சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 2 தானாமே.. ரூட்டை மாற்றுகிறதா.. வெலவலக்கும் கூட்டணி.. படபடக்கும் சிறுத்தைகள்!

அதிமுகவுடன் விசிக கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் விசிக தொடருமா, அல்லது விலகுமா என்ற சந்தேகம் எழுந்தபடியே உள்ளன.. இதனால், நாளுக்கு நாள் தமிழக அரசியலில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டபடி யே உள்ளன.

வழக்கம்போல, இந்த முறையும் விசிகவுக்கு சின்னம் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.. விசிகவுக்கு என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்..

அந்த கட்சிக்கென்று அடிப்படை உள்ளது.. கொள்கை உள்ளது.. கால் நூற்றாண்டாக தமிழகத்தில் களம் கண்டு வரும் கட்சி.. அந்த வகையில், தனித்தன்மை என்ற ஒன்று விசிகவுக்கு தேவையானதாக இருக்கிறது..!

 ஒற்றை இலக்கு

ஒற்றை இலக்கு

ஆனால் திமுகவை பொறுத்தவரை , இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. கூட்டணிகளுக்கு தொகுதிகளை அள்ளி தந்துவிட்டு, பெரும்பான்மையை இழக்கவும் அக்கட்சி விரும்பவில்லை... அதனால், இரட்டை இலக்கம் கேட்டு வந்த விசிகவுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் தரப்படலாம் என்று சொல்லப்பட்டது.

 விசிக

விசிக

கடைசியில் 2 சீட்தான் விசிகவுக்கு தரப்படும் என்று சொல்லப்பட்டதாகவும் இதை கேட்டு திருமா கடுமையான அப்செட்டாகி விட்டதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தன.. ஆனால் அதற்கு பிறகு இப்போதுவரை கூட்டணியும் முடிவாகவில்லை.. விசிகவுக்கு எத்தனை சீட் என்பதும் வெளிப்படையாக தெரியவில்லை..

 சின்னம்

சின்னம்

விசிகவை பொறுத்தவரை, ஒவ்வொரு முறையும் புது சின்னம் அதிகமாக கிடைக்கிறது.. இதுவரை, இக்கட்சிக்கு என்று நிலையான சின்னம் கிடையாது.. அந்த புது சின்னம்கூட கடைசி நேரத்தில் தான் தரப்படுகிறது. அதனால், அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது.. அதனால் தரப்படும் சீட்களில் பாதி உதயசூரியன் சின்னத்திலும் மீதி தனிச்சின்னத்திலும் நிற்கலாமா என்றும் யோசித்தது.

 திருமா

திருமா

ஆனால், திருமாவை சந்தித்த ஸ்டாலினின் பிரதிநிதி, 2 சீட் என்ற தகவலை சொன்னதுமே திருமா, சற்று அதிர்ந்துதான் போய்விட்டாராம்.. இதற்கு பிறகு, சபரீசனிடம் பேசியபோதும் அவரும் 2 சீட்தான் என்று சொல்லி இருக்கிறார் போலும்.. அதனால் ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலைமையில் விசிக உள்ளது. அதிமுக கூட்டணியில் இணையலாம் என்றாலும் அங்கே பாமக உள்ளது.

 பேரறிவாளன்

பேரறிவாளன்

பாமக எங்கு இருக்கிறதோ, அங்கு கூட்டணியில் இருப்பதில்லை என்று விசிக ஒரு முடிவை வைத்துள்ளது.. அப்படி இருக்கும்போது, அதிமுகவில் விசிக இணையுமா என்று தெரியவில்லை.. ஒருவேளை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அதிமுக அரசு விடுதலை செய்தால், நிச்சயம் பாமகவை கண்டுகொள்ளாமல் அதிமுகவுடன் விசிக இணையலாம் என்கிறார்கள்.. அப்படி அதிமுகவில் விசிக இணைந்தாலும்கூட, திமுக 2 சீட் தான் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.

 3வது அணி

3வது அணி

அல்லது, அமமுக, கமல், தேமுதிக போன்றவைகளை முன்வைத்து 3வது அணியிலும் இணையலாம்.. இதில் அமமுக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டால் இந்த ஆப்ஷன் எடுபடாது.. அதேபோல, கமல் 3வது அணி அமைக்கவே இல்லை என்றாலும் இந்த ஆப்ஷன் எடுபடாது.. தேமுதிக கண்டிப்பாக பாஜக இருக்கும்பக்கம்தான் கூட்டணி வைக்கும் என்று தெரிகிறது.. அதனால், விசிக இன்னமும் ஒரு முடிவும் எடுக்காமல் உள்ளது..!

English summary
Will VCK join in ADMK or contest alone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X