சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ எல்லாம் இதற்குத்தானா?.. தாத்தாவுக்கு பெருமை சேர்ப்பாரா உதயநிதி ஸ்டாலின்?

Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா நடிகரான உதயநிதி தனது தாத்தாவின் இறப்புக்கு பின்னர் முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் சென்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து அந்த கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

இதனால் உதயநிதியின் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவரது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

"மிஸ்டர் பழனிசாமி.. கிழித்து தோரணம் தொங்கவிட நான் ரெடி.. நீங்க ரெடியா".. பொங்கிய ஸ்டாலின்!

பேரணி

பேரணி

இதையடுத்து திமுக சார்பில் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி என எதையும் விடாமல் கலந்து கொண்டார். இளைஞரணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல தேவையான பணிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே உதயநிதி போட்டியிட சில திமுக தலைவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

விடியலை நோக்கி

விடியலை நோக்கி

ஆனால் உதயநிதிக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் விடியலை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் ஊர் ஊராக சென்று திமுகவுக்கு பிரச்சாரம் செய்துவருகிறார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.

உதயநிதி பங்கேற்பு

உதயநிதி பங்கேற்பு

அந்த வகையில் உதயநிதிக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் சேப்பாக்கம் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் உதயநிதி அவ்வப்போது கலந்து கொள்கிறார்.

கருணாநிதி போட்டி

கருணாநிதி போட்டி

அந்த தொகுதியில் நலத்திட்டங்களை வழங்குகிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மறைந்த ஜெ அன்பழகன். இவர் இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கருணாநிதியும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

3 முறை போட்டி

3 முறை போட்டி

இது திமுகவின் கோட்டை. இந்த தொகுதியில் 3 முறை போட்டியிட்ட கருணாநிதி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் அவர்கள் வாக்குகள் எளிதில் கிடைக்கும். ரஜினிகாந்த், எடப்பாடி, ஓபிஎஸ், பிரதமர் மோடி என யாரையும் விட்டு வைக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார் உதயநிதி.

குஷ்பு போட்டியிடுவாரா

குஷ்பு போட்டியிடுவாரா

அப்படிப்பட்ட உதயநிதி ஒரு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அது அவருக்கு மிகப் பெரிய அவமானம். எனவே சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என்பது திமுகவின் கணக்கு ஆகும். உதயநிதியை எதிர்த்து போட்டியிட சவால் விடுத்துள்ளார் குஷ்பு. ஒரு வேளை உதயநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டால் குஷ்புவும் இதே தொகுதியில் களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Will Udhayanidhi Stalin contest in Chepauk Assembly constituency instead of Thousand lights? sources says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X