சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அயோத்தி" கை கொடுத்துச்சு.. முருகன் கையில் "வேல்" அப்படி இருக்குமா.. பாஜக யோசிச்சு பார்க்கவே இல்லையா

வேல் யாத்திரை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் வேல் யாத்திரைக்கு பலதரப்பட்ட கட்சிகளின் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதையடுத்து, தமிழக பாஜக மேற்கொள்ளும் வேல் யாத்திரை பலன் தருமா என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

சமீபத்தில் வேல் ஊர்வலம் நடத்த போவதாக பாஜக அறிவித்துள்ளது.. திருமாவளவனின் பேச்சை முன்னிறுத்தி, இந்த யாத்திரையை அறிவித்துள்ளது. இதற்கு அதிமுக அரசு அனுமதி தருமா என்ற சந்தேகமும் உள்ள நிலையில், பல இந்த வேல் யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் அதிமுக சற்று காட்டமாகவே உள்ளது.. அதற்கு காரணம், இந்த யாத்திரை தொடர்பாக பாஜக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டது.

வாறாரு... "வாறாரு.... முருகன் வேல் கொண்டு..." என்ற பாட்டு ஆரம்பிக்கிறது.. மேலும், "பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா..." என்ற வரி அதில் உள்ளது.. அதுமட்டுமல்ல, எம்ஜிஆரின் போட்டோவும் அதன் பின்னணியில் இருக்கிறது. இதனால் அதிமுக தரப்பில் கொந்தளிப்பு உள்ளது.

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை... பங்கேற்க போகும் முக்கியப் பிரமுகர்கள் யார்.. யார்..? தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை... பங்கேற்க போகும் முக்கியப் பிரமுகர்கள் யார்.. யார்..?

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஆனால் இதற்கு முருகன் தரப்பில் சொல்லப்படும் விளக்கம், எம்ஜிஆர் நல்லது செய்தார்.. அதைபோலவே மோடியும் செய்கிறார்.. எம்ஜிஆருக்கு பெண்கள் மத்தியில் கிரேஸ் இருந்ததைபோலவே, இப்போது பிரதமர் மோடிக்கும் அமோக ஆதரவு இருக்கிறது" என்று விளக்கம் தந்தார்.

 எம்ஜிஆர் போட்டோ

எம்ஜிஆர் போட்டோ

இதுகுறித்து தீவிரமான அதிமுகவினர் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்ன கருத்து இதுதான்: "இவ்வளவு நாள் இல்லாமல், பாஜகவில் ஏன் எம்ஜிஆர் வர்றாரு? விஜய்காந்த், சரத்குமார், விஜய் போல, தேர்தல் சமயத்தில் எம்ஜிஆரை பயன்படுத்தி வாக்குகளை அள்ள பாஜகவும் நினைக்கிறது ஆச்சரியமாக இருக்கு.. எம்ஜிஆர் போட்டோவை அதிமுக மட்டும்தான் முழு உரிமை கொண்டாட முடியும்.

 காவி எம்ஜிஆர் சிலை

காவி எம்ஜிஆர் சிலை

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு யாரோ காவித்துண்டு போட்டாங்களே, அப்போதே இதை கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.. இன்னைக்கு எம்ஜிஆர் என்றால் நாளைக்கு பெரியார், அண்ணா, கருணாநிதியின் போட்டோவையும் பயன்படுத்துவார்களா?எம்ஜிஆரின் போட்டோவை போட்டு அரசியல் செய்யும் இதுபோன்ற மலிவான செயலை பாஜக நிறுத்தி கொள்ள வேண்டும்.

அமித்ஷா

அமித்ஷா

அவங்க அமித்ஷா, வாஜ்பாய் போட்டோவை பயன்படுத்தி கொள்ளட்டுமே, நாங்க எதுவும் சொல்ல போறோமா? அவங்க போட்டோவை போட்டால், நோட்டாதான் என்பது அவங்களுக்கு நல்லா தெரியும்.. அவங்க இனிமேல் எம்ஜிஆர் பக்கம் வரக்கூடாது என்றனர்.

 பாரத ரத்னா

பாரத ரத்னா

இதையடுத்து நடுநிலையாளர்கள் சிலரிடம் இதே கருத்தை முன்வைத்தோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது.. "இதுல பாஜக செய்யறது முழுசா தப்புன்னு சொல்லிட முடியாது.. எம்ஜிஆர் எல்லாருக்குமே சொந்தமானவர்.. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்.. அவர் ஒரு பாரத ரத்னா விருது பெற்ற தலைவரும்கூட.. பொதுவானர்.. பாஜக அவரை இதுவரை விமர்சித்ததும் இல்லை.. ஏன் என்றால், அவர் செய்த நல்ல விஷயத்தை அந்த கட்சியும் ஏற்று கொள்ளவே செய்தது.. ஒரு கட்சியின் நிறுவனர் போட்டோவை போடக்கூடாது என்றால், திமுகவின் நிறுவனர் யார்? தேனி எம்பி ரவீந்திரநாத் மட்டும் மோடியின் போட்டோவை வைத்திருக்கிறாரே?

 இந்துத்துவா

இந்துத்துவா

இந்த விவகாரத்தை திராவிடமா, இந்துத்துவா என்ற ரீதியில்தான் சென்று கொண்டிருக்கிறது.. அதேபோல, இருக்கின்ற தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு பாஜக எதற்காக எம்ஜிஆரை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது... இந்துத்துவ சிந்தாந்தத்திற்குள் எம்ஜிஆரை அடக்கிவிட முடியாது.. முதலில் இந்த வேல் யாத்திரையை எதற்காக நடத்த வேண்டும்.

 வேலுடன் முருகன்

வேலுடன் முருகன்

நாட்டில் எத்தனையோ பேருக்கு வேலை இல்லை.. ஒருவேளை வேல் யாத்திரை நடத்துவது அவர்களது கொள்கை என்றாலும், மதத்தை வைத்து பிரசாரம் செய்யக்கூடாது. எல். முருகன் கையில் வேலை பிடித்து கொண்டு போனால், படிப்பறிவில்லாத கிராமப்புற மக்கள் என்ன நினைப்பார்கள்? முருகன்தான் தங்களை காக்க வந்த கடவுள் என்று நினைக்க மாட்டார்களா? ஒரு தேசிய கட்சி அனைத்து மதத்துக்கும்தான் பொதுவாக இருக்க முடியும்.. இந்துக்களின் ஓட்டுக்களை மட்டும் வாங்க நினைத்தால், சிறுபான்மை மக்களிடன் ஓட்டுக்களை இழக்க நேரிடும்.. இது ஒரு மதவெறி ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான்" என்றனர்.

English summary
Will Vel Yathra help BJP to capture the power in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X