சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண் நிறைய மை.. ஃபுல் மேக்கப்.. இவர்தான் மீனா.. கவர்ச்சி பேச்சு.. இப்ப கம்பி எண்ணிட்டிருக்கார்!

மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கவர்ச்சியாக பேசிய ஃபுல் மேக்-அப் மீனா கைது - வீடியோ

    சென்னை: ரெட் கலர் சுடிதார், கண் நிறைய மை என ஃபுல் மேக்-அப்பில் இருக்கிறாரே.. இவர்தான் மீனா.. கவர்ச்சியாக பேசியே தன் வலையில் விழ வைத்துவிடுவாராம்! இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!

    சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பல்கியா பேகம் 25, முகப்பேரை சேர்ந்தவர் பிரவீன 24, வேளச்சேரியை சேர்ந்தவர் சந்துரு 26, இவர்கள் 3 பேரும் வடக்கு கடற்கரை போலீசில் ஒரு புகார் அளித்தனர்.

    அதில், "நாங்கள் ஒரு ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, மண்ணடி பகுதிக்கு சென்றோம். அங்கிருந்த அந்த ஆபீசில் சாலிகிராமத்தை சேர்ந்த மீனா என்ற 32 வயது பெண்ணும், மண்ணடியை சேர்ந்த சங்கர் என்ற 35 வயது நபரும் இருந்தனர்.

    ஆதார் கார்டு

    ஆதார் கார்டு

    அவர்கள், "உங்களுக்கு லோன் வாங்கி தருகிறோம். உங்களிடம் உள்ள எல்லா ஆவணங்களும் எங்களிடம் தர வேண்டும்" என்றனர். இதனால் நாங்கள் எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை தந்தோம்.. அவர்களும் அதை வாங்கி கொண்டு, இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் பேங்க் கணக்கில் லோன் பணம் வந்துவிடும் என்றனர். ஆனால் பணம் வரவே இல்லை.

    ஆவணங்கள்

    ஆவணங்கள்

    இந்த சமயத்தில், கடை ஊழியர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். "டிவி, வாஷிங் மிஷின் வாங்கியதற்கான தவணை பணத்தை கட்டுமாறு சொன்னார்கள். அப்போதுதான், எங்களது ஆவணங்களை காண்பித்து கடைகளில் வாஷிங் மிஷின், பிரிட்ஜ், லேப்டாப், டிவி, ஐபோன் வாங்கி மோசடி செய்த விவகாரமே எங்களுக்கு தெரிய வந்தது. அதனால் நாங்கள் மண்ணடி ஆபீசுக்கு உடனே சென்றோம்.

    விசாரணை

    விசாரணை

    ஆனால், ஆபீஸ் இருந்தது. இப்படி லோன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று மோசடியும் செய்த 2 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டனர். இது சம்பந்தமாக விசாரணை நடந்தபோதுதான், மீனாவும், சங்கரும் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    புழல் சிறை

    புழல் சிறை

    இப்படி ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக கூறி ஆவணங்களை பெற்றுக் கொண்டு அதில் தவணை முறையில் இவர்கள் வீடு உபயோகப்பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இந்த ஆபீஸ் நடத்தியது மீனாதான்.. இவருக்கு உதவியாக இருந்தது சங்கராம்.. இப்படியே இருவரும் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இப்போது மீனாவும், சங்கரும் புழலில் உள்ளனர்.

    English summary
    young woman arrested with his assistant in online cheating case near chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X