சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி போகும்போதெல்லாம்.. பிடிச்சிருக்கிறதா சொல்லியே.. இம்சை செய்தார் ஸ்ரீ.. பெண் பிரமுகர் குமுறல்

Google Oneindia Tamil News

சென்னை: "ஸ்ரீ எனக்கு பாலியல் இம்சை தந்தார்.. டெல்லி போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவார்.. என்னை பிடிச்சிருக்கிறதா சொன்னார்.. கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னார்.. அவரால் நிறைய இம்சையை அனுபவிச்சேன்" என்று கோடம்பாக்கம் ஸ்ரீ மீது பாஜக பெண் பிரமுகர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவராக ஸ்ரீகந்தன் என்பவர் உள்ளார்.. இந்த கட்சியின் பொதுச்செயலாளர் நிரஞ்சனி.. தலைவர் மீது பொதுச்செயலாளர் இந்த பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்..

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சனி.. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் அவர் சொன்னதாவது:

மகளிர் அணி

மகளிர் அணி

"2016 முதல்ல இந்து மகா சபாவில் மகளிர் அணியில் இணைந்து வேலை பார்த்து வருகிறேன்.. ஸ்ரீ-க்கு இந்தி தெரியாது.. அதனால டெல்லி போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவார்.. இதற்கு பிறகு பொதுச்செயலாளராக தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்தார்.. ஒருநாள் என்னைப் பிடிச்சிருக்கிறதா சொன்னார்.. நான் முதலில் ஜோக்காக எடுத்துக்கொண்டேன். அப்புறம் என்னை கல்யாணம் செய்துக்கறதா சொன்னார்.

கல்யாணம்

கல்யாணம்

இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்கன்னு கண்டித்தேன். ஆனால் என்னை கல்யாணம் செய்துகொள்ளும் தகவலை என் சொந்தக்காரர்கள் எல்லாரிடம் சொன்னார்.. இது எனக்கு மனவேதனையை அளித்தது. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கினார்.. மிரட்டல் விடுத்தார்.. என் ராஜினாமா கடிதத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பினேன். மன்னித்துக்கொள்ளும்படி என்னிடம் கேட்டார்.

பணம்

பணம்

திரும்பவும் இந்து மகா சபாவில் சேரும்படி சொன்னார்.. ஆனால் நான் சம்மதிக்கவில்லை. நவம்பரில் என் சகோதரர் திருமணம் என்பதால் எனக்குத் தரவேண்டிய பணத்தை ஸ்ரீகந்தனிடம் கேட்டேன். ஆனால் டெல்லியில் இருப்பதால் வந்து தருகிறேன் என்றார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

என் சகோதர் கல்யாணத்துக்கு வந்தவர், அங்கும் என்னை பற்றி அவதூறாக எல்லோரிடமும் பேசினார்... அவரால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது.. நீதி வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததும், ஸ்ரீயை காணோம் என்கிறார்.. அதனால் அவரை தேடும் பணியும் நடக்கிறதாம்.

English summary
hindu maha saba general secretary complaint against kodambakkam sri in chennai commissioner office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X