சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பச்சை கலர் நைட்டி.. கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்தது.. விறு விறு விசாரணை!

கூவம் நதியில் பெண்ணின் சடலம் அடையாளம் தெரிந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    பச்சை கலர் நைட்டியில் கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்

    சென்னை: பச்சை கலர் நைட்டியில் கூவத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் அடையாளம் தெரிந்துள்ளது.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் ஒரு பெண்ணின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

    விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏணி வைத்து, அதன்மூலம் கயிறு கட்டி சடலத்தை மேலே இழுத்து தூக்கினர். 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண் பச்சை கலர் நைட்டி அணிந்திருந்தார் என்றும், கழுத்தில் பாசிமணி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    கூவம்

    கூவம்

    எனினும், அவரை கொலை செய்து வீசிவிட்டார்களா, அல்லது, இந்த பெண்ணே கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியாததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், அந்த பெண்ணின் சடலம் அடையாளம் தெரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மனநலம் குன்றியவர்

    மனநலம் குன்றியவர்

    சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரின் மனைவிதான் அவர் என்பதும் பெயர் விக்னேஸ்வரி என்றும் தெரியவந்துள்ளது. தந்தையை இழந்த விக்னேஸ்வரியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவராம். அதனால் தன்னுடைய பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்திருக்கிறார்.

    வலிப்பு நோய்

    வலிப்பு நோய்

    அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரை காதலித்து 6 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். விக்னேஸ்வரிக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருமாம். இதற்கு சிகிச்சை எடுத்து கொண்டாலும், வலிப்பு வரும்போதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வாராம்.

    கதிரவன்

    கதிரவன்

    ஒருவேளை இதன் காரணமாகத்தான் அவர் கூவத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. எனினும், அவரது கணவர் கதிரவனிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Police say they have identified the body of the woman who was rescued at the Coovum River in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X