• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"நான் யார் தெரியுமா" போலீசாரை காலால் எட்டி உதைத்து, ஆபாச அடாவடி செய்த காமினி.. ஆடிப்போன சென்னை

|

சென்னை: முழு குடி போதையில், போலீசாரை கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்க்கிறார் ஒரு பெண்.. ஒரு கட்டத்தில் போலீசாரை காலால் எட்டி உதைக்கிறார்.. சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வரும் இந்த சம்பவம் நடந்தது நமது சிங்காரச் சென்னையில்.. தமிழகத்தின் தலைநகரில்.. என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது.

  'நான் யார் தெரியுமா' குடிபோதையில் போலீசாரிடம் வம்பு செய்த பெண் - வீடியோ

  ஏதோ பின்தங்கிய ஒரு வட இந்திய பகுதியிலோ, பீகாரிலோ நடப்பதை போன்ற அநாகரீக செயல், சென்னையில் அரங்கேறி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

  இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. அதில் உள்ள அநாகரீக இளம் பெண் யார் என்பது பற்றி தற்போது தகவல் அம்பலமாகியுள்ளது.

  வாகன தணிக்கை

  வாகன தணிக்கை

  சென்னை, திருவான்மியூர், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலை.. வீக் என்ட் நேரத்தில் இரவு வேளைகளில் ரொம்பவே பிசியாக இருக்கும் பகுதி.. மது போதை ஆசாமிகள் அதி வேகத்தில் வாகனத்தை இயக்கிக் கொண்டு சிட்டாக பறக்கும் பகுதி இது. எனவேதான், வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியிருந்தனர் போக்குவரத்து போலீசார்.

  முழு போதை

  முழு போதை

  அப்போது, வோக்ஸ்வேகன் கார் ஒன்று தாறுமாறாக வேகமாக வந்துள்ளது. பார்த்ததுமே, "நீ ஊதவே வேண்டாம்" என்பதை போல புரிந்து விட்டது போலீசாருக்கு. உடனே தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்திற்குள் ஒரு இளம் ஆணும், பெண்ணும் இருந்தனர். உள்ளே இருப்பவர்கள் ஃபுல் போதையில் இருப்பது உடனே தெரிந்து கொண்டது போலீசாருக்கு.

  அநியாயத்திற்கு கெட்ட வார்த்தைகள்

  அநியாயத்திற்கு கெட்ட வார்த்தைகள்

  இருப்பினும், ஆதாரத்திற்காக மது குடித்துள்ளார்களா என்பதை அறிய, மிஷினை வைத்து, சோதனை நடத்த முயன்றனர். ஆனால் அப்போதுதான் ஆரம்பித்தது அந்த விபரீதம். அந்த நபருடன் வந்த பெண், காரை விட்டு கீழே இறங்கி போலீசாருடன் பயங்கரமாக வாக்குவாதம் செய்தார். வாயில் வந்து விழுந்ததெல்லாம் கெட்ட வார்த்தைகள். போலீசார் என்ற பயம் அவருக்கு இல்லை.

  காலால் எட்டி உதைத்த குடிகார பெண்

  காலால் எட்டி உதைத்த குடிகார பெண்

  அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற திருவான்மியூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் அங்கு வந்தார். அவர்கள் தலையிட்டும், பித்தம் தலைக்கேறியதை போல கத்திக் கொண்டிருந்தார் அந்த பெண். ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீசாரை நெஞ்சில் கை வைத்து அடித்தார். காலால் எட்டிவேறு உதைத்தார்.

  நான் யார் தெரியுமா, எங்க அப்பா யார் தெரியுமா என்று ஆவேச குரலில் கூச்சலிட்டார். நான் பிரஸ் என்று கூட சொன்னார்.

  பதிவான வீடியோ

  பதிவான வீடியோ

  இத்தனை ஆபாச மிரட்டலையும், அடாவடியையும் தங்கள் சட்டையில் பொருத்தியிருந்த கேமிராவில் போலீசார் பதிவு செய்தபடிதான் இருந்தனர். சிலர் செல்போன்களிலும் பதிவு செய்தனர். குடிகார பெண் என்னதான் அடாவடி செய்தாலும், போலீசார், ரொம்பவே அமைதி காத்தனர். சட்டப்படியாகவே அவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

  போலீசில் புகார்

  போலீசில் புகார்

  குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதன்பிறகு, நடந்த சம்பவம் பற்றி திருவான்மியூர் சட்டம்-ஒழுங்கு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் ஒரு புகார் பதிவு செய்தார். அதில், குடிபோதையில் வந்தவர்களின் காரை பறிமுதல் செய்தபோது, கார் சாவியை பறிக்க முயன்ற பெண் காமினி என்பவர் தன்னை எட்டி உதைத்ததாகவும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

  சினிமா உதவி இயக்குநர்

  சினிமா உதவி இயக்குநர்

  இதையடுத்து போலீசார், அடையாறு பகுதியைச் சேர்ந்த அந்த குடிகார பெண் காமினியை, காவல் நிலையம் வந்து விசாரணைக்கு ஆஜராக அழைப்புவிடுத்தனர். அவர் காவல் நிலையத்திற்கு தனது தாயுடன் வந்திருந்தார். விசாரணையின்போது, காமினி, சினிமா உதவி இயக்குநர் என்பது தெரியவந்தது. அவருடன் காரில் அன்றைய தினம் உடன் வந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியராம். விசாரணைக்கு ஒத்துழைக்காத காமினியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

   
   
   
  English summary
  A woman who fought with police in Chennai has been arrested after she kicked police officials.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X