சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க 'அதை' பார்த்துக்கங்க.. நாங்க 'இதை' பார்த்துக்கிறோம்.. ஷாக்கில் தினகரன்!

தேர்தல் செலவை தினகரன ஏற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்சி தலையில் தேர்தல் செலவு, அதிர்ச்சியில் தினகரன்!- வீடியோ

    சென்னை: இப்போது குழப்பம் என்னவென்றால் வரப்போகிற 20 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பணத்தை டிடிவி தினகரன் செலவு செய்வாரா? மாட்டாரா? என்பதுதான்.

    கடந்த வாரம் மதுரையில் 18 பேருடன் ஆலோசனை நடத்திய டிடிவி, "இனிமேல் என்ன செய்யலாம்? நீங்ளே சொல்லுங்கள். மேல்முறையீடு செய்யலாமா? அல்லது தேர்தலை சந்திக்கலாமா? எதுவானாலும் சொல்லுங்கள்... நான் தயாராகத்தான் இருக்கிறேன்" என்றார்.

    ரெட் அலெர்ட் அச்சப்படுத்த இல்லை முன்எச்சரிக்கைக்காக... ஆர். பி. உதயகுமார் விளக்கம்! ரெட் அலெர்ட் அச்சப்படுத்த இல்லை முன்எச்சரிக்கைக்காக... ஆர். பி. உதயகுமார் விளக்கம்!

     முதல் ஷாக்

    முதல் ஷாக்

    இதற்கு ஆதரவாளர்கள், தேர்தல் செலவை கட்சி பார்த்து கொள்ளும் என்றால், நாங்கள் இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்றார்கள். இதைக் கேட்டதும் தினகரனுக்கு முதல் ஷாக்! ஆனாலும் வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

     அதே கேள்வி

    அதே கேள்வி

    இதையடுத்து ஆதரவாளர்கள் எல்லாரும் சசிகலாவை சென்று பார்த்தனர். சசிகலாவை பார்க்க வேண்டும் என்று எல்லோருமே ஒரு வருடமாக டிடிவியிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். தங்க.தமிழ்செல்வன் தவிர யாருமே சசிகலாவை இந்த ஒரு வருடத்தில் பார்க்காமல் இருந்தனர். நிலைமை முற்றிவிடவும் தினகரன் அவர்கள் அனைவரையும் சசிகலாவிடம் கூட்டி சென்றார். அப்போது, தினகரன் கேட்ட கேள்விகளையே சசிகலாவும் அவர்களிடம் கேட்டார்.

     தங்க. தமிழ்செல்வன்

    தங்க. தமிழ்செல்வன்

    கிட்டத்தட்ட மெஜாரிட்டி மேல்முறையீடு வேண்டாம் என்று சொல்லிவிடவும், இதையே டிடிவியிடம் சொல்லிவிட்டார் சசிகலா. தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றும் சொல்லிவிட்டார். சசிகலாவின் இந்த முடிவில் ஏகப்பட்ட சந்தோஷம் அடைந்தது தங்க.தமிழ்செல்வன்தான்!! ஏனெனில் மேல்முறையீடு வேண்டவே வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே டிடிவியிடம் சொல்லி கொண்டிருந்தது அவர்தான்!! மற்றவர்கள் ஒத்துக்கிட்டாலும் தங்க.தமிழ்செல்வனை ஒத்துக்க வைப்பதில் ரொம்ப கஷ்டப்பட்டார் தினகரன்.

     நிச்சயம் வெற்றிதான்

    நிச்சயம் வெற்றிதான்

    அதனால்தான் சசிகலாவை நேரில் பார்த்து கேட்டுவிடலாம் என முடிவு செய்து எல்லாரும் போனார்கள். ஆனால் சசிகலாவும் தேர்தலை சந்திக்கலாம் என்று சொன்னதும், முதலில் மகிழ்சியும், நிம்மதியும் அடைந்தது தங்க.தமிழ்செல்வன்தான்!! ஏனெனில் தேர்தலை மறுபடியும் நடத்தினால் கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக, தங்க.தமிழ்செல்வன் அமோக வெற்றி பெறுவார் என்பது பெரும்பாலானோரின் கணிப்பாக உள்ளது.

     செலவு??

    செலவு??

    ஆனால் எந்த முடிவானாலும் தயார் என்று சொன்ன டிடிவி, இப்படி ஒரு பதிலை சசிகலாவிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை. இது டிடிவியின் 2-வது ஷாக்!ஆனால் ஆர்.கே.நகர் என்ற ஒரு தொகுதிக்கே செலவு எகிறிவிட்டது. இப்போது 20 தொகுதிகள் என்றால் சும்மாவா? கணக்கு எங்கேயோ போய் நின்றுவிடமே என்று யோசிக்கிறார்.ஆனால் டிடிவி, இந்த தொகையை செலவு செய்துதான் ஆக வேண்டுமாம்.

     செலவு செய்ய வேண்டும்

    செலவு செய்ய வேண்டும்

    சசிகலாவை நம்பித்தான் பதவி உட்பட எதிர்காலத்தையே தொலைத்து நின்றார்கள் ஆதரவாளர்கள் அனைவரும். இந்த வருடத்திற்கும் மேலாக எத்தனை தடைகள், இடையூறுகள் வந்தாலும் தினகரனை விட்டுசெல்லாமல் கூடவே இருந்து வந்திருக்கிறார்கள், நீதிமன்ற உத்தரவு வந்தபிறகும்கூட இப்போதுவரை தங்கள் நிலைப்பாட்டில் அனைவரும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கைக்கும், பதவியை இழந்த காரணத்திற்கும் தேர்தல செலவை டிடிவி செய்தே ஆக வேண்டு என்றும் அமமுமக தரப்பில் கூறப்படுகிறது.

     செலவை சமாளிப்பாரா?

    செலவை சமாளிப்பாரா?

    மேல்முறையீடு செய்துவிட்டால் பேசாமல் நாடாளுமன்ற தேர்தல் வரை சிக்கல் இல்லாமல் ஓடிவரும் என்று மனக்கணக்கு போட்ட டிடிவி, இப்போது சசிகலாவின் வார்த்தையையும் மீற முடியாமல், ஆதரவாளர்களையும் எதுவும் கேட்டுவிட முடியாமல், பணத்தையும் செலவு செய்ய மனமில்லாமல் டிடிவி திணறியும், குழம்பியும் வருகிறார் என்று தெரிகிறது. பார்ப்போம்.. டிடிவி இதை எப்படி சமாளிக்க போகிறார் என்று!

    English summary
    Will TTV Dinakaran spend money for the Election?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X