India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மாட்டிக்கிச்சே".. தொக்கா சிக்கிய "தலை".. ஜம்ப் ஆகிய நிர்வாகிகள்.. சொல்லி அடித்த எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இன்றைய தினம் காலையில் இருந்தே பரபரப்புகள் தொற்றிவரும் நிலையில், சசி தரப்பு மட்டும் குஷியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே எடப்பாடிக்கு 2 விதமான டென்ஷன் ஏற்பட்டது.. ஒன்று பொதுக்குழு விவகாரம், மற்றொன்று, சசிகலா விவகாரம்.

நாங்க இருக்கோம்! ஒரு கை பாத்துருவோம்! தந்தைக்காக களமிறங்கிய 'தனயன்கள்.. சூடுபிடித்த அதிமுக ரேஸ்.! நாங்க இருக்கோம்! ஒரு கை பாத்துருவோம்! தந்தைக்காக களமிறங்கிய 'தனயன்கள்.. சூடுபிடித்த அதிமுக ரேஸ்.!

சீனியர்கள்

சீனியர்கள்

பொதுக்குழு விவகாரம் இந்த அளவுக்கு விஸ்வரூபமெடுக்கும் என்று எடப்பாடிக்கு முன்பு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான், சசிகலா விஷயத்தில் மும்முரமானார்.. அதாவது, அதிமுகவின் அதிருப்திகள், மற்றும் சீனியர்களின் நடவடிக்கைகள் எப்படி உள்ளன, அதிலும் அதிருப்தியாளர்களின் செயல்பாடுகள், பேச்சுக்கள் எப்படி உள்ளன? நடக்க போகும் பொதுக்குழு கூட்டத்தை அவர்கள் அணுகும் விதம் எப்படி இருக்க போகிறது என்பதெல்லாம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாராம்.. காரணம், எம்பி சீட் விவகாரத்தில், பொன்னையன் அப்செட்டில் இருந்தார்.. செம்மலை அப்செட்டில் இருந்தார்.. வைத்திலிங்கம் அப்செட்டில் இருந்தார்..

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இவர்கள் எல்லாம் சசிகலா பக்கம் எந்நேரமும் தாவக்கூடும் என்ற பேச்சு சமீப நாட்களாகவே உள்ள நிலையில், இவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது எடப்பாடிக்கு மட்டுமல்ல, சசி தரப்பின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. ஒருவழியாக பெரும்பாலானவர்களை எடப்பாடி தன் பக்கம் திசை திருப்பிவிட்டார் என்றே சொல்லலாம்.. ஆனாலும், இதில், வைத்திலிங்கம் மட்டும் மிஸ்ஸிங் என்று தெரிகிறது.. சில நாட்களுக்கு முன்புவரை வைத்திலிங்கம் போட்ட கணக்கு வேறு விதமாக இருந்தது.

முட்டுக்கட்டை

முட்டுக்கட்டை

தஞ்சை மண்டலத்தை தன் பிடியில் வைத்திருப்பவர் வைத்திலிங்கம்.. சசிகலாவின் ஆதரவாளராகவே தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்.. தஞ்சை மண்டலம்தவிர, கொங்குவிலும் தன் செல்வாக்கை நிலைநாட்ட நிறையவே முயற்சிகளை மேற்கொண்டார்.. இந்த விஷயம் தெரிந்துதான், அங்குள்ள மாஜி அமைச்சர் ஒருவர், இதற்கு முட்டுக்கட்டை போட்டார்.. மேலும் வைத்திலிங்கம் மீதே ஊழல் புகார் வழக்குகளை தொடுக்கும் அளவுக்கு பின்னணியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.. அதனால், வைத்திலிங்கத்தினார் கொங்குவில் கால் ஊன்ற முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இப்போது விஷயம் என்னவென்றால், தற்சமயம் இவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.. எடப்பாடி மீது ஏற்கனவே வைத்திலிங்கத்துக்கு நிறைய மனக்கசப்புகள் இருக்கின்றன.. அதனால்தான் ஓபிஎஸ் பக்கம் ஆதரவாக நின்றுள்ளார்.. ஆனால் இதுவே அவருக்கு இன்று மைனஸாகி கொண்டிருக்கிறதாம்.. அதாவது, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்கப்போய் தஞ்சை மண்டலத்தில் தனது செல்வாக்கை தொலைத்து வருகிறாராம் வைத்திலிங்கம்.. தன் ஆதரவாளர்கள், தன்னை மீறி போகமாட்டார்கள் என்று கணக்கு போட்டு வைத்திருந்தார்.

காந் தி - தாவல்

காந் தி - தாவல்

ஆனால், பலரும் எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர்.. குறிப்பாக, தன்னுடைய வலதுகரமாக இருந்த காந்தி, எடப்பாடி பக்கம் செல்வார் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லையாம்.. தஞ்சை மண்டலத்தின் பெரும்பாலான ஒன்றிய செயலாளர்களும் எடப்பாடி பக்கமே இன்று நிற்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தரபோய், தன் செல்வாக்கை இழக்க நேரிடுகிறதே என்ற டென்ஷன் வைத்திலிங்கத்துக்கு சூழ்ந்துள்ளதாம்.. இதற்கெல்லாம் பின்னணி என்னவென்றால், இந்த ஒரு வருட காலமாகவே, வெறும் எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படாமல், ஒட்டுமொத்த அதிமுகவையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர பலமுயற்சிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வந்தாராம்.

பச்சை கொடி

பச்சை கொடி

அதன்படிதான், தஞ்சை மண்டலத்தையும் தன் பிடியில் கொண்டுவர, மாஜி அமைச்சர் காமராஜை களத்தில் இறக்கிவிட்டு, இன்று சாதித்து காட்டியதாக சொல்கிறார்கள். இனி தஞ்சை மண்டல செல்வாக்கை, மீண்டும் நிலைநாட்ட வைத்திலிங்கம் என்ன செய்ய போகிறார்? ஓபிஎஸ்ஸுக்கே ஆதரவு தொடர்ந்து தருவாரா? அல்லது சசிகலா பக்கம் செல்வாரா? என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், தஞ்சை மண்டலத்திலும் எடப்பாடி கொடி "இப்போதைக்கு" பறக்கிறது எனலாம்..

  ADMK உருவான Flashback! DMK பொதுக்குழுவால் நீக்கப்பட்ட MGR! | *Politcs | OneIndia Tamil
  கட்டிப்பிடித்து நட்பு

  கட்டிப்பிடித்து நட்பு

  இதனிடையே, இன்னொரு தரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. ஒரு திருமண விழாவுக்கு சென்ற வைத்திலிங்கம், அங்கே அமமுக துணை பொதுச்செயலாளர் ரங்கசாமியை யதேச்சையாக சந்தித்துள்ளார். அப்போது இருவருமே கைகுலுக்கி ஆரத்தழுவி கொண்டார்களாம்.. இதை பார்த்த அங்கிருந்த அதிமுக, அமமுக தரப்பினர் ஆச்சரியப்பட்டு நின்றுள்ளனர்.. ஏற்கனவே சசிகலா பக்கம் வைத்தியலிங்கம் தாவுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அமமுகவின் முக்கிய தலைவரை ஆரத்தழுவியது மிகப்பெரிய சந்தேகத்தையும், எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.. சசிகலா - தினகரன் இருவருக்குள்ளும் தற்போது இணக்கமான சூழல் காணப்படாத நிலையில், வைத்திலிங்கம் எங்கே இணைவார்? அவரது அடுத்த பிளான் என்ன? என்பதுதான் சஸ்பென்ஸ்ஸாகவே நீடிக்கிறது.

  English summary
  Will Vaithilingam continue to support ops and What is happening in admk Tanjore region எடப்பாடி பழனிசாமி தஞ்சை மண்டலத்திலும் தனக்கான ஆதரவை நிலைநாட்டியுள்ளாராம்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X