• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உதயநிதி ஸ்கெட்ச் வேற மாதிரி.. வியூகமே வேற லெவலில்.. சட்டசபை தேர்தலில் அதிரடி காட்ட.. செம பிளான்!

|

சென்னை: நடுராத்திரி பிள்ளையார் சிலையை கொண்டு வந்து காட்டினால், ஓட்டு விழுந்துடுமா? ஸ்ட்ரைட்டா உள்ளாட்சிதுறையா? அந்த கட்சியில் சீனியர்கள் எத்தனையோ பேர் இருக்க, இவருக்கு எப்படி சீட் தந்துடுவாங்க? கட்சிக்காக செய்த வளர்ச்சி பணிகள் என்ன?" என்று உதயநிதியின் சட்டசபை வருகை குறித்த உத்தேச கேள்விக்கு சிலர் அளித்த பதில்கள்தான் இவை.

2 நாளைக்கு முன்பு அன்பில் மகேஷ் தன்னுடைய பேட்டியில், "உதயநிதி ஸ்டாலின் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் உட்பட பலர் விரும்புகிறோம். போட்டியிடுவாரா என தெரியவில்லை. ஒரு நண்பனாக என்னுடைய விருப்பம் அது" என்றார்.

மகேஷூம், உதயநிதியும் சின்ன வயசு முதலே நண்பர்கள்.. அதனால் அவர்களுக்குள் நெருக்கமும் ஜாஸ்தி.. உதயநிதி படங்களில் நடிக்க வந்த பிறகு, மன்றத்தின் பொறுப்புகளை அன்பில் மகேஷிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தார்.. இப்போது, உதயநிதி திமுக இளைஞரணி செயலாளராகவும், துணை செயலாளராக மகேஷூம் உள்ளனர்.

வாயில் நீளமான குச்சி... இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு எல்லோருக்கும் இருந்தா கொரோனாலாம் ஓடிடும்

 உதயநிதி

உதயநிதி

இதற்கு காரணமும் மகேஷ்தான்.. திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று விருப்பத்தை முதன்முதலில் சொன்னதே இவர்தான்.. இதற்கு பிறகுதான் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திமுகவினர் வரிசையாக தீர்மானம் நிறைவேற்றினர்... இதையடுத்தே உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதுபோலவே தற்போது உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட வேண்டும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம் தெரிவிக்கவும் இது சம்பந்தமான விவாதங்கள் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 குக செல்வம்

குக செல்வம்

சமீபத்தில் குக செல்வம் கட்சியை விட்டு விலகியபோதே உதயநிதியின் சட்டமன்ற வருகை குறித்த பேச்சும் அடிபட்டது.. மாவட்ட செயலாளர் பதவியும் தரவில்லை, அத்துடன் தன்னுடைய சட்டமன்ற தொகுதியையும் உதயநிதிக்குதான் தர போகிறார்கள் என்பதால்தான் செல்வம், அதிருப்தியால் கட்சியை விட்டு விலகியதாக கிசுகிசுக்கப்பட்டது.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

எனினும், கட்சியை விட்டு செல்வதால், இப்படி ஒரு காரணத்தை செல்வம் முன்னிறுத்துவதாகவே அனைவரும் கருதினர்.. ஆனால், அன்பில் மகேஷ் பேசியதும்தான், இதன் உண்மைதன்மை ஓரளவு புரிய தொடங்கியது. கடந்த முறை எம்பி தேர்தலின்போதே உதயநிதி தீவிரமான பிரச்சாரத்தை கையில் எடுத்தார்.. எதிர்பார்த்ததைவிடவும், அவரது பிரச்சார யுக்தியும், மக்களை கவரும் பேச்சும் பாராட்டத்தக்கதாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

பொறுப்புகள்

பொறுப்புகள்

அதேசமயம், பிரச்சாரம் செய்வது மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதியாகிவிடுமா? உதயநிதியைவிட சீனியர்கள் இன்னும் கட்சியில் இருக்கிறார்களே? மூத்த தலைவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகளை தந்துவிட்ட நிலையில், அடுத்த நிலையில் உள்ள 2-ம் கட்ட தலைவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுதானே சரி? உதயநிதி கையில்தான் இளைஞர் அணி பொறுப்பு உள்ளதே? இன்னும் எம்எல்ஏவும் ஆக வேண்டும் என்றால், இவ்வளவு காலம் கட்சியில் உழைத்து, சீட்டுக்காக காத்திருப்பவர்கள் நிலை என்னாகும்? என்று திமுகவில் உள்ள சிலரே முணுமுணுக்கவும் செய்கின்றனர்.

 பலே பிளான்

பலே பிளான்

ஆனால், உதயநிதி ஸ்கெட்ச் வேறு மாதிரியாக உள்ளது.. அவரது வியூகமே வேற லெவலில் உள்ளது.. திமுகவுக்கு என்று பிரசாந்த் கிஷோர் டீம் உள்ளதுபோலவே, இவருக்கென்று தனியாக ஒரு டீமை களமிறக்க உள்ளார்.. அவர்களின் ஆலோசனைபடியே ஒவ்வொரு மூவ்களும் இருக்கும் என்கிறார்கள்.

 வீடியோ கான்பரன்ஸ்

வீடியோ கான்பரன்ஸ்

அடுத்ததாக, எதிர்க்கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய நெத்தியடி பதிலை உதயநிதி தந்து வருவதை பலர் விரும்பவே செய்கிறார்கள்.. மேலும், கழக தலைவர் போலவே, உதயநிதியும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தினமும் தன்னுடைய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்... இளைஞரணி பொறுப்பாளர்களிடம் தங்கள் பகுதியில் கொரோனா தொற்றின் நிலை, திமுக கட்சியினர், இளைஞரணி செய்யும் பணிகள் குறித்து கேட்டறிகிறார்... இது இளைஞர்களுக்கு புத்துணர்வையே தந்து வருகிறது.

 நண்பர்கள்

நண்பர்கள்

இருந்தாலும் இதற்காகவே தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கப்படுமா என்பது தெரியவில்லை.. ஆனால் இப்போதே போட்டியிட்டால்தான் அது சரியாக இருக்கும் என்று உதயநிதி யோசிக்கிறாராம்.. தன்னுடைய நண்பர்கள் மகேஷூம், டிஆர்பி ராஜாவும் ஏற்கனவே எம்எல்ஏ பொறுப்புகளில் உள்ளதால், இதுதான் சரியான தருணம் என்பது உதயநிதியின் கணக்காக உள்ளதாம்.

 உள்ளாட்சி துறை?

உள்ளாட்சி துறை?

அதுமட்டுமில்லை, போட்டியிட்டு வெற்றி பெற்று, உள்ளாட்சி துறை அமைச்சர் பதவியை கைப்பற்றவும் ஒரு பிளான் இருக்கிறதாம்.. இதற்காகவே நண்பர் அன்பில் மகேஷ், உதயதியுடன் தங்கியிருந்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். ஒருவேளை உதயநிதிக்கு, திமுக தலைவர் சீட் கொடுத்தால், அதை கட்சியில் உள்ள 2ம் கட்ட தலைவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள்? என்று தெரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Will Udayanidhi Stalin to contest in Assembly polls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X