சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூந்தமல்லி ரோட்டில்.. வெட்டிய திருடன்.. கையில் ரத்தம் கொட்டியும்.. விடாமல் பிடித்த தைரியலட்சுமி!

அரிவாள் வெட்டிலும் கொள்ளையனை பெண் ஒருவர் விரட்டி பிடித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பூந்தமல்லி ரோட்டில் தனலட்சுமியை பார்க்கணுமே.. தன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட திருடனை விடாமல் கெட்டியாக பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது!

காட்டுப்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம்போல வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் தனலட்சுமி. ஆனால் அவரை ரொம்ப நேரமாகவே யாரோ ஒருவர் பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கிறார்.

செயின்

செயின்

பிறகு திடீரென்று தனலட்சுமி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் தனலட்சுமி சுதாரித்து கொண்டார். அதனால் செயினை கெட்டியாக பிடித்து கொண்டார். விடவே இல்லை.. செயினை விடாமல் பிடித்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்த திருடனோ திடீரென பாக்கெட்டில் ரெடியாக வைத்திருந்த அரிவாளை எடுத்து தனலட்சுமியை கையில் ஒரே வெட்டு வெட்டினார்.

 ரத்தம் கொட்டியது

ரத்தம் கொட்டியது

இப்படி ஒரு அரிவாள் வெட்டினை எதிர்பார்க்காத தனலட்சுமி வலியால் கத்தினார். ரத்தம் கையில் கொட்டியது. ஆனாலும் தனலட்சுமி விடவில்லையே.. திருடனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார். அவர் அங்கிருந்து தப்ப முயன்றும் விடாமல் இறுக்கமாக பிடித்து கொண்டு திருடன், திருடன் என அந்த வலியிலும் அலறினார். அந்த சத்தத்தை கேட்டதும், அங்கிருந்த சிலர் ஓடிவந்து திருடனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

மிளகாய்பொடி

மிளகாய்பொடி

திருடன் பெயர் சிவக்குமார், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. பத்திரிகையாளர் அடையாள அட்டையை அவராகவே போலியாக தயாரித்து வைத்திருந்தார். தன்னுடைய பைக்கிலும் பிரஸ் என்று ஒட்டி வைத்துள்ளார். அந்த பைக்கில் கத்தி, மிளகாய்ப்பொடி என்று ஒரு களவாணிதனத்துக்கு தேவையான எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறார்.

தெருவிளக்கு

தெருவிளக்கு

தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருட்டு முயற்சி நடந்த பகுதியில் எப்பவுமே லைட் எரிந்து கொண்டுதான் இருக்குமாம். ஆனால் எப்போதெல்லாம் திருட்டு சம்பவம் நடக்கிறதோ அப்போதெல்லாம்தான் லைட் எரிவது இல்லையாம். இதை பற்றி நிறைய புகார் மின்வாரியத்துக்கு அளித்தும், எல்லாம் சரியாத்தான் இருக்கிறது, ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

விசாரணை

விசாரணை

கடைசியில் பார்த்தால், இந்த சிவக்குமார்தான் அந்த பகுதி லைட்டை ஆஃப் பண்ணி விடுவதாம். திருட்டுக்கு தயார் ஆகிவிட்டால் ஓடிபோய் லைட் ஆப் பண்ணிவிடுவாராம், இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது சிவக்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

English summary
Bold Woman Dhanalakshmi caught robbery man and handed over police in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X