• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர்னு ஸ்டாலின் ஏன் "அங்கே" போனார் தெரியுமா.. எடப்பாடியை ஓவர்டேக் செய்து.. திமுக செம பிளான்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் ஒவ்வொரு நகர்வையும் திமுக மோப்பம் பிடித்துவிடுவதுடன், அதிமுகவின் பிளானையே அடித்து நொறுக்கி காலி செய்துவிடுகிறது.. அப்படித்தான் தேமுதிக விஷயத்திலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக பிரேமலதா தவமாய் தவம் கிடந்தார்.. கோரிக்கை விடுத்தார்.. பணிந்து பார்த்தார்.. சேலஞ்ச் செய்தார்.. கெஞ்சி பார்த்தார்.. மீறி பார்த்தார்.. எதுவுமே வேலைக்காகவில்லை.

கடைசிவரை தொங்கலில் விடவும், டிடிவி தினகரன் கதவை திறந்து தேமுதிகவை கூப்பிட்டு கொண்டார்.. ஒருபக்கம் திமுகவும் கூட்டணி வைக்க தயாராக இருந்தாலும், பிரேமலதாவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது.. அதனால் திமுக கூட்டணி கதவை அடைத்துவிட்டது.

தமிழ்நாடு வாகன ஓட்டிகளுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் எ.வ.வேலு.. என்ன தெரியுமா? தமிழ்நாடு வாகன ஓட்டிகளுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் எ.வ.வேலு.. என்ன தெரியுமா?

கூட்டணி

கூட்டணி

இப்படி ஒரு அதிருப்தியான சூழலில்தான் சுதீஷ் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், கூட்டணியிலிருந்து விலகுகிறோம்... இன்று தேமுதிகவினருக்கு தீபாவளி... போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்.. அதிமுக துணி ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்" என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது அதிமுக தலைமையை கொந்தளிக்கவும் வைத்தது.

பாமக

பாமக

இப்போது நிலைமையே தலைகீழ்.. அதாவது உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.. இதில் 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் வடமாவட்டங்களில் உள்ளது.. அதாவது பாமகவின் செல்வாக்கு நிறைந்த மாவட்டங்கள்.. அதனால் பாமக தெம்பாக உள்ளது.. இருந்தாலும் கடந்த முறை போல எதுவும் நடந்துவிடக்கூடாதே என்று அதிமுக வேறு முடிவு எடுத்துள்ளது.. அதன்படி மறுபடியும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்றுள்ளதாக தெரிகிறது.

திமுக

திமுக

ஆனால், சுதீஷ் அன்றைக்கு பேசிய பேச்சையே அடிப்படையாக முன்வைத்து, திமுக முந்திக் கொண்டதாம்.. காரணம், வரும் தேர்தலில் அசுர வெற்றியை பெற வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.. அதனால்தான், இதே வடமாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள தேமுதிகவை உள்ளே இழுத்து போட யோசனை வந்துள்ளது.. ஆனால், அதிமுக தேமுதிகவுடன் கூட்டணிக்கு யோசித்து வருவதாக தகவல் கசிந்ததுமே, டக்கென ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

கூட்டணி

கூட்டணி

கடந்த முறையே மாபெரும் வெற்றியை திமுக பெற்றிருக்க வேண்டியது.. தேமுதிக கூட்டணியில் இருந்திருந்தால், நிச்சயம் கூடுதலாக 4, 5 தொகுதிகளை பெற்றிருக்கலாம்.. ஆனால், அது நடக்கவில்லை.. இந்த முறையாவது தேமுதிக கூட்டணியில் இருந்தால், வடமாவட்டத்தை எளிதாக வளைக்கலாம் என்பதே திமுக தலைமையின் பிளானாம். அதனாலேயே எடப்பாடியை முந்திக் கொண்டு ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆதரவு

ஆதரவு

ஆனாலும், "தேமுதிக கூட்டணியில் இப்போ எதுக்காக? தேமுதிக இல்லாமலேயே திமுக வெற்றி பெற்றுவிடுமே.. திமுகவுக்கு இப்போது நல்ல பெயர் உள்ளது.. மேலும் அவ்வளவு செல்வாக்கு தேமுதிகவுக்கு இருந்தால், ஒரு இடத்தையாவது வெற்றி பெற்றிருக்குமே என்ற குரல்கள் வெடிக்க தொடங்கி உள்ளன... எனினும் ஸ்டாலினின் இந்த முயற்சிக்கு, வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

கூட்டணி

கூட்டணி

கடந்த மாதம், ஏராளமான தேமுதிகவினர், திமுகவில் இணைவதாக கூறப்பட்டது.. ஸ்டாலின்தான் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நண்பர் விஜயகாந்த் மனம் புண்படும்படி நடக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டிருந்தார். அந்த அளவுக்கு திமுக மீது தேமுதிகவினருக்கு நல்ல எண்ணம் இருக்கும்போது, நிச்சயம் களமிறங்கி கூட்டணி வெற்றிக்கு போராடுவார்கள் என்று நம்புகிறாராம்.. அதாவது கூட்டணி + ஒத்துழைப்பு சேர்ந்து கிடைக்குமாம்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!

English summary
Will Vijayakanth DMDK alliance with ADMK or DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X