• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக?

|

சென்னை: பதமாக கொக்கி போடுகிறதா விசிக? ஆனால் எந்த கட்சிக்கு என்றுதான் தெரியவில்லையே? திருமா ஏன் அப்படி சொன்னார்? ஒருவேளை விரைவில் கூட்டணியில் அதிரடி கிளம்பலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இப்போதைக்கு கூட்டணியில் உள்ள எந்த கட்சியுமே அதிமுகவுடன் நெருக்கமாக இல்லை.. பாஜக 60 சீட்டுக்களை மறைமுகமாக கேட்டது.. ஆனால் அதிமுக அதற்கு சரியாக பதிலளிக்கவே இல்லை.

இப்போது தனித்து போட்டி என்று பாஜக சொல்லி வருகிறது. ஒருவேளை பாஜக தானாக விலகினால் நல்லது என்றே அதிமுக கருதுகிறதாம்.. காரணம், அப்போதுதான் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறது.

பாமக, தொகுதி ஒதுக்கீடு... திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்? திருமாவளவன் சூசகம்

 பிரேமலதா

பிரேமலதா

அதேபோல, நாங்கதான் கிங் என்று சொல்லி ஏற்கனவே ஒரு சீட் தூண்டிலை போட்டுவிட்டார் பிரேமலதா.. அவர்களும் தனிக்கட்சி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. வாசன்,புதிய தமிழகம் பாஜகவுடன் படு நெருக்கமாகிவிட்டார்கள்.

 ராமதாஸ்

ராமதாஸ்

மிச்சம் இருப்பதும், மிக முக்கியமான கட்சியும் பாமகவாகும்.. இவர்கள் சமீப காலமாகவே அதிமக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.. இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூக மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசிடம் கேட்டு வருகிறது.. ஒருவேளை அது குறைவாக இருந்தால், போராட்டத்தில் ஈடுபட போகிறார்களாம். அதனால் பாமகவும், அதிமுகவுக்கு முரணாகவே இருக்கிறது.

 வாய்ப்பு

வாய்ப்பு

'பாமக ஆட்சிக்கு வந்தால்தான், எல்லாருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும், பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று டாக்டர் இப்போதேபேச ஆரம்பித்துவிட்டார்.. அதுமட்டுமில்லை. ரஜினி எப்படியும் கட்சியை துவங்கிவிட்டால், அவருடன் கூட்டணி வைப்பதற்கே, அக்கட்சி முன்னுரிமை அளிக்கும்.. மேலும் கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் அதிக இடங்களை அக்கட்சிக்கு கொடுக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும் என்பதே அதிமுகவின் தற்போதைய ஐயம்!

 கூட்டணி

கூட்டணி

இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், சீட் பேரத்துக்கு அடிபோடுவதாக தெரிகிறது.. அப்படியே இருந்தாலும், அது கூட்டணி சம்பந்தப்பட்டது என்றே கருத்தில் கொள்ளலாம். ஆனால், இதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் பாமக - திமுகவுடன் இணைய போவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.. அதேபோல, விசிக - பாமக பற்றின பேச்சும் அதிகமாக அடிபடுகிறது.. விசிகவுடன் எந்த பகையும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் ஒரு டிவி பேட்டியில் சொன்னதுதான் இந்த அரசல் புரசல்களுக்கு மிக முக்கிய காரணம்.

அணுகுமுறை

அணுகுமுறை

ஆனால், சாதிய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, பாமகவுடன் கூட்டணி அமைப்பது முட்டாள்தனமாக அமையும் என்று திருமாவளவன் விளக்கம் தந்துவிட்டார்.. இருந்தாலும், "பாமக எங்களுக்கு எதிரி அல்ல, அவர்களின் அணுகுமுறையை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை. இது சீட் பேரத்துக்கான அடித்தளமாக இருக்குமோ என்ற சந்தேகமும் லேசாக எழுந்துள்ளது.. அதேபோல, இன்னொன்னொறையும் சொல்கிறார்கள்.

 உதயசூரியன்

உதயசூரியன்

ஒருவேளை திமுக-பாமக கூட்டணி வைத்தால், அதில் நிச்சயம் விசிக இடம்பெறாது என்ற தகவலும் பரபரக்கிறது.. இந்த முறை எப்படியும் உதயசூரியன் சின்னத்திலேயே நிறைய தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ள நிலையில், கடந்த முறை எம்பி தேர்தலில் அதிருப்தியை சம்பாதித்த விசிக, இந்த முறை எப்படி இதை எதிர்கொள்ளும் என்பதும் எதிர்பார்ப்புதான்.

 திருமா

திருமா

அதுமட்டுமல்ல, போகிற போக்கை பார்த்தால், பாஜக - திமுக என்றுகூட கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.. அந்த வகையில் பார்த்தாலும் விசிக, திமுக கூட்டணியுடன் இருக்காது.. ஒருவேளை இதை மனசில் வைத்துதான், சாதீய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திருமா சொன்னாரோ? என்னவோ?

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Thol Thirumavalavan Alliance with DMK: Talks are going that VCK Leader Thol Thirumavalavan may ditch DMK Alliance in upcoming 2021 Tamil Nadu Assmebly Elections.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X