சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டக்கென ரூட் மாறுதா.. உதயநிதி ஏன் இப்படி சொல்கிறார்.. அப்படின்னா "அந்த" கட்சி இங்கே "ஜம்ப்" ஆகிறதா?

திமுகவுடன் தேமுதிக இணைந்து தேர்தலை சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: செய்தியாளர்களிடம் உதயநிதி சொன்ன அந்த "சஸ்பென்ஸ்" பதில்தான், அரசியல் களத்தில் பல்வேறு வியூகங்களை தட்டி கிளப்பி கொண்டிருக்கிறது...!

திமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.. இறுதியாகவும் இல்லை.. ஒவ்வொரு கட்சியும் நிறைய சீட் கேட்டு தலைமையை நெருக்கி வருகிறார்கள்.. ஆனால், ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் படுமுனைப்பு காட்டி வருகிறது திமுக.

அதேசமயம், கூட்டணிகளை அனுசரித்து கொண்டு போகும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.. இதை தவிர, வேறு ஒரு சில கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதாகவும் பேச்சு எழுந்து வருகிறது.. கூட்டணி முடிவு செய்யப்படாததால்தான், இதுபோன்ற அனுமானங்களும், யூகங்களும் பரவி கொண்டிருக்கின்றன.

திமுக

திமுக

அந்த வகையில் முதலில் பாமக திமுக கூட்டணிக்கு வரும் என்று சொல்லப்பட்டது.. ஆனால், துரைமுருகன் மட்டுமே இதற்கு ஆர்வம் காட்டினாரே தவிர, கட்சி தலைமை அமைதி காக்கவே செய்தது.. கடைசியில் கூட்டணிக்கும் கதவடைக்கப்பட்டுவிட்டது.

 கமல் கூட்டணி

கமல் கூட்டணி

இதற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் திமுகவில் இணையும் என்று பரபரத்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இப்படி ஒரு தகவல் பரவுகிறது.. பிறகு திடீரென காணாமல் போகிறது.. மீண்டும் அதே தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறதே தவிர, கமலுடன் கூட்டணி இல்லவே இல்லை என்பதை உறுதியாக யாராலும் இதுவரை சொல்லவே முடியவில்லை.. அதேசமயம், கமலை இழக்கவும் தயாரில்லை என்றே தெரிகிறது.. இப்போதுவரை இதிலும் இழுபறி நீடிக்கிறது..

தேமுதிக

தேமுதிக

இதற்கு முன்னதாகவே, தேமுதிகவும் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.. இப்படி ஒரு எண்ணம் சுதீஷூக்கு இருந்ததாகவும், ஆனால், பிரேமலதா தான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டது.. அதற்கு காரணம், அதிமுக கூட்டணியிலேயே இருந்தால்தான், இந்த முறையாவது சுதீஷுக்கு ராஜ்ய சபா சீட் கேட்டு பெற முடியும் என்பதால்தான். அதனால்தான், திமுக கூட்டணியுடன் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியானது.

கேள்வி

கேள்வி

இந்நிலையில், திமுக கூட்டணி குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் நடைபெற்ற விழா ஒன்றில், உதயநிதி கலந்து கொண்டார்.. அப்போது அவரிடம் பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்... அதில்ஒன்றுதான் தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்படுமா? என்றனர்.. அதற்கு உதயநிதி, "இதுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார்" என்றார்.

தேமுதிக

தேமுதிக

இதே உதயநிதிதான், கடந்த மாதம் பிரச்சாரத்தில் பேசும்போது, "திமுக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை நாம் கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்காமல், இனி திமுகவே போட்டியிட வேண்டும்... அப்படிப் பார்த்தால் இந்த மாவட்டத்தில் தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் திமுகவே போட்டியிடும். இதை தலைவர் ஸ்டாலின் சொல்லுவதற்கு முன்பு நானே சொல்கிறேன்" என்று தன்னிச்சையாகவே சொன்னவர்.

 பிரேமலதா

பிரேமலதா

இந்நிலையில், தேமுதிக குறித்த கேள்விக்கு இல்லை என்று பதிலை சொல்லாமல், பூடகமாக சொல்லி உள்ளது, ஒருவேளை திமுகவுடன் தேமுதிக கூட்டணிக்கு வாயப்பு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி வருகிறது.. அல்லது யதேச்சையாகவே உதயநிதி இப்படி சொன்னாரா என்றும் தெரியவில்லை.. ஆனால், சசிகலாவை பிரேமலதா சந்திப்பதாக ஒரு தகவல் 4 நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.. அதிமுகவுடனும் கூட்டணி முடிவாகாமல்உள்ளது.

 தனித்து போட்டியா?

தனித்து போட்டியா?

ஒருவேளை திமுகவில் தேமுதிக இணைவதால், தேமுதிகவுக்கு முழு லாபம் என்றாலும், திமுகவுக்கும் ஓரளவு லாபம் என்று கணக்கு போடப்படுகிறதோ என்றும் தோன்றகிறது.. அதனால், அமமுகவுடன்தான் தேமுதிக கூட்டணியா? அல்லது அதிமுகவுடன்தான் கூட்டணியா? அல்லது திமுகவுடன் கூட்டணியா? அல்லது இது எதுவுமே இல்லாமல் தனியாக நிற்க போகிறதா? என்ற கேள்விகள் இன்னமும் தொத்தி நிற்கிறது..!

English summary
Will Vijayakanths DMDK join in DMK Soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X