சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தம்மா இருக்காங்களே.. பஸ் ஸ்டாண்டில் இவர் செய்த வேலை இருக்கே.. மிரண்ட சத்தியமங்கலம் போலீஸ்

சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற பெண்ணை போலீசார், விரட்டி விரட்டி சென்று பிடித்த சம்பவம் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

திருப்பூர் அங்கேரி பாளையத்தை சேர்ந்தவர் லலிதா... இவர் இன்று சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லலிதா பக்கத்தில் வந்து நின்றார்.

கொஞ்ச நேதம் அமைதியாக நின்வர், திடீரென லலிதாவின் பையை எடுத்து கொண்டு ஓடினார்.. அந்த பையில்தான் பர்ஸ் வைத்திருந்தார் லலிதா.

 Woman arrested for pickpocket case in Sathiyamangalam Bus Stand

இதை கண்டு ஷாக் ஆன லலிதா சத்தம் போடவே அக்கம்பக்கம் இருந்த பொதுமக்களும் பயணிகளும் ஓடிச்சென்று பையை திருடிய பெண்ணை துரத்தி பிடித்தனர்... மேலும் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்... சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பையை திருடிச் சென்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அவர் பெயர் ஜெய்த்தூன் என்கிற ஜெய்புன்னிசா என்று தெரியவந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகரைச் சேர்ந்தவராம்.. இதற்கு முன்பு பலமுறை சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் அடித்தது இவர்தானம்.. இவரைதான் வலைவீசி போலீசார் தேடி வந்தனர்.

"இங்கிலீஷில்தான் பேசுவியா.. தமிழ் வராதா".. ஒருமையில் திட்டிய டிஎஸ்பி.. விஷத்தை குடித்த திமுக டாக்டர்

அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ஒவ்வொருமுறையும் எஸ்கேப் ஆன ஜெய்புன்னிசா இந்த முறை வசமாக சிக்கி கொண்டார்.. இதைத்தொடர்ந்து லலிதா அளித்த புகாரின் பெயரில் சத்தியமங்கலம் போலீசார் ஜெய்புன்னிசா மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இறுதியில் கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

பெண் பயணியிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற வயதான பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Woman arrested for pickpocket case in Sathiyamangalam Bus Stand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X