சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தற்கொலை செஞ்சுப்பேன்".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக!

திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "திமுக புதுச்சேரியில் ஆட்சி அமைக்காவிட்டால், இதே மேடையில் தற்கொலை செய்வேன்" என்று ஜெகத்ரட்சகன் பேச்சு, தமிழக அரசியலில் இருவேறு கருத்துக்களை தாங்கி வட்டமடித்து கொண்டிருக்கிறது!

திமுக - காங்கிரஸ் இடையே தமிழகத்தில் கூட்டணி இழுபறியில் உள்ளது.. புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.. ஜெகத் ரட்சகனையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க யோசித்து வருகிறது.

இதற்கு காரணம், புதுச்சேரியில் வன்னியர் வாக்குகள் 60 சதவீதத்துக்கு மேல் உள்ளதுதான்... அத்துடன் தனித்து களம் கண்டால், அது எதிர்காலத்துக்கு நல்லது என்று திமுக கருதுவதாக தெரிகிறது.

 சீனியர்

சீனியர்

ஜெகத் ரட்சகன் திமுகவில் சீனியர் என்பதாலும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு இப்போதே தன்னுடைய அரக்கோணம் தொகுதியில் 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் வைத்துள்ள அளவுக்கு செல்வாக்கு உடையவர் என்பதாலும் அவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது. இந்த விஷயம் கேள்விப்பட்டபோதே காங்கிரஸ் தரப்பு அதிர்ந்துவிட்டது.. அதேபோல, புதுச்சேரியில் திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன் என்று ஜெகத் பேசியதை கேட்டு, திமுகவின் முக்கிய தரப்பும் அதிர்ந்துவிட்டது.

 சீனியர்கள்

சீனியர்கள்

இந்த முறை தேர்தலில் ஐபேக் டீம் என்ன சொல்கிறதோ அதைதான், திமுக தலைமை கேட்டு நடந்து வருகிறது.. அதனால், ஐபேக் மீது திமுகவின் மா.செ.க்கள் பலரே அதிருப்தியில்தான் உள்ளனர்.. இவர்களை தவிர சீனியர்கள் சிலரும் வருத்தத்தில் உள்ளனர்.. இப்போது ஜெகத் இவ்வாறு பேசியுள்ளதற்கு மேலும் சிலர் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கிறார்களாம்.

கூட்டணி

கூட்டணி

அதாவது, "தனித்து போட்டியிட்டு அல்லது ஏராளமாக செலவு செய்தால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ஐபேக் நம்புகிறது.. கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்து கிடையாது.. எப்போதோ நடந்த வாக்கு வங்கிகளை மையமாக வைத்து காங்கிரஸை அணுக கூடாது.. அவர்களின் தயவும் திமுகவுக்கு தேவை.. அப்போதுதான் வெற்றி பெறுவது ஈஸியாக இருக்கும்.." என்கிறார்கள்.

 தற்கொலையா?

தற்கொலையா?

இதுபோலவே, காங்கிரஸ் தரப்பிலும், "திமுக ஆட்சி அமைக்காவிட்டால், தற்கொலை செய்வேன் என்கிறாரே, தமிழகத்தில், திமுக ஆட்சி அமைக்காவிட்டால், யார் தற்கொலை செய்ய முன்வருவார்? ஏற்கனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டி வரும் என்பதாலேயே மதிமுக, விசிக கையை பிசைந்து நிற்கின்றன.. இப்போது காங்கிரஸையும் வேண்டாம் என்றால் எப்படி? " என்று கேட்கின்றனர். இதே விஷயத்தை பற்றி நடுநிலைவாதிகள் கருத்து சொல்லும்போது, "புதுவை அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் 30 இடங்களையும் வென்றதில்லை.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

திமுகவில் துரைமுருகன் மட்டும்தான் இப்படியெல்லாம் பேசுவார் என்று பார்த்தால்,அவரைபோலவே பலரும் இருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.. இவர்களை எல்லாம் விடுங்கள், ஸ்டாலின் என்ன முடிவில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம்.. காங்கிரஸ் உறவு வேண்டாம் என்றால் வெளிப்படையாக அதை சொல்லிவிடுவதுதான் நல்லது.. அதைவிட்டுவிட்டு, இப்படி ஆழம் பார்க்க தேவையில்லை..இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை" என்கின்றனர்.

English summary
Will there be a split between the Congress and the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X