• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சபலம்".. அதனால் விளைந்த மரணம்.. படமாகும் ஜீவஜோதியின் கதை.. பாஜகவுக்கு புதுவெளிச்சம்..!

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளார் ஜீவஜோதி.. இவரது வாழ்க்கை வரலாறை சினிமாவாக தயாரிக்க போகிறார்களாம்.. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

ஜீவஜோதி - தமிழகம் முழுக்க பரிச்சயமான ஒரு பெயர்... மறைந்த சரவண பவன் ஓனர் ராஜகோபால் இவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.. ஆனால், 3வதாக வாக்கப்பட ஜீவஜோதி விரும்பவில்லை..

இதனால் சபலம் உச்சிக்கு ஏறிய அந்த சாப்பாட்டு ராம்ராஜ்ஜியம், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸை கொலை செய்துவிட்டார்.. இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் பல வருட காலம் நடந்து வந்தாலும், கடைசிவரை தண்டனையே அனுபவிக்காமல், ஜெயிலுக்குகூட போகாமல் ராஜகோபால் இறந்துவிட்டார்.

நடிகர் சூர்யா ஒரு தற்குறி ; அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை -ஜீவஜோதி நடிகர் சூர்யா ஒரு தற்குறி ; அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை -ஜீவஜோதி

மீடியா

மீடியா

அதுவரை ஜீவஜோதியின் பெயர் மீடியாவில் அடிபடவே இல்லை.. இதற்கு பிறகு தான் மீண்டும் என்ட்ரி ஆனார்.. இதற்கு காரணம் பாஜக.. திடீரென அந்த கட்சியில் ஜீவஜோதி இணைந்தார்.. அந்த சமயத்தில் எம்பி தேர்தல் பிஸியில் தமிழ்நாடே திளைத்து கிடந்தது.. எனவே, ஏராளமானோரை தங்கள் பக்கம் பாஜக இழுத்து வந்த சமயத்தில், ஜீவஜோதியையும் அழைத்து வந்தது..

கட்சி

கட்சி

கட்சியில் சேர்ந்த உடனேயே பாஜகவின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவி இவருக்கு தரப்பட்டது.. ஒருவேளை ஜீவஜோதிக்கும் எம்எல்ஏ சீட் தர போகிறதா? அல்லது பிரச்சாரத்துக்கு ஜீவஜோதியை பயன்படுத்தி கொள்ள போகிறதா என்ற சந்தேகம் வலுத்தது. அதேசமயம், ஜீவஜோதி-க்கு என்ன அரசியல் அடிப்படை தெரியும்? அவருக்கு என்ன அடையாளம் இருக்கிறது? மக்களுக்கு இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? எதற்காக இவரை கட்சியில் பாஜக இணைத்துள்ளது? என்பன போன்ற துணை என்ற கேள்விகளும் எழுந்தன.

பாஜக

பாஜக

மேலும், ஜீவஜோதியை கட்சியில் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை பாஜக கூற விரும்புகிறது என்பதும் ஆர்வத்தை தூண்டியது.. ஆனால், இது எதுவுமே இந்த காலகட்டத்தில் நடக்கவே இல்லை.. இதற்கு பிறகும் நடக்கவில்லை.. உள்ளாட்சி தேர்தலும் விரைவில் நடக்க போகிறது. இந்த சமயத்தில், ஜீவஜோதி மறுபடியும் லைம்லைட்டில் வந்துள்ளார்.. இந்த முறையாவது, பாஜகவுக்கு உதவுவாரா? பிரச்சாரம் செய்வாரா? என்று தெரியவில்லை.. ஆனால், ஜீவஜோதி நன்றாக பேசக்கூடியவர் என்பதால், பிரச்சாரம் செய்தாலும் அது எடுபடும் என்றே கருதப்படுகிறது.

படம்

படம்

இதனிடையே, அவருடைய வாழ்க்கையை சினிமாவாக எடுக்கப் பலர் முயன்று, போட்டி போட்டு வந்தனர்.. இப்போது மும்பையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் அவரை பற்றி படம் தயாரிக்க போகிறதாம்.. ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஜீவஜோதி வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறது... முறைப்படி அதற்கான பேச்சுவார்த்தையையும் ஜீவஜோதியிடம் முடித்திருப்பதாக தெரிகிறது.. ஓகே சொல்லி ஜீவஜோதியும் கையெழுத்தும் போட்டாச்சாம்.

கொடுமை

கொடுமை

இந்த படம் எதற்காக எடுக்கப்படுகிறது என்றால், "ஒரு பெண்ணாக எதற்கும் அஞ்சாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, பல்வேறு விமர்சனங்களைக் கடந்து தனக்கான நீதியை சட்டத்தின் மூலம் பெற்றவர். பணம், புகழ் என எதற்கும் அசைந்து கொடுக்காமல், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காகக் கடைசிவரை உயிர்ப்புடன் போராடி வெற்றிகண்டவர்" என்பதாலேயே படமாக எடுக்கும் அளவுக்கு ஜீவஜோதி உயர்ந்துள்ளார்.

தேர்தல்

தேர்தல்

ஒருவேளை இந்த படம் வெளியானால், அது தேர்தலுக்கு அதாவது பாஜகவுக்கு ஓரளவு உதவுமா? அல்லது ஜீவஜோதிக்கு இந்த முறையாவது சீட் தந்தால், அதுவும் பலம் சேர்ப்பதாக அமையுமா? அல்லது ஜீவஜோதியின் அரசியலுக்கு வெளிச்சம் சேர்க்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Will the BJP give a seat to Jeevajothi this time in Local Body Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X