சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வாரா?

தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை

    சென்னை: தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி பல வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் தற்போது அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    அதிமுக அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாகவும், கோரிக்கை காரணமாகவும் இந்த 3 பேர் விடுதலை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    [தமிழக அரசின் அதிரடி உத்தரவு.. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை]

    ஏன் இந்த முடிவு

    ஏன் இந்த முடிவு

    பஸ் எரிப்பு வழக்கில் இவர்கள் மூவருக்கும் முதலில் தூக்கு தண்டனைதான் விதிக்கப்பட்டது. 2007ல் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 2011ல் ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்

    நன்னடத்தை பிரிவு

    நன்னடத்தை பிரிவு

    ஆளுநர் தனது சிறப்பு அதிகாரம் மூலம் இந்த விடுதலைக்கு ஆணையிட்டுள்ளார். தமிழக அரசு அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. நன்னடத்தை காரணமாக இவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    ஏழு பேர் இருக்கிறார்கள்

    ஏழு பேர் இருக்கிறார்கள்

    இதேபோல்தான் ஆளுநரின் நடவடிக்கையை எதிர்பார்த்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்று இருக்கும் பேரறிவாளன், நளினி உட்பட 7 தமிழர்கள் காத்து இருக்கிறார்கள். 27 வருடமாக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். தண்டனை அனுபவிக்க வேண்டிய காலத்தையும் தாண்டி இவர்கள் சிறையில் உள்ளனர்.

    ஏன் முடிவு எடுக்கவில்லை

    ஏன் முடிவு எடுக்கவில்லை

    இவர்கள் மீதான கருணை மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு இவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்த ஆணை மீதும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். 2 மாதங்களுக்கு முன் அனுப்பிய ஆணை மீது இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இவர்களும் ஜெயிலில் நல்ல ஒழுக்கத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் இவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்காமல் உள்ளார். மக்களின் கோரிக்கைக்கு இடையில் அதிமுகவை சேர்ந்த 3 பேர் மட்டும் விடுதலை செய்யப்படுவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Will TN governor release the 7 convicts of Rajiv case as he released the convicts of Dharmapuri case?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X