சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்.. என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க விமான சேவைக்கான புக்கிங் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு பயணிகள் விமான சேவை திங்கள் கிழமை தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Flight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்..

    இந்தியா முழுக்க பெரு நகரங்களில் வரும் திங்கள் கிழமை விமான சேவை தொடங்குகிறது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்க உள்ளது. இதற்கான புக்கிங் தொடங்கிவிட்டது.

    இதற்கான டிக்கெட் விலையும், பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கும் விமான சேவைக்கான புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆளுநர் கிரண்பேடி அதிரடி அனுமதி.. வரும் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு!ஆளுநர் கிரண்பேடி அதிரடி அனுமதி.. வரும் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு!

    விதிமுறைகள்

    விதிமுறைகள்

    ஏற்கனவே விமானத்தில் இப்படி பிற மாநிலங்களுக்கு செல்லும் மக்களுக்கு பல்வேறு விதிமுறைகளை மாநில அரசுகள் விதித்து இருக்கிறது. கர்நாடகாவிற்கு விமானத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் கண்டிப்பாக 7 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதேபோல் கேரளாவில் எல்லா விமான பயணிகளும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இப்படி பல மாநிலங்களில் விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    நாடு முழுக்க விமான சேவைக்கான புக்கிங் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு பயணிகள் விமான சேவை திங்கள் கிழமை தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னைக்கு விமான சேவைக்கான புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தமிழக அரசு விமான சேவையை தொடங்க இன்னும் அனுமதி வழங்கவில்லை. மே 31 வரை விமான சேவையை தொடங்க கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    கடிதம் அனுப்பியது

    கடிதம் அனுப்பியது

    இது தொடர்பாக தமிழக அரசு மத்திய விமான போக்குவரத்து துறைக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. மே 31 வரை விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று கூறியுள்ளது. ஆனால மத்திய அரசு இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. விமான சேவையில் மாநில அரசுகளே முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு நினைக்கிறது என்று கூறப்படுகிறது.

    ஆனால் தமிழகத்தின் நிலைப்பாடு

    ஆனால் தமிழகத்தின் நிலைப்பாடு

    அதேபோல் விமானத்தில் வரும் பயணிகளை எப்படி தனிமைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் தமிழக அரசு முடிவு எதையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் இந்தியா முழுக்க சென்னை வருவதற்காக டிக்கெட் புக் செய்தவர்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். எப்படி சென்னை செல்வது, சென்னைக்கு புக் செய்த விமானம் செல்லுமா என்று குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    English summary
    Will the flight service start in Tamilnadu tomorrow? : Huge confusion even after booking started.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X