் மூழ்க போகிறது

    நீரில் மூழ்க போகிறது

    கேரள வெள்ளம் எதுவானாலும் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணிப்பவர். அதற்கேற்ற மாதிரி இவர் சொன்னது எதுவும் நடக்காமலும் போய்விடவில்லை. முன்கூட்டியே இவர் சொல்பவை நடந்தும் வந்திருக்கிறது. இப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், "தமிழகம் வெள்ள நீரில் மூழ்க போகிறது, அக்டோபர் முடிந்த பிறகு டிசம்பர் வரை தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும்" என்று ஒரு வருடத்திற்கு முன்பே சொன்னார்.

     மாவட்டங்களில் வெள்ளம்

    மாவட்டங்களில் வெள்ளம்

    அதைப் போலவே வெள்ளம் சூழும் விவசாய நிலங்கள் பெருமளவு அழியும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது, எப்போதான் இந்த மழை நிற்குமோ என இஷ்ட தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என்றும் உறுதியாக அடித்து சொன்னார். அது மட்டும் இல்லை... ஏராளமான பருவ மழை பெய்து மாவட்டங்களை வெள்ளம் சூழும் என்றார். அவர் சொன்னது போலவே இப்போது புயல், சேதம் என்று போய் கொண்டிருக்கிறது. இனிமேல் என்ன ஆகுமோ தெரியவில்லை.

     7 புயல் இருக்கு

    7 புயல் இருக்கு

    பஞ்சாங்கம்தான் இப்படி சொல்கிறது என்றால் மற்றொரு பக்கம் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் தகட்டூர் செல்வகுமார் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியிலும், பொங்கல் வரைக்கும் வர்ற மழையை ஒன்னும் பண்ண முடியாது. இன்னும் 7 புயல் வரப்போகுது. அதுவும் டிசம்பர் மாசம் வாரத்து ஒரு புயல் வரப்போகுது" என்கிறார். இவர் இப்படி சொல்கிறார். இது எல்லாவற்றிற்கும் சேர்த்து நமது வானிலை ஆராய்ச்சி நிலையமும் அவ்வப்போது வரப்போகிற புயல் நிலவரங்களை புட்டு புட்டு எடுத்துவைக்கிறது.

    [EXCLUSIVE: இன்னும் 7 புயல் இருக்கு.. பொங்கல் வரை பலமான மழை இருக்கு.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார் ]

     ஆக்கிரமிப்புகள்

    ஆக்கிரமிப்புகள்

    அப்படியென்றால் டிசம்பர் எப்படி இருக்க போகிறதோ தெரியவில்லை. ஒரு புயலுக்கே இன்னும் யாரும் மீளவில்லை. அடுத்தடுத்த புயல்களை சமாளிக்க நம்மிடம் சக்தி இல்லை. கஜா புயல் பாதிப்புக்கு உன்னை பிடி, என்னை பிடி என்று அரசும், மக்களும் திண்டாடுகிறார்கள். வர்தா புயல் போய் இத்தனை வருடங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.

     கால்வாய்கள், ஏரிகள்

    கால்வாய்கள், ஏரிகள்

    அடித்து ஊத்திய மழை நீரெல்லாம் எங்கே போய் இதுநாள் வரை விழுந்தன என்றே தெரியவில்லை. பொதுப்பணித்துறை இனியாகிலும் சுறுசுறுப்பாக இறங்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது. கால்வாய்களையும் ஏரிகளையும் தூர் வாரும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

     பஞ்சாங்கமா?

    பஞ்சாங்கமா?

    பஞ்சாங்கம் சொன்னது நடக்க போகிறதோ, அல்லது விஞ்ஞானம் சொன்னது நடக்கபோகிறதோ? எதுவானாலும் நாம் எல்லாத்துக்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும். இன்னொரு கஜாவை தாங்கிற சக்தி நமக்கு கிடையாது. எப்படியாவது டிசம்பர் மாசத்தை நல்லபடியா கடந்து போய்விட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பமாக உள்ளது.

    English summary
    Will Tamil Nadu suffer from Heavy Rain in December?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X