சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நவீன நாகராஜ சோழன் எம்எல்ஏ? எடப்பாடிக்கு கேட் போட பாஜகவுடன் சேரும் டிடிவி தினகரன்! கணிப்பு பலிக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு தனிக்கட்சி ஆரம்பித்து கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் இருந்து சற்று மங்கி இருந்த டிடிவி தினகரன், தற்போது மீண்டும் லைம் லைட் அரசியலுக்கு வந்திருக்கிறார். எடப்பாடிக்கு எதிராக அவர் போட்டு வைத்திருக்கும் பாஜக கூட்டணி கணக்கு பலிக்குமா? என்பதே தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டுமென பாஜக தலைமை விரும்பும் நிலையில், தனக்கான முக்கியவத்துவம் குறைந்து விடுமென்பதாக எடப்பாடி பழனிசாமி முற்றாக மறுத்து வருகிறார்.

அதே நேரத்தில் அரசியல் கிளைமேட் மாறியுள்ள நிலையில், பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்க்கு பச்சை கொடி? அதிமுகவில் பிரிவார்கள்.. தேர்தலில் ஒன்றாக சேருவார்கள்! செல்லூர் ராஜு அதிரடி! ஓபிஎஸ்க்கு பச்சை கொடி? அதிமுகவில் பிரிவார்கள்.. தேர்தலில் ஒன்றாக சேருவார்கள்! செல்லூர் ராஜு அதிரடி!

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்


ஆனால் டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் இத்தனை ஆண்டுகளாய் தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாஜிக்கள் பழைய பாசம் கண்ணை மறைத்து விடுமே என அஞ்சுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதனால் தான் தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் இணைய தயார் என டிடிவி தினகரன் வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் அதனை முற்றாக டிடிவி தினகரன் மறுத்துவிட்டார். இடையே பாஜக தலைமையின் ஆதரவும் டிடிவி தினகரனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவாக டிடிவி தினகரன் திரும்ப காரணம் என்ன? அவர் கணித்து வைத்திருக்கும் கணக்குகள் தேர்தல் களத்தில் பலிக்குமா? என்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி


2017, 2019, 2021 என மூன்று காலத்தில் தனிச்சின்னத்தில் டிடிவி போட்டியிட்டுள்ளார். 2017 இடைத்தேர்தல் பிரம்மாண்ட வெற்றி, 2019ஆம் ஆண்டில் 5 சதவீத வாக்குகளையும், 2021ஆம் ஆண்டில் 2.35 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டில் டிடிவி தினகரனுக்கு சசிகலா அளிக்கவில்லை. அனுமதி கடிதம் கொடுத்து, திமுகவை வீழ்த்த வேண்டுமென தேர்தல் களத்தில் இருந்து விலகிவிட்டார். ஆனால் என்.டி.ஏ. கூட்டணி, டிடிவி, சீமான் - கமல் என திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறியது. இறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தது.

 யானை பலத்தோடு திமுக

யானை பலத்தோடு திமுக

தற்போது தமிழக அரசியல் களத்தில் யானை பலத்தோடு இருக்கும் திமுகவை வீழ்த்தும் சக்தி யாருக்கும் இல்லை. அதனால் திமுகவை எதிர்க்கும் சக்திகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அது தற்போதைக்கு பாஜகவாக இருக்கிறது. அதன் தலைமையில் இணைந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் திமுகவுக்கு பாடம் கற்பிக்க முடியும் அதே நேரத்தில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அல்லது மூன்றாவது அணி என்பதெல்லாம் சாத்தியமே இல்லை இதனால் மீண்டும் பிரதமர் மோடி பிரதமராக வருவார் அதனால் பாஜகவில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விடலாம் என நினைக்கிறார் தினகரன்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

முதல்வராக்கிய சசிகலாவின் காலையே வாரியது, தனக்கும் பல நெருக்கடிகள் கொடுத்தது என அனைத்தையும் மறந்து அதிமுகவுடன் கரம் கோர்க்க தயாராக இருப்பதற்கு திமுக எதிர்ப்பே காரணம் என டிடிவி தினகரன் கூறுகிறார், மேலும் அதிமுகவில் தற்போதைய சூழலில் சின்னம் முடங்கி விட்டது எடப்பாடி பழனிச்சாமியால் ஒன்றுமே செய்ய முடியாது, இதனால் 1989 ஆம் ஆண்டு தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டதைப் போல மீண்டும் போட்டி என எடப்பாடி நினைத்தால் அது தவறு. ஜெயலலிதா தனி சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றதால் இரட்டை இலையை ஜானகி விட்டுக் கொடுக்கவில்லை.

கணிப்பு பலிக்குமா?

கணிப்பு பலிக்குமா?

ஆர்.எம் வீரப்பன் தலைமையிலான அணி இணைந்ததால் தான் இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது. இப்படி எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதம் படித்தால் ஜானகிக்கு ஏற்பட்ட நிலைமை தான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் இதனை பாஜக தலைமை மூலம் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். இப்படி பாஜக தலைமையை மையமாக வைத்து டிடிவி தினகரனின் அரசியல் கணிப்புகள் இருக்கிறது. அது பலிக்குமா பலிக்காதா என்பதை தேர்தல் களம் தான் முடிவு செய்ய வேண்டும்.

English summary
DTV Dhinakaran, who was a little faded from the political arena for the past few days after being excluded from the AIADMK and starting a separate party, has now returned to lime light politics. Will his BJP alliance against Edappadi work? is the current buzzword.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X