ரேஷன் கடைகளில் புது மாற்றம்.. அடுத்த அதிரடியில் தமிழக அரசு.. பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை: ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை சிக்கலுக்கு ஒரு முக்கிய தீர்வை கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

அமைச்சர் தகவல்
மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. இதனிடையே, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் சட்டசபையில் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்தவகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

ஆதார் அட்டை
அதில், "இந்திய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளின் ஆதார் நம்பர், விரல்ரேகை சரிபார்ப்புக்கு பிறகு, பொருட்கள் வழங்கப்படுகின்றது. விரல் ரேகை சரிபார்ப்பு வயோதிகம் போன்ற காரணங்களால் தோல்வியுறும்போது கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னோட்டம்
98.23 சதவீத விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளன..விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லி வருவதால், கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும்" என்று விளக்கமாக தெரிவித்திருந்தார்... இந்நிலையில், அது தொடர்பாக, மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் க்கரபாணி.

அமைச்சர் சக்கரபாணி
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சக்கரபாணி, செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன... கண்கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் உள்ளது.

பயோமெட்ரிக்
இந்த சோதனை மக்கள் மத்தியில் சரியாக இருக்கும் பட்சத்தில் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்... ஆனாலும், கைரேகை பதிவுமுறையில் ரேசன் பொருட்கள் வழங்கும் நடைமுறை வழக்கம்போல் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே பயோமெட்ரிக் முறையில் சில சிக்கல்களும், குழப்பங்களும் நீடித்து வந்த நிலையில், தற்போதைய அமைச்சரின் அறிவிப்பானது ரேஷன் பயன்பாட்டாளர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.