அமைச்சர் ஆன பின்.. பண்ண கூடாது! தலைமை போடும் கண்டிஷன்? உதயநிதி முன்னுள்ள "அந்த" முடிவு.. ஓவர் ஓவர்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு விரைவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வந்து உள்ளன. இந்த நிலையில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சேர்க்கப்பட்டால், அவருக்கு ஒரு முக்கியமான கண்டிஷனை ஆளும் தலைமை போட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கும் திமுக, அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு தகவல்கள், யூகங்கள் வந்த வண்ணம் உள்ளன.
உட்கட்சி தேர்தலிலும் பறக்குது உதயநிதி கொடி.. எதிர்காலத்திற்கு இப்பவே 'ரெடி’ - உற்சாகத்தில் இளைஞரணி!

அமைச்சரவை மாற்றம்
முக்கியமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட 2-3 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் செய்திகள் வந்துள்ளன. இது போக டிஆர்பி ராஜா உள்ளிட்ட சில இளம் எம்எல்ஏக்கள் அமைச்சராக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. இது போக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு இளைஞர் நலன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின்
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் காரில் புதிதாக முன் பக்கம் எக்ஸ்ட்ரா பிட்டிங் ஒன்று வைக்கப்பட்டது. இந்த பிட்டிங் இலச்சினை பொருத்துவதற்காக வைக்கப்படும் பிட்டிங் ஆகும். அவரை அமைச்சராக்க போவதால் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கு அரசு இலச்சினை இருக்கும். அதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எப்போது?
இது போக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி உதயநிதி ஸ்டாலினை திமுக அமைச்சராக அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அவர் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் திரையரங்கு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

திமுக கொண்டாட்டம்
திமுகவினர் இந்த படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் படம் பார்த்து வருகிறார்கள். அதேபோல் மொத்தமாக டிக்கெட் வாங்கி அதை இலவசமாக வழங்கி வருகிறார்கள். அவரின் மாமன்னன் படமும் தயாராகி வருகிறது. இந்த படத்தை மாறி செல்வராஜ் எடுத்து வருகிறார். இது போக ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களை உதயநிதி ஸ்டாலின் இந்த வருட இறுதிக்குள் முடிப்பார் என்று கூறப்படுகிறது.

நடிப்பாரா?
இந்த நிலையில்தான் உதயநிதி அமைச்சர் ஆன பின் அவர் படங்களில் நடிக்க மாட்டார்.. அவரின் நடிப்பு கெரியர் ஓவர் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைமை சார்பாக அவருக்கு இந்த உத்தரவு போடப்பட வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் உதயநிதிதான் இறுதி முடிவு எடுப்பார்.. அவர் முன்தான் முடிவு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் உதயநிதி சினிமா துறையை விட்டு மொத்தமாக வர மாட்டார். தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூலம் படங்களை தயாரிப்பது, வெளியிடுவது போன்ற பணிகளை மேற்கொள்வார். இன்னும் கூடுதல் படங்களை வெளியிடுவார்.. ஆனால் படங்களில் நடிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.